மூச்சு அடைப்பை சரி செய்ய உதவுங்கள் தோழிகளே.

அன்பு தோழிகள் அனைவரும் நலமா?அறுசுவையே என் கண்ணுக்கு ஏனோ புதுசா தெரியுது.அது ஏன் என்றே தெரியல.கடந்த 4 மாதத்தில் புது தோழிகள் அதிகம் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி,

1.எனக்கு இப்ப தான் எழாவது மாதம் தொடங்குது.ஆனால் கடைசி மாதத்தில் இருப்பது போல இருக்கு.என்னால் மூச்சு விடவே முடிவதில்லை.ரெம்ப சிரமமாக இருக்கு.இது எதனால்?
மூன்றாவது மாதத்தில் இருந்து இப்படி தான் இருக்கு.அப்ப கம்மியா எப்பவாது இருந்தது.ஆனால் 6 வது மாதத்தில் இருந்து கொஞ்சம் அதிகமா இருக்கு.டாக்டர் கிட்ட சொன்னா அப்படி தான் இருக்கும் இன்னும் ஒரு மாசம் போனா கொஞ்சம் மூச்சுவிட பிரியா இருக்கும் என்று சொல்றாங்க.இதை தவிர வேறு ஒரு பதிலையும் கானாம்.

2.சாப்பாடு விஷயம் அதைவிட மோசமா போகுது.2 இட்லியை உள்ள தள்ளுவதே பெரிய பாடா இருக்கு.திரும்ப கொஞ்சம் நேரம் கழித்து சாப்பிடவும் முடிவதில்லை.மூச்ச அடைப்பு வருகிறது.இதுல ஜூஸ்,பழங்கள் பால் இதுக்குன்னு வேற கொஞ்சம் ஒதுக்க வேண்டியதா இருக்கு,போன தடவை ஒரு கிலோ குறைச்சிருக்கேன்.டாக்டர் ஒழுங்கா சாப்பிட சொல்றாங்க.ஆனால் என்னால் சுத்தமா முடியல.

3. அடுத்த பிராப்பளம் என்னன்னே எனக்கு சொல்ல தெரியல.இது அதை விட கொடுமையா இருக்கு.சில நேரம் உடல் முழுக்க துடிக்குது.உடம்பில் எங்க கை வைச்சாலும் துடிப்பை உணரமுடியுது.இது சில நேரங்களில் இருக்கு.இப்படி இருக்கும் போது தலையில் இருந்து கால் வரைக்கும் ஒரு வித படபடப்பு போல இருக்கு.அதிலும் தலையில் என்னவோ அடிப்பது போல இருக்கு.சின்ன சின்ன சத்தம் கூட என் காதில் கேட்க முடியல.தலைகுள்ள அப்படி ஒரு படபடப்பு இருக்கு.இது எதனாலன்னு யாராவது சொன்னா நல்லா இருக்கும்.நை தூங்கும் போது கூட திடீர்ன்னு இது போல் இருக்கு.தினமும் ஒரு முறையாவது இது போல இருக்கு.

4. தூக்கமே ஒரு பெரிய பிரச்சனையா இருக்கு.படுக்கனும் என்று நினைத்தாலே கஷ்டமா இருக்கு.சில சமயம் இடது பக்கம் படுத்தால் நல்லா இருக்கு,சில டைம் வலது பக்கம்.ஆனால் சில நேரம் இரண்டு சைடு படுக்க முடியல.காரணம் சுத்தமா மூச்சு விட முடியல.அப்ப நேர மல்லாக்க படுத்தா நல்லா இருக்கு.ஆனால் 7 மாதத்துக்கு பிறகு அப்படி படுக்க கூடாது இல்லையா இதுக்கு என்ன செய்ய?நான் தூங்கியே ஒரு வாரம் ஆகுது.

5. நடப்பது அடுத்த தலைவலி.10 நிமிடம் முழுசா நடப்பதே பெரிய விஷயமா இருக்கு ,நடந்தாலே மூச்சடைக்குது.அதுக்கு மேலே நடக்கமுடியல.வேர்த்தாலும் பிரப்பளமா இருக்கு,வேர்த்தால் படபட்ப்பு வருது.சில சமயம் கண்ணெல்லாம் இருண்டு மயக்கம் வருது.பிபி எல்லாம் செக் பண்ணுனா நார்மலா தான் இருக்கு.

இன்னும் முடிஞ்சா சொல்லிகிட்டே இருப்பேன்.ஆனால் இதுக்கு மேல் முடியல.இது டைப் செய்யவே ஒரு மணி நேரம் ஆயிடுச்சு.முதல் டைம் ஒரு சின்ன பிராப்பளம் கூட இல்லை.ஆனால் இரண்டாவது ஆரம்ப்பத்தில் இருந்தே ரெம்ப படுத்துது.

தோழிகள் முடியும் போது பதில் போடுங்க.ஆனால் தயவு செய்து யாரும் கொஞ்சமா சாப்பிடு,பழங்கள் சாப்பிடு அடிக்கடி நட இது போல நார்மல் அட்வைஸ் தராதீங்க.எனக்கு அழுகையே வந்திடும்.என்னால் நார்மலா இருக்க முடியாமல் தான் இந்த பதிவே.டாக்டர் கிட்ட கேளுங்க என்று சொல்லாதீங்க.அங்க கேட்டு ஒன்னும் சொல்லல.அதான் இங்க கேட்கறென்

தோழிகள் முடியும் போது பதில் போடுங்க.ஆனால் தயவு செய்து யாரும் கொஞ்சமா சாப்பிடு,பழங்கள் சாப்பிடு அடிக்கடி நட இது போல நார்மல் அட்வைஸ் தராதீங்க.எனக்கு அழுகையே வந்திடும்.என்னால் நார்மலா இருக்க முடியாமல் தான் இந்த பதிவே.டாக்டர் கிட்ட கேளுங்க என்று சொல்லாதீங்க.அங்க கேட்டு ஒன்னும் சொல்லல.அதான் இங்க கேட்கறென்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணு,

;) நாளாச்சு பேசி. ;)
//போன தடவை ஒரு கிலோ குறைச்சிருக்கேன்.// இப்ப இது எதுக்கு குறைக்கிறீங்க!!

//டாக்டர் ஒழுங்கா சாப்பிட சொல்றாங்க.// அதேதான் சொல்ல நினைக்கிறேன். சாப்பிடுங்க ஒழுங்கா. சாப்பிட முடியாததை விட்டு, சாப்பிடக் கூடியதை முதல்ல சாப்பிடுங்க. பிறகு மெதுவா பலன்ஸ்டா சாப்பிடப் பாருங்க. எதையும் ஓவரா பண்ண வேணாம்.

கஷ்டம்தான். முதல்ல யோசிக்கிறது வேணாம். சிலருக்கு இப்பிடி எல்லாம் ஆகும். சரியாகிரும். யோசிச்சுட்டு இருந்தா தூக்கம் எப்பிடி வரும்! இப்பிடி துக்கம்தான் வரும். ;)) சரியாகிரும்.

குட் லக்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இப்படி இருக்கும் ரேனு

ஆனால் கடைசி வாரங்கள் கொஞ்சம் சரியாகிடும்.ரொம்ப கஷ்டமா இருக்குன்னா ப்லட் டெஸ்ட் பண்ணி பாக்க சொல்லுங்களேன்..7 மாசம் தானே பேசாம ஹாஸ்பிடல் மாத்தி பாருங்க ரேனு

ரேணு ஊருக்கு தானே போக போறேன்னு சொன்னீங்க.ஒன்றும் கவலை பட வேண்டாம்
மொபைலில் இருந்த உங்கள் நம்பர் சிம் மாற்றியதில் அழிந்து விட்டது, மறு படி மெசேஜ் கொடுங்க பேசுகிறேன்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் இமா நலமா?செபா அம்மா நலமா?பேசி நாள் தான் ஆச்சு.

நான் என்ன ஆசைபட்டா எடை குறைஞ்சேன்,குறையட்டும் என்று நினைத்த போது ஏறுது.ஏற வேண்டிய நேரத்தில் இறங்குது.:)நான் என்ன சாப்பிடமாட்டேன் என்றா சொல்றேன் ஆனால் முடியலையே.நாலுவா எதை உள்ள தள்ளினாலும் மூச்சை அடைக்குது.அதான் பிராப்பளமா இருக்கு.
நான் இப்பெல்லாம் யோசிப்பதே இல்லை இமா.:)))படுத்தவுடன் தூங்க ஆசை.ஒரு பக்கமும் 2 நிமிடம் கூட படுக்க முடிவதில்லை.

ஆரம்பத்தில் வாமிடிங் அதிகம் இருந்து எப்படா ஊருக்கு போவோம் என்று 2 மாதம் நாள் என்னிகிட்டு இருந்தேன்.ஊருக்கு போயிட்டு வந்து எப்படா டேட் வரும் என்று நாள் எண்ணிகிட்டு இருக்கேன்.அதனாலையோ என்னவோ நாள் போகமாட்டேங்குது.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தளிகா எனக்கு இந்த பிராப்பளம் 3 வது மாததில் இருந்தே இருக்கு.கோகுலுக்கு 9 வது மாதம் தான் கஷ்டமா இருந்தது.நாளைக்கு எனக்கு சுகர் டெஸ்ட்க்கு கொடுத்து இருக்காங்க.லாஸ்ட் டைம் பார்த்த டாக்டர் நாளைக்கே இன்னொரு பிலெட் டெஸ்ட்டும் எடுக்க சொன்னாங்க பார்க்கலாம்.இத்தனை நாள் பார்த்தாச்சு இனி எங்க மாத்தறது யோசனையா இருக்கு.திரும்ப எல்லா டெஸ்ட்டும் எடுக்கனும்.இன்னும் 3 மாதம் தானே அப்படி இருக்கோம்.

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஜலிலா அக்கா நலமா? ஊருக்கு போயிட்டு செப்டம்பர் 9 தான் வந்தேன்.நீங்க எப்ப பார்த்தாலும் என் நம்பரை தொலைக்கிறீங்க:((

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா, வணக்கம். நலமா? எனக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். அதனால் எனக்கு நீங்கள் சொல்வது போல 5வது மாதமே மூச்சுவிட சிரமம் இருந்தது. வாய்வு நிறைந்த உணவு பொருட்களை சிறிது குறைத்து கொள்ளுங்கள். பூண்டு, பெருங்காயம் நிறைய சேர்த்துக் கொள்ளவும். தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் சொன்னதைப் போல அனைத்தும் எனக்கும் இருந்ததோ என்னவோ, நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்கிருந்த உடல் சிரமங்களை பொருட்படுத்தியதே இல்லை. வேறு விஷயங்களில் கவனத்தை திருப்பி விடுவேன். பார்த்தவர்கள் எல்லாம் திட்டுவார்கள் இரண்டு குழந்தைகளை சுமந்தவள் மாதிரியா இருக்கே, இப்படி ஓடுற, இப்படி நடக்கறேன்னு. வயிற்றில் குழந்தைகள் இருக்கும் நினைப்பே இருக்காது. யாராவது சொன்னால்தான் தெரியும். வயிற்றில் பிள்ளைகள் உதைத்தால்தான் தெரியும் ;))

நீங்கள் டெலிவரி ஆகும் நாளையே பெரிதாக எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் அதுபோன்று உணர்கிறீர்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எனக்கு ஐந்தாவது மாதத்தில் இருந்து அனைத்துமே சிரமம் தான் இரண்டு குழந்தைகள் தண்ணீருடன் சேர்த்து வயிற்றில் ஏழு கிலோ சுமந்தேன். சொல்லப்போனால் அனைத்து வேலைகளுமே சிரமம்தான். ஒருபுறமாக படுத்து, அடுத்த பக்கம் திரும்பும்போது தொடைப்பகுதியில் இரத்தம் கட்டியது போல மரணவலி ஏற்படும். இதுபோல ஒருநாள் இல்லை இரண்டு நாள் இல்லை குழந்தை பெறும் வரை இருந்தது.

அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கு பிடித்த இசை கேளுங்கள். புத்தகம் படியுங்கள். மனதிற்க்கு அமைதியான குழந்தைகள் சம்பந்தமான படம் பாருங்கள். நீங்கள் மேற்சொன்ன அத்தனை வலிகளும் பறந்து போகும். சுக பிரசவமாக வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா அழகா எழுதியிருக்கீங்க

ரேணுகா,
கர்ப்பமாயிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.நீங்கள் கூறி இருப்பது போல் எனக்கும் சில சமயம் தோன்றும்.என்னதான் முயன்று மூச்சு விட்டாலும்,சுவாசிக்கும் திருப்தி இருக்காது.நடக்கும் போது இது அதிகமாக இருக்கும்.

நீங்கள் ரத்தப் பரிசோதனை பண்ணிட்டீங்களா?சில சமயம்,ரத்ததில் இரும்புச்சத்து குறைந்தாலும் இப்படி இருக்கும்.ரத்த சிவப்பணுக்கள் தான் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும்.ரத்ததில்,சிவப்பணுவின் எண்ணிக்கை குறைந்தாலும் இப்படி மூச்சுவிட சிரமமாய் இருக்கும்.கர்ப்பமாவதற்கு முன் ரத்த செல்களின் எண்ணிக்கை சரியாக இருந்தாலும்,கர்ப்பமானபின் குழந்தைக்கு இரும்பு சத்து நாம் உண்ணும் உணவிலிருந்தும்,நம் உடம்பில் இருந்தும் எடுத்துக்கொள்ளப்படுவதால்,ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும்.எனக்கு ரத்த சிவப்பணு எண்ணிக்கை சரியாக இருந்தாலும்,ஃபெரட்டின்(stored iron)அளவு குறைந்து விட்டது.இதனாலும் மூச்சுவிட சிரமமாய் இருந்தது.அயர்ன் மாத்திரைகள் எடுத்து கொண்டு இருக்கிறேன்.இப்போது பரவாயில்லை.நீங்களும் டாக்டரிடம் Complete Blood Cells Count(CBC) செய்து பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்