இல்லத்தரசிகளின் ’ஸ்பெசல்’ அரட்டை! - 54 -

இன்னிக்கு அனேகரது ஆபிஸ் லீவுங்கறதுனால அரட்டையக் கிடப்பிலே போட்டாச்சு. தேடி கஷ்டப்பட்டு கொண்டு வந்திருக்கேன். இன்றும் நாளையும் இல்லத்தரசிகளுக்கானது. இனிதாய், பயனுள்ளதாய் அரட்டை அடிக்க வரவேட்கிறேன், வருக! வருக!......... (வருங்கால இல்லத்தரசிகளும் வரலாம்)

சுவையா மெல்ல மொறு மொறு அவல் பொரியும், சூடான காஃபியும் !? காத்துக்கிடக்கு எங்க யாரையும் காணோம்;)

Don't Worry Be Happy.

ஜெயா இல்லத்தரசிதான் வரனுமா. அப்ப இன்னும் ஒரு வருஷம் ஆகும். இந்த அவல் பொரியும், காபியும் அரட்டைல கொடுங்க நாங்க வாங்கி குடிச்சுக்குறேன்:-)

வாங்க வாங்க வருங்கால இல்லத்தரசிகளுக்கும் கிடைக்கு;-)

Don't Worry Be Happy.

ஹாய் ஜெயா நீங்க கூப்பிட்டது நான் ஓடோடி வரேன். பாருங்க மூச்சு வாங்குது. இன்னக்கி என்ன யாரையுமே காணும். நம்ம தான் வந்துருக்கோம்.

வினோ நீங்களும் வந்துருக்கீங்ளா? வருங்கால இல்லத்தரசிக்கூட வரலாம்னு ஜெயா சொல்லிட்டாங்கள்ள அப்பறம் என்ன வாங்க

சரியா சொல்லையே கிடைக்கு;-) காபியும், பொரியும் கொடுப்போமா, வேணாமானு யோசிக்கிற மாதிரில இருக்கு. காந்தி ஜெயந்திக்காக எல்லோரும் நல்ல பிள்ளையா இன்னைக்காவது அரட்டை அடிக்கமா நெட்பக்கம் போக வேண்டாமுனு இருக்காங்களோ, என்னவோ ஜெயா. எல்லோரும் சீக்கிரம் வாங்க. ஸ்பெஷல் அரட்டைக்கு லேட்டா வந்தா ஆறிபோன காபியும், சவுத்து போன பொரியும் தான் கிடைக்கும்.

ஹி ஹி அவசரத்துல அடிச்சுட்டேன்பா மன்னிச்சு...
காந்தி ஜெயந்திக்கு வேர கடைதான் லீவு, அரட்டைக்கடைக்கு எப்பவுமே லீவு இல்லையே;)

Don't Worry Be Happy.

கெளரி நான்தான் காலையிலேர்ந்து சுத்திக்கிட்டு இருக்கேனே. கெளரி அரட்டைக்கு ஒடிவந்துனால மூச்சு வாங்குது சொன்னீங்களே அப்படியே குனிஞ்சு வாயால மூச்சுவிடுங்க. மூச்சு வாங்குறது நின்னுட்டும் அரட்டைக்கு வந்துனால ஒரு டிப்ஸ்.

மொதல்ல உக்காருங்க, இந்தாங்க தண்ணிகுடிங்க ..............
இன்னிக்கும் நாலைக்கும் இதுலேயே அரட்டை அடிப்போம்னு நினைக்கிறேன். ஆபிஸ் லீவு இல்லையா அவ்வளவா யாரும் வரமாட்டாங்க;)

Don't Worry Be Happy.

அதான் ஜெயா இன்னைக்கு நம்ம மூணு பேரும் டீ சாரி காபி கொடுத்து இருக்கறதுனால காபி ஆத்திக்கிட்டு இருக்கோம். ஜெயா, கெளரி தவிர மற்ற இல்லத்தரசி ஒருத்தவங்க கூட வரலையே. இல்லத்தரசி சங்கத்துக்கே அவமானம் போங்க.

ச்சே ச்சே அப்படியெல்லாம் நினைச்சிறாதீங்க அவங்க எல்லாருக்கும் பொதுவாதான் நான் வந்திருக்கேன்;) ( இல்லத்தரசிகளே அமைதி அமைதி ).

கௌரி எங்கப்பா போயிட்டீங்க அவலும் காஃபியும் கூட உங்களுக்காக காத்திட்டு இருக்கு;)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்