english

எனக்கு ஆங்கிலத்தில்சரளமக பேச ஆசையாக இருக்கிரது என்னால் முடியவில்லை.பிலிஸ் எப்படி வலர்த்துக்கொள்வது? மற்றவர்கள் பேசுவது புரிகிரது.பதில் சொல்ல முடியவில்லை. பயம் வேற வருகிரது. இருப்பது யூ,ஸ்ல். டாக்டரிடம் கூட பேச முடியவில்லை. நான் பி.ஸ்.ஸி பி.ட்.மனதுக்கு கஸ்டமாக உள்ளது. பதில் தாருங்கள்.

அனு முதலில் தாழ்வுமனப்பான்மையை விட்டு விடுங்கள். ஆங்கிலம் பேசுவது என்பது பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாருங்கள். சரியோ தவறோ கணவரிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள். தொடர்ச்சியாக ஆங்கில சேனல்கள் பார்ப்பது, ஆங்கிலத்தில் பேசுவது என்று ஆங்கிலம் உள்ள சூழ்நிலையிலேயே இருந்தால் உங்களை அறியாமலேயே முதலில் ஆங்கிலத்தில் சிந்திக்க ஆரம்பிப்பீங்க தொடர்ந்து சரளமா ஆங்கிலத்தில் பேச ஆரம்பிப்பீங்க.

எப்படி இவ்வளவு உறுதியா சொல்றேன்னு பார்க்கறீங்களா? எனக்கு மலையாளம் சுத்தமாக தெரியாது. இப்போது தொடர்ச்சியாக மலையாள சேனல் பார்க்க ஆரம்பித்து நன்றாக வாசிக்கவும் பேசுவதை புரிந்து கொள்ளவும்
பேசவும் முடிகிறது. அது போல்தான் முன்பு சப் டைட்டிலோடு வரும் சீன மொழி நிகழ்ச்சிகளைப் பார்த்தே பல சீன வார்த்தைகளையும் வாக்கியங்களையும் கற்றுக் கொண்டேன். இப்போ டச் விட்டுப் போச்சு :(

இன்னும் பல டிப்ஸ் தோழிகள் யு எஸ் தோழிகள் சொல்லுவாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனு எப்படி இருக்கீங்க?முதலில், கவி சொன்னதுபோல தாழ்வுமனப்பான்மையை விடுங்கள்.இங்கு வெளிநாட்டவரிடம் பேசும்போது அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனியுங்கள்.கவி சொன்னதுபோல் டிவி பாருங்கள்.பேசும்போது இங்கிலீஷ் பற்றி யோசிக்கவொ தப்போ என்று தயங்கவோ செய்யாதீர்கள்.பதிலை மட்டும் யோசித்து ஆங்கிலத்தில் பேசுங்கள்.கவி சொன்னது போல் வீட்டிலும் ஆங்கிலத்தில் பேசுங்கள்.ஆங்கிலமும், ஒரு மொழிதானே.சீக்கிரம் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவீர்கள். கவலைப்படாதீர்கள்.

இந்த link இங்கு குடுக்கலாமா தெரியவில்லை.
http://tamiltospokenenglish.blogspot.com/
இதில் போய் பாருங்கள். ஆங்கில பேச்சு பயிற்ச்சியும் இருக்கிறது.

அனு இந்த link use பண்ணுக...

http://www.learnamericanenglishonline.com/index.html

It is very useful to u...try it once..

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

அனு, நீங்க தொடர்ந்து நியூஸ் சேனல்களை பாருங்க. நாளடைவில் உங்களுக்கு இந்த ஆக்ஸன்ட் முதல் கொண்டு சரளமாக பேச வரும். சில இடங்களில் இலவசமாக கூட ஆங்கிலம் சொல்லித் தருவார்கள்.(சர்ச், ஸ்கூல் போன்ற இடங்களில்) விசாரித்துப் பாருங்கள். இல்லன்னா, இந்த டிவி மெத்தட்டை பின்பற்றினா கூட நல்ல முன்னேற்றம் தெரியும். தோழிகள் குடுத்து இருக்கும் லின்க்கையும் பாருங்க.

எனக்கு தாழ்வுமனப்பன்மை இருக்கிரது உண்மைதான்.உங்கள் பதிவின் படி செல்லுகிறென்.எனக்கு ஆங்கிலத்தை வளர்த்து கொள்ளாலம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. உங்கள் அனைவருக்கும் நன்றி. சிரமம் பர்க்கமல் பதில் கொடுத்தற்கு மிகவும் நன்றீ. மிகுந்த நன்றியுடன் அனு

Dear Friends,
Please say Any One Correctly Differentiate are u Learn English? and Do u Learn english?
What is the Differ B/w Are u and Do U?

அஞ்சலி

மேலும் சில பதிவுகள்