ரோஸ்மெரி

ஹாய் தோழிகளே எல்லோரும் எப்படி இருக்கீங்க?ரோஸ்மெரி எந்த மாதிரியான சமயலுக்கு பயன்படுத்தலாம்.

rosemary இலைகளை சாலடுக்கு பயன்படுத்துவார்கள்..பார்க்கா அழகாகவும் சுவையாகவும் இருக்கும்...பொடியா கேக்க்குறீங்க

ரொட்டி, சப்பாத்தி, ப்ரெட்டுக்கு சேர்த்துப் பாருங்கள், சுவையாக இருக்கும்.

ரோஸ்மெரியை ஊறவைத்த நீரில் ஊற்றிய தேநீர் புத்துணர்ச்சி தரும்.

முழுவதாக மீன் க்ரில் செய்யும் போது வயிற்றின் உள் உரித்த பூண்டும் ரோஸ்மெரி நெட்டுக்களும் நிரப்பி க்ரில் செய்யலாம். க்ரில்ட் இறால் / கார்லிக் இறால் செய்யும் போதும் சேர்க்கலாம்.

நான் உலரவைத்துக் தூளாக்கி வைத்து கட்லட்டுக்குச் சேர்ப்பேன். சாதாரணமாக மாமிச உணவுகள் எல்லாவற்றோடும் சேர்ந்து போகும். டின்மீனில் சமைக்கும் அனைத்து உணவுகளோடும் சேர்க்கலாம்.

வேறு.. காரட்கறி, உப்புமா, குஸ் குஸ், ஸ்பைசி ஸ்கோன்ஸ், பேக்ட் பொட்டேட்டோஸ், கீஷ். புரியாணியில் சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

ரோஸ்மேரி வைத்து எவ்வளவு செய்யாலாமா? நான் இட்டாலியன் பூட்ஸ் மற்றும் சாலட் dressing க்கு தான் உஸ் பண்ணுவேன். டிப்சுக்கு நன்றி இமா மேடம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில டிப்ஸ் - பிடிவாதமாகக் கையில் தொற்றிக்கொண்டு இருக்கும் சமையல் வாடைகள் போக வேண்டுமானால் ஒரு நெட்டு இலையை உருவி உள்ளங்கையில் வைத்துக் கசக்கி விரல் இடைவெளிகளுள்ளும் பூசிக் கொள்ளுங்கள்.

தரையோடு / தெருவோடு இருக்கும் கிளைகளிலிருந்து இலைகளைச் சமையலுக்கு எடுக்க வேண்டாம்.

சமையலில் சேர்க்குமுன் இலைகளை வெந்நீரில் கழுவிவிட்டுச் சேர்த்தால் வாசனை கூடுதலாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்