பேபி க்ளிப்ஸ்

தேதி: October 1, 2010

5
Average: 4.2 (12 votes)

 

சிறிய அகலம் கொண்ட ரிப்பன்கள்
குழந்தைகளுக்கான க்ளிப்கள் (க்ளிப் ஆன்/ அலிகெட்டர் க்ளிப்ஸ்)
பேப்பரிக் ஒட்டும் பசை
கத்திரிக்கோல்
லைட்டர்/மெழுகு/விளக்கு

 

பேபி க்ளிப்ஸ் செய்ய மேற்சொன்ன பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
சிறிய க்ளிப்பை எடுத்து ரிப்பனால் இரண்டு பக்கமும் அளந்து முழு நீளத்தை விட கொஞ்சம் குறைவாக வெட்டிக்கொள்ளவும். இந்த செய்முறை அலிகேட்டர் க்ளிப் எனப்படும் க்ளிப் வகைக்கு லைனிங் கொடுப்பதற்கு.
அளந்த ரிப்பனை வெட்டி அதன் இரு ஓரங்களையும் லைட்டரால் (கருகாமல்) சீல் செய்யவும். இப்படி செய்வதால் நூல் வெளியே வரமாலிருக்கும்.
ஃபோ செய்ய உபயோகப்படுத்தும் ரிப்பனையும் இப்படி சீல் செய்ய வேண்டும்.
பிறகு ரிப்பனின் உள் பகுதியில் பசையிட்டு, க்ளிப்பின் மேல் பாகம் முழுவதும் ஒட்டி பின்புறமாக எடுத்து அழுத்தி வைக்கவும். இது லைனிங் முறை.
இப்போது ஃபோ செய்ய வேண்டும். இதற்கு க்ளிப்பின் நீளத்தில் இரண்டு மடங்கு ரிப்பனை எடுத்து அதனை இரண்டாக மடிக்கவும். இவ்வாறு செய்யும் போது அதன் நடுவில் ஒரு கோடு விழும்.
கோடு விழுந்த இடத்தின் நடுவில் இருபுறமும் பசையிட்டு அதன் இரு முனைகளையும் எடுத்து பசை தடவிய இடத்தில் ஒட்டினால் முதல் ஃபோ ரெடி.
இரண்டாவது ஃபோ செய்ய முதல் ஃபோவிற்கு எடுத்த ரிப்பனின் நீளத்தைவிட ஒரு இன்ச் அளவு குறைவாக எடுத்து முதல் ஃபோ செய்தவாறு இரண்டாவது ஃபோவும் ஒட்ட வேண்டும்.
இரண்டு ஃபோக்களும் தனி தனியே ஒட்டிய பின், இரண்டையும் ஒன்றின் மேல் ஒன்றாகவோ இல்லையென்றால் ஒரு சிறிய கோணத்திலோ ஒட்டலாம்.
இதன் பின் ரிப்பனின் அகலத்தில் இரண்டு மடங்கு ரிப்பன் வெட்டி அதனை சீல் செய்த பின், முன்பு ஒட்டியிருக்கும் இரண்டு ஃபோக்களையும் சேர்த்த மாதிரி இந்த சிறிய ரிப்பனை ஒட்டவும்.
இப்போது உங்கள் ஃபோ ரெடி மற்றும் லைனிங் கொடுத்த க்ளிப்பும் ரெடி.
க்ளிப்பின் நடுவில் நீங்கள் தயார் செய்த ஃபோக்களை மறுபடியும் பசை வைத்து ஒட்டவும். இப்போது அழகான குழந்தைகள் மற்றும் குட்டி பெண்களுக்கான ஃபோ வைத்த க்ளிப் ரெடி.
இதில் ரிப்பன் செலவு ஒரு டாலர் க்ளிப்கள் (20 என்னம்) 2 டாலர். இதே க்ளிப்களை பெரிய கடையில் வாங்கினால் ஒரு ஜோடி 2 முதல் 3 டாலர் வரை ஆகும். இதே முறையில் லைனிங் வைக்காமல் பூ வைக்கும் ஹேர்பின்னிலும் செய்யலாம். அறுசுவை உறுப்பினரான திருமதி. இலா அவர்கள் அனைவரும் எளிதாக செய்யக்கூடிய பேபி க்ளிப்ஸ் செய்முறையை விளக்கப்படங்களுடன் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

super and easy to do i like it very much

i love ganesh babu

ரொம்ப அழகா இருக்கு. எப்படி இந்த யோசனையெல்லாம் உங்களுக்கு வருதோ. very nice continue.

shagila

க்ளிப்கள் அழகு இலா. பாராட்டுக்கள். ;)
அடுத்து என்ன?

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

என் பொண்ணு தினமும் ஒரு க்ளிப் தொலைத்துவிட்டு வருவாள். நீங்கள் சொல்வது போல் அதெல்லாம் ஒரு ஜோடிக்கு 2-3 டாலர்ஸ். இனிமே இதை பார்த்து நானே செய்து விடுவேன். மிக்க நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இலா,
க்ளிப்ஸ் அழகா பண்ணியிருக்கிங்க! முதல் கைவினை குறிப்பா?! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

உமா! உண்மையிலே ரொம்ப ஈசிங்க. கைல கம் ஒட்டாம இருக்கரவரைக்கும் :))

ஷாலிகா! இது இன்டெர்னெட் பாத்து கத்துகிட்டது தாங்க !

இமா! நன்றி இமா! அடுத்து எது ஈசியா இருக்குன்னு தேடிட்டு இருக்கேன் :)) அதுவரைக்கும் "கை நாட்டு"வச்சி படம் போட போறேன் :)

லாவண்யா! பிரெண்ட் குழந்தைக்கு நானே ஜிம்போரி/சில்ரன்ஸ் பிளேஸ்ல எல்லாம் டிஸ்கவுண்டட் சேலிலே 2 டாலர் கொடுத்து இருக்கேன்... செய்து பாருங்க. ரிப்பன் ( டார்கெட்) கிளிப்ஸ்( மைக்கேல்ஸ்). வீட்டில உபயோகப்படுத்தாத பிளாஸ்டிக் பூக்களின் அடிக்காம்பை வெட்டி விட்டு கிளிப்ல ஒட்டினால் அழகா இருக்கும் !!!

சுஸ்ரீ! ஆஹ்! நானே உங்க மெயிலுக்கு பதில் போட நினைச்சேன் :)
ஆமாம் ! இதுவே முதல் கைவினை குறிப்பு !நன்றி!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலாவின் முதல் கைவினைக் குறிப்பு. ரொம்ப ஈசியா அழகா இருக்கு. என் மருமகளோடு உட்கார்ந்து செய்துவிட வேண்டியதுதான்!

இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் இலா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Looking very nice. I am going to try this very soon.
Vaany

கவி ! மருமகளுக்கு செய்து கொடுங்க! எல்லா கலரிலும் :))

வாணி! நன்றி!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாழ்த்துக்கள் இலா
ரொம்ப சூப்பர் முதல் முதல் உங்கள் கைவினை குறிப்பு எல்லோரையும் கவரும் , குழந்தைகளுக்கான கிளீப்/

ஜலீலா

Jaleelakamal

இலா மேடம் நல்லா இருக்கு க்ளிப் செய்முறை ரொம்ப ஈஸியாவும் இருக்கும் நானும் ரொம்ப கஷ்டபட்டு செய்ற மாதிரி உள்ள செய்முறைலாம் செய்ய மாட்டேன். ஏதாவது ஈஸியா இருந்தா தான் செய்வேன். இத நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

ஹாய் இலா அழகான, ஈஸியான க்ளிப். நீங்க பயன்படுத்திய க்ளிப் இங்குள்ள கடைகளில் கிடைக்குமா தெரியல விசாரிச்சு பார்க்கனும். ஹேர்பின்னல வைச்சுதான் செய்ய போறேன். எங்க வீட்டுல குட்டீஸ்கு பஞ்சமில்ல நிறைய பேர் இலா. எல்லா குட்டீஸ்க்கு தீபாவளிக்கு ட்ரெஸ்க்கு மேட்சா இந்த க்ளிப் செஞ்சு கொடுக்கனும். இதுமாதிரி ஈஸியாவே சொல்லி கொடுங்க.

யாரது... நம்ம இலா'வா??!!! எப்போ எப்போ எப்போல இருந்து இப்படிலாம் செய்ய ஆரம்பிச்சீங்க???!!! ;) இதுக்காகவே முதல் வேலையா இந்த க்ளிப் நான் யாழினி'கு செய்துடறேன். சீக்கிரமே புகைப்படம் அனுப்பிடறேன் இலா. :) கலக்கலா இருக்கு... சிம்பில், சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இலா, அழகா இருக்கு! இன்னும் பல குறிப்புகள் கொடுங்க, வாழ்த்துக்கள். கவி'கு மருமகளா ஒண்னும் புரியலையே!!

அன்புடன்
பவித்ரா

பின்னுட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!
செய்து பாத்து சொல்லுங்க.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta