பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க இங்கே வாருங்கள் - 2

அனைத்து அறுசுவை தோழிகள், தோழர்கள், சகோதர, சகோதரிகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்கலாம்.எல்லாரும் இங்கே தொடருங்கள். :))

எல்லாரும் இங்கே தொடருங்கள். இப்போ இருக்கும் பிறந்தநாள் வாழ்த்து இழை 175 பதிவுகளை கடந்துவிட்டதால் இந்த இழையை ஆரம்பித்து விட்டேன். அடுத்த பிறந்த நாளை இங்கே தெரிவித்து வாழ்த்து தெரிவியுங்கள்.

அன்புடன்
பவித்ரா


HAPPY BIRTH DAY 2 U !(2)

HAPPY BIRTH DAY DEAR காந்தி தாத்தா!

HAPPY BIRTH DAY 2 U!

பொக்கை வாய் சிரிப்பால் பூலோகத்தை மயக்கி

பொறுமையாய் எங்கள் பாரத தாய் தன்னை

பக்குவமாய் விடுவித்து பாரெல்லாம் போற்ற செய்த

பாசமிகு தாத்தாவே பார் இதோ என் பாட்டு!

அஹிம்சை வழியில் நடந்த எங்கள்

அகிலத்திற்கு கிடைத்த அருமை பொக்கிஷமே!

அன்புருவே அழகான திரு வுருவே!

( இதுக்கு மேல நேக்கு பாட தெர்ல்லை)ஹிஹிஹிஹி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தவமணி அண்ணாவின் தவப்புதல்வனுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பொன்னி

பொன்னி நேத்தி தான் அண்ணா பையனுக்கு பிறந்தநாள். இருந்தாலும் மறக்காம உங்க வாழ்த்த பதிவு செஞ்சிட்டீங்க.

எல்லாரும் இப்படி நம்ம காந்தி தாத்தாவை மறதுட்டேளே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ரேணு எனக்கு மெயில் பண்ணிருந்தாங்க, ஒருவரின் பெயரிட்டு அவருக்கு பிறந்தநாள் என்று மட்டும், எனக்கு அது யார் என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் அவர் நீடூழி வாழ அவருக்கு எங்களின் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

ரேனுகாக்காவின் உறவினருக்கு வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் பவித்ரா அவர்களின் பதிவை பார்த்தேன். வாழ்த்துவதற்கு பெயர் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, வாழ்த்தலாம். ரேனுகாவின் உறவினர் பிறந்த நாளில் அவர் வாழ்வில் நலமும் வளமும் பெற்று வாழ மனதார வாழ்த்துகிறேன்.

அன்புடன்
THAVAM

பவி. பேரு.. பிரவீன் என்று இருந்ததா.. அப்படி என்றால் அது அவரின் மகன் பெயர். எதுவாகினும் பரவாயில்லை. அண்ணா சொன்ன மாதிரி அவர் யாராகினும்.. அவருக்கு எங்களது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதாக்கா நன்றி, அது கணவரா இல்லை மகனா என்று தெரியவில்லை. பிறந்த நாள் கொண்டாடும் ரேணுவின் மகனுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

ரேணுவின் செல்ல மகனுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்