குழந்தைக்கு அறிவியல் கண்காட்சிக்கு உதவி செய்யுங்கள்

ஹாய் தோழிகளே என் குழ்ந்தைக்கு அறிவியல் கண்காட்சி வருகிறது அது ச்ம்மந்தமாக் எந்த வெப்சைட்டில் பார்க்க்க்லாம் என் குழந்தை ukg ப்டிக்கிறாள் science exhibition topics are any one
1.stethescope
2.computer
3.television
4.telephone
5.solar system
6.parachute
please tell me friends this time my baby wants to get prize which one is best model how can i do ? pls help me

என் பையனுக்கு நான் சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங்க விண்வெளிகலத்தோட இறங்கின மாதிரி பண்ணினேன். ஸ்கூல்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. அப்புறம் அவங்க கேட்டதன் பேரில் அத நான் ஸ்கூலுக்கே கொடுத்துட்டேன் ;)

பாஸ்டர் ஆப் பாரிஸ், விரல் அளவு சின்ன பிளாஸ்டிக்பொம்மை ( பவர் ரேஞ்சர் பொம்மை கடையில கிடைக்கும்), சின்ன வெயிட் இல்லாத பிளாஸ்டிக் பால், தெர்மாகப், ஃபாயில் ஷீட், கம், பிளாக் பெயிண்ட் அல்லது ஃபேபரிக் கலர், சில்வர் டஸ்ட் கலர் ( பொடிமாதிரி இருக்கும்) தெர்மாக்கோல் சீட்.

தேவையான அளவு தெர்மாக்கோல் சீட் கட் பண்ணிக்கோங்க. அதுல பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தண்ணீர் ஊத்தி கலந்த கலவையை ஒரு அங்குல அளவுக்கு மேல பூசுங்க. சின்ன டம்ளர், டவராவை அதன் மேல் வைத்து அலுத்துங்க.
இந்த மாதிரி இரண்டு மூணு வச்சு தேவையான குழி பண்ணிக்குங்க. சீக்கிரம் காய்ஞ்சிடும் அதுக்குள்ள பண்ணிரனும்.

ஃபாயில் சீட் வச்சு பால் ஃபுல்லா கவர் பண்ணுங்க. கசங்கினாலும் பராவாயில்லை அப்ப பாக்க இன்னும் நல்லாயிருக்கும். தெர்மாகப்பை ஸ்டூல் மாதிரி பண்ணி கீழ் பாகத்தை வெட்டிருங்க . மேல ரவுண்ட் ஷேப்பில பாலை இப்ப பொருத்திடுங்க . கப்புக்கும் ஃபாயில் ஷீட்டால கவர் பண்ணிடுங்க. விண்வெளிக்கலம் மாதிரி ஆயிடும்.

இப்ப பவ்ர் ரேஞ்சர் பொம்மையையும் ஃபாயில் ஷீட்டால கவர் பண்ணுங்க. நான் முகத்துக்கு மருந்து பாட்டிலோட மெஷர்மெண்ட் கப்ப கவசமா யூஸ் பண்ணினேன். அத முன்னாடி ஃபாயிலால் கவர் பண்ணாம பின்னாடி மட்டும் கவர் பண்ணுங்க. அப்புறம் ஆக்ஸிசன் சிலிண்டருக்கு மெசின் நூல்கண்டோட ஸ்கூப் மட்டும் எடுத்து தேவையான அளவு கட்பண்ணி அதையும் பாயில் சீட்டால கவர் பண்ணிக்கிட்டேன். இப்ப எல்லாத்தையும் பொம்மையில் கம் போட்டு ஃபிக்ஸ் பண்ணிடுங்க. தேவைப்பட்டா பிளாஸ்டர் ஆப் பாரிஸும் அப்ளைபண்ணி ஒட்டலாம்.

இப்ப தெர்மாக்கோல்ல பண்ணின நிலவு எஃபக்ட்டுக்கு பிளாக் பெயிண்ட் அடிச்சு குழிக்கேல்லாம் சில்வர் கலர் அப்ளை பண்ணிடுங்க. அப்புறம் விண்வெளி வீரரையும் நடக்கிற மாதிரி வைக்கலாம் ஸ்பேஸ்கிரப்ட்டையும் தேவையான இடத்தில வைத்து பொருத்தலாம்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் எப்ப விண்வெளிக்கு சென்றார்னு லேபிள்ல எழுதி வைச்சுடலாம். ஒரு நாள்தான் ஆகும் செலவும் அதிகமாகாது. நான் சொன்னது ஓரளவுக்கு உங்களுக்கு புரிஞ்சுதுனா பண்ணிப்பாருங்க. ஆல் த பெஸ்ட்.

Don't Worry Be Happy.

மன்னிக்கவும் இரு முறை பதிவாயிருச்சு;(

Don't Worry Be Happy.

நான் புத்தகத்திலிருந்த படத்தப் பாத்துதான் இப்படி ஐடியா பண்ணி பண்ணினேன். உங்களுக்கு எது பிடித்தமாவும் யாரும் செய்யமுடியாதுன்னு நினைக்கிறீங்களோ அத செஞ்சீங்கனா பரிசு நிச்சயமா கிடைக்கும்.

Don't Worry Be Happy.

யம்மாடியோ, பிள்ளைங்க படிப்புன்னா, இவ்வளவு வேலை இருக்கா, இவ்வளவு சிந்திக்கறது எல்லாம் நம்மால முடியாதுப்பா, நல்ல வேளை, பசங்க படிச்சு முடிச்சாச்சு.

எப்படி ஜெயலஷ்மி உங்களுக்கு நேரம் கிடைக்குது, சொல்லுங்களேன்.(எனக்கே பதில் தெரியுது - தூங்கிக்கிட்டே இருக்காம, வீட்டு வேலையெல்லாம் சீக்கிரம் பாத்தால் நேரம் கிடைக்கும்னு, முடியலையே:( !)

இந்த 2 மாசமும் அப்பப்போ பாத்த இழைகளில் ஒன்றில், வேலைக்குப் போகிற ஒரு பெண்மணி புலம்பியிருந்ததற்கு நீங்களும் ஜெயந்தி மேடமும் கொடுத்திருந்த பதிவுகள் பார்த்து ரொம்ப அசந்து போயிட்டேன். சுறுசுறுப்பு திலகங்கள்னு பட்டம் கொடுக்கலாம் போலிருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

ஜெயலக்ஷ்மிக்கு என் பாராட்டுக்கள். அழகாக விபரித்திருக்கிறீர்கள். ;)

‍- இமா க்றிஸ்

பர்வீன்! எப்படி இருக்கீங்க?
எனக்கு தெரிஞ்சு சூரிய குடும்பம் பிராஜெக்ட் எளிதா இருக்கும். முதல்ல குழந்தைக்கு சூரிய குடும்பம் / பால்வெளி ( மில்கி வே) இதயெல்லாம் சொல்லி ரெடி பண்ணுங்க. சார்ட் பேப்பரில் வரைந்து கலர் பண்ணி அதிலெ இருட்டில் ஒளிரும் பெயின்ட் / பொடி வைத்து தூவி விட்டா பிராஜெக்ட்டும் அழகா இருக்கும். வீட்டிலும் சீலிங்கில் ஒட்டி வைக்கலாம்.

ஓ.. மறக்காம புதுசா கண்டு பிடிச்ச இரண்டு(??)) புதிய கிரகங்கள் பேரும் சொல்லி கொடுங்க. எனக்கே பக்கத்து வீட்டுகுட்டி தான் சொல்லிச்சி (1 ஆம் வகுப்பு :(())

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹலோ ஃபர்வீன்
நீங்க எந்த ப்ரோஜெக்ட் டிசைட் பண்ணினாலும் அதோட கம்ப்ளீட் டீடெயில்ஸ் கொடுக்கிற மாதிரி செய்யுங்க. ஸ்டெதஸ்கோப் ஆனால் தற்போதய மாடலில் மட்டும் செய்யாமல் பழைய காலத்தில் உள்ள குழல் அமைப்பு அதிலிருந்து எவ்வாறு முன்னேறி தற்போதைய ஸ்டெதஸ்கோப் ஆனது என்பதை சார்ட்டிலாவது எக்ஸ்ப்ளெயின் பண்ணுங்க. பழைய மாடல் ஃபோன்கள் கிடைத்தால் கலெக்சன் போல நாலோ ஐந்தோ வைத்து அதனுடைய எக்ஸ்ப்ளனேசனும் கொடுக்கலாம். சோலார் சிஸ்டம் ஆகும் பொழுது நிறைய அளவுகளில் பந்துகள் வாங்கி வைத்துக் கொள்ளவும். ஒரு தெர்மோகோல் ஷீட்டில் முதலில் கறுப்பு அல்லது சில்வர் பேக்கிரவுண்ட் வைத்துக் கொள்ளுங்கள். ஆர்பிட் அமைப்புகளை குண்டூசியின் உதவியாலும் கட்டுக்கம்பியின் உதவியாலும் பின் செய்யவும். ஒவ்வொரு பந்துகளிலும் ப்ளனெட்ஸோட சைஸ் கலர் எல்லாம் பார்த்து அந்தந்த கலர் ஒட்டி மேலே கோள்களில் இருப்பது போல் டெக்கரேசன்களெல்லாம் செய்து உரிய இடங்களில் வைத்து விடுங்கள். சூரியனுக்கு முடிந்தால் ஒரு பல்ப் போட முடிந்தால் போடவும். எந்த மாடலாயிருந்தாலும் கண்டுபிடித்தவர் பெயர் எல்லாம் எழுதவும். சிறிய குழந்தை ஆதலால் எக்ஸ்ப்ளெனேசன் கொடுக்க வேண்டி வராது என நினைக்கிறேன். அவ்வாறு கொடுக்க வேண்டுமெனில் குழந்தை கூறுவதற்கு ஏற்றவாறு சார்ட்டில் படங்களின் உதவியால் எக்ஸ்ப்ளெயின் பண்ணச் சொல்லுங்க. ஒகே. ஆல் த பெஸ்ட் ஃபார் யு அண்ட் யுவர் பேபி.

சீதாம்மா, இமாம்மா ரொம்ப நன்றி இப்படி ஊக்கங்கள், பாராட்டுக்கள் கிடைக்கும் போது தூக்கம் வருமா!

வீடு பார்கெல்லாம் நிலாவுல கட்டி 2100ல குடியேறினமாதிரி அம்மா பண்ண சொன்னாங்க அதெல்லாம் பண்ணமுடியாதுன்னு இப்படி பண்ணினேன் அம்மாக்கு ஒரே வருத்தம்;) பேரன் படிப்புனா சும்மா இல்லையே.... இனி உங்களுக்கு இப்படி வேலையெல்லாம் வரும் பிரிப்பேர் ஆயிடுங்க;)

Don't Worry Be Happy.

பராசூட் எப்படி பயன்படுகிறது என்பதை சார்டில் படங்களாக ஒட்டி விளக்கம் கொடுக்கலாம்.லஷ்மி சொன்ன ஐடியா நல்லா இருக்கும் சோலார் சிஸ்டமுக்கு.

http://www.arusuvai.com/tamil/node/14089 இதுல பாராசூட் செய்வதைப்பற்றி விளக்கப்படத்துடன் உள்ளது. உங்களுக்கு உபயோகமாகுமான்னு பாருங்க.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்