தீபாவளியை கொண்டாடலாம் வாங்க...

இனம்,மதம் பாராமல் அனைவரும் விரும்பி கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று... தீபாவளினாளே பட்டாசு, புது ட்ரெஸ், பலகாரங்கள் தான் நினைவு வரும்... இந்த தீபாவளிக்கு உங்க ஷாப்பிங் ப்ளான் என்னன்னு வந்து share பண்ணிக்கோங்களேன்... பட்டு புடவையா,fancy புடவையா, சுடிதாரா,எந்த கடைல collections நல்லா இருக்கு... அப்டியே எந்த கடையோட தீபாவளி விளம்பரம் நல்லா இருக்குன்னு வந்து சொல்லுங்க... இப்போ இருந்தே தீபாவளிய கொண்டாட ஆரம்பிக்ககளாம்.... :)

ஆஹா நல்ல இழை சரண்யா, சரண்யா எப்படிலாம் கொண்டாடினோம் கொண்டாடுவோம்னும் பகிர்ந்துக்கலாம் அது இன்னும் சந்தோஷமா இருக்கும்ல. அதுப் போல ஏதாவது மறக்க முடியாத சம்பவங்கள் கூட இருக்கும்ல. ஏதாவது தவறா சொல்லி இருந்தா மன்னிக்கவும்.

உங்க idea-வும் சூப்பர் ங்க... இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்... எல்லோரும் வந்து தீபாவளி பத்தி என்னென்ன சொல்லனுமோ வந்து சொல்லுங்க... கலக்கிடலாம்...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

யாழினி, சரண்யா நானும் உங்க கூட தீபாவளி கொண்டாட்டதுல சேர்ந்துகுறேன்.
தீபாவளி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், அப்பப்பா அதுக்கு அடிக்குற லூட்டி இருக்கே செம ஜாலியா இருக்கும். அதுவும் இந்த வெடி வாங்கிக் கொடுத்தாச்சுன்னா அத காய வைக்கிறது, எடுக்கறது இது உன்னோட அது என்னோடனு தம்பிங்களோட சண்டை போடறதுனு சின்ன வயசுல ரொம்ப ஜாலியா இருக்கும். புது டிரெஸ் எடுத்தாச்சுன்னா அத ஒவ்வொருதங்க கிட்டயும் காட்டி சந்தோஷப்படும் சுகம் இருக்கேன் அடடா.
இப்பலாம் வெடி அங்க வெடிச்சாலே நான் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடிடுவேன்.

நான் இப்போதைக்கு "போத்தீஸ்" தீபாவளி விளம்பரம் தான் பார்த்தேன்... Wooww.. அந்த குட்டி ஷ்ரயா பொண்ணு என்னமா வளந்துடுச்சு... அந்த பொண்ணு வந்து மேஜிக் பண்ணி வீட்ல இருக்கரவங்களுக்கு புது dress கொடுக்கிற concept நல்லா இருக்கு... விளம்பரம் சூப்பர்... Collections எப்படின்னு தெரிலயே... ஏன்னா எங்க ஊர்ல போத்தீஸ் இல்ல...

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

தீபாவளிக்கு இந்த முறை சாரீஸ் எடுக்க வேண்டாம்னு முடிவு செய்துருக்கேன். என்ன மாதிரியான சுடிதார்ஸ் எடுக்கறதுனு தான் ஒரே குழப்பமா இருக்கு.
நான் இன்னும் அந்த விளம்பரம் பார்க்கல சரண். இப்போ சமீபத்தில் சென்னை சில்க்ஸ் விளம்பரம் ஒன்னு பேப்பர்ல வந்து இருந்துச்சு அதுல 3 நீள வானம் கலர்ல சுடிதார் வந்து இருந்துச்சு ரொம்பவும் நல்லா இருந்துச்சு.

நேக்கு 8 வயசு இருக்கும்! தீபாவளி அன்னிக்கு என் அண்ணா லஷ்மி வெடியை வாசல்ல வெச்சான்!

நான் வெடிக்காதுனு சொன்னேன்! அவன் வெடிக்கும்னு சொன்னான்!

ரெண்டு பேருக்கும் ஒரே வாக்கு வாதம்! கடேசில வெடி வெடீக்கலை!

ஒடனே நேக்கு ஒரே சந்தோஷம் தாங்கல்லை!

வெடி வெடிக்கல்லையேனு எங்கண்ணாவை சீண்டினேன்!

எங்கண்ணவுக்கு கோவம் வந்துடுத்து!

அவன் என்ன பண்ணினான் தெரியுமோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

யாழினி, நீங்க சுடிதாரா... Good...Good... நான் அவ்ளோவா சேலை உடுத்த மாட்டேன், இருந்தாலும் போன வாரம் "அவள் விகடன்"-ல PSR சில்க்ஸ் விளம்பரத்துல ஒரு பொண்ணு உடுத்தி இருந்த புடவைய பார்த்துட்டு அதே மாறி வாங்கனும்னு அத்தான் கிட்ட சொல்லிகிட்டே இருந்தேன்... பார்ப்போம்... கடைக்குள்ள போனா தான் நம்ம மனசு எப்படி எல்லாம் மாறும்நு தெரியும்... :)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

ஐ தீபாவளி எனக்கு ரெம்ப பிடிக்கும், நானும் என்னோட அண்ணனும் வெடிக்கு நல்லா சண்ட போடுவோம்,
மாமி கதைல தான் பாதியிலேயே கட் பண்றீங்கன்னா இதுலேயுமா உங்க அண்ணன் என்ன பண்ணினாங்கன்னு சொல்லுங்கோ

’’நோக்கு தில் இருந்தா வெடியை கைல எடு பக்கலாம்’’னு சொன்னான்!

நான் சும்மா இருப்பேனா ! உடனே கைல எடுத்தேன்! ’டமார்’னு ஒருசத்தம்!

ஒன்னும் இல்லை! என் கைல இருந்த வெடி வெடிச்சுடுத்து!

நல்ல வேளை ! அது புஸ்வாணமா போனதாலை நான் கை அடியோட தப்பிச்சேன்!

நன்னா வெடிச்சுருந்தா அறுசுவை தப்பிச்சுருக்கும்! பாவம் அறுசுவை ஜனங்கள்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்ன மாமி இப்படி சொல்லிட்டீங்க நீங்க தான் அறுசுவையின் ராணியாச்சே
மாமி உங்களுக்கு g talk ல invite பண்ணி இருக்கேன் அச்செப்ட் பண்ணிடுங்க

மேலும் சில பதிவுகள்