டெலிவரி

நான் அனு.எனக்கு நவம்பரில் டெலிவரி. சி செக்ஸ்சன். இரண்டாவது குழந்தை.வீசா பிரச்சனை இருப்பதலால் என் அம்மா வருவது கடினம். முதல் குழந்தைக்கு முன்று வயது. எங்கலால் தனியாக டெலிவரியை பார்க்க முடியுமா?. யு.ஸ். டெலிவரி எப்படி இருக்கும்? பிலிஸ் பதில் தாருங்கள்.

மணி மிகவும் நன்றிபா. எனக்கு பயமாக இல்லை.பாப்பாவை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்குது. வாணி நான் விர்ஜினியாவில் இருக்கிறென். தைரியமாக இருக்குது உங்கள் பதிலை படிக்கும்போது
ப்ரியா சாரிபா. எனக்கு டிசம்பர் 8ல் டெலிவரி. மிகவும் நன்றி.

அனு, முதலில் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன். இது இடத்திற்கு இடம் மாறுபடலாம்.

கவலைப் படாமல் இருங்கள். யூ.எஸ் –ல் டெலிவரி எளிதாகவே இருக்கும். மிகவும் எளிதாக நீங்களும் உங்கள் கணவரும் மட்டுமே எல்லாவற்றையும் சமாளித்துவிட முடியும்.

வீட்டுவேலை – குறைந்தது 2 வாரம் முதல் ஒரு மாதம் வரை உங்கள் கணவரின் உதவி அதிகமாகத் தேவைப்படும். பெரும்பாலும் அவரே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிவரும் அல்லது செய்வது நல்லது.

ஆஸ்பத்திரியில் தங்குவது – பொதுவாக எல்லா ஆஸ்பத்திரியிலும் டூர் வைத்திருப்பார்கள். அதில் முடிந்தால் கலந்துகொள்ளப் பாருங்கள். முடியவில்லை என்றாலும் கவலை இல்லை. தங்கும் நாள் ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் வேறுபடும். நான் சென்ற ஆஸ்பத்திரியில் நார்மல் டெலிவரி என்றால் 1 அல்லது 2 நாள்கள் (நான் மறுநாளே வீடு வந்து விட்டேன்) சி –செக்ஷன் என்றால் 3 நாட்கள். ஆஸ்பத்திரிக்கு ஃபோன் பண்ணிக் கேட்டாலே இதை சொல்லி விடுவார்கள்

முதல் குழந்தையை என்ன செய்வது? – என் முதல் மகள் பகலிலும் இரவிலும் என்னுடன் தான் இருந்தாள். நான் ஆஸ்பத்திரியில் விசாரித்தபோது அவர்கள் ”பொதுவாக” நாங்கள் அனுமதிப்பதில்லை என்று சொன்னார்கள். அதனால் நான் அவளை என்னுடன் தான் வைத்திருந்தேன் (நானும் இந்த ஊருக்கு புதுசு. நண்பர்கள் அதிகம் இல்லை. என் மகளும் வேறெங்கும் செல்ல மாட்டேன் என்று கூறிவிட்டாள்). ஆனால் மகளை ஆஸ்பத்திரியில் தங்க வைப்பது சிரமமே. படுக்கை வசதி ஒரு ஆளுக்கு மட்டுமே இருக்கும். அதுவும் ஊர் மற்றும் ஆஸ்பத்திரியைப் பொறுத்ததே. (நான் இதற்கு முன் இருந்தது ஒரு சிறிய ஊர். அங்குள்ள ஆஸ்பத்திரியில் 3 பேர் தங்க அனுமதி உண்டு). எனவே முடிந்தவரை வேறு ஏதேனும் வழி உண்டா என்று பாருங்கள். ஒருநாள் மட்டுமே என்பதால் எனக்கு எந்த சிரமமும் தெரியவில்லை.

மற்றவை பிறர் சொன்னவைதான். மீண்டும் நீங்கள் குழந்தை நல்ல முறையில் ஈன்றெடுக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

என் முதல் குழந்தையின் ஆடைகள் அனைத்தும் பத்திரமாக வைத்து உள்ளேன்.. பிறந்த நாட்களில் உபயோக படுத்திய ஆடை முதல்..
அந்த ஆடைகளை இரண்டாம் குழந்தைக்கு வைத்து கொள்ளலாமா? என்பது சந்தேகமாக உள்ளது..

அதனை அம்மா வீட்டிற்கு டெலிவரிக்கு செல்லும் போது எடுத்து கொண்டு போகவா வேண்டாமா என்று குழப்பமாக உள்ளது..
கொஞ்சம் எனக்கு உதவுங்கள்..

அக்கா நீங்க‌ கர்ப்பமாக‌ இருக்கீங்களா?

எனக்கு எப்படின்னு தெரியலக்கா.

- பிரேமா

ஆம் ஆறு மாதம் ஆகின்றது.. அதனால் தான் கேட்கிறேன்..

வாவ்.. வாழ்த்துக்கள் கா. எனக்கு தெரியாது. அதான் கேட்டேன்.
டேக் கேர்

- பிரேமா

//என் முதல் குழந்தையின் ஆடைகள் அனைத்தும் பத்திரமாக வைத்து உள்ளேன்.// ஆஹா! ;-)

//அந்த ஆடைகளை இரண்டாம் குழந்தைக்கு வைத்து கொள்ளலாமா?// தாராளமாக வைத்துக் கொள்ளலாம் இந்து.

என் முதல் குழந்தையின் முதல் ஆடைகளை நானும் வைத்திருந்து இரண்டாவது குழந்தைக்குப் பயன்படுத்தினேன். அருமையான நினைவுகளோடு கூடிய ஆடைகள். சமீபத்தில் கற்பித்தலுக்காக சிலவற்றை வெளியே எடுத்தேன். என் பேரக் குழந்தைகள் என்னைச் சந்திக்க வரும்போது பயன்படுத்தலாம் என்று தோன்ற, கழுவி அழுத்தி வைத்திருக்கிறேன்.

எனக்கும் தம்பிக்கும் பயன்படுத்திய சில ஆடைகள், ஃப்ளானல், சோப் டப்பா, பௌடர் பஃப் எல்லாம் செபா பத்திரமாக வைத்திருந்தார். அவை என் பிள்ளைகளுக்குப் பயன்பட்டன. இன்னமும் எனக்காக செபா 1965ல் பின்னிய குட்டி ஸ்வெட்டர் ஒன்று ஊரில் மருமகளிடம் இருக்கிறது. எனக்குப் பயன்படுத்திய ப்ராம், தம்பியின் தொட்டில்... என் குழந்தைகளுக்குப் பயன்படுத்தினேன். இப்போது நாடு கடந்து வந்தாயிற்று அவை என்னுடன் இல்லை.

இங்கு ஒவ்வொரு குழந்தைக்கும் புதிய துணி வாங்கும் வழக்கம் இல்லை. என் மருமகளது தோழியர் வட்டத்திலும் உறவினர் வட்டத்திலும் ஒருவர் தன்னிடம் மீதியாக உள்ள பாவனைக்குகந்த குழந்தைக்கான பொருட்களைப் பத்திரமாகக் காத்து வைத்து அடுத்து தாயாகும் பெண்ணுக்குக் கொடுக்கும் வழக்கம் உள்ளது. இவற்றுள் விலையான விளையாட்டுப் பொருட்களும் அடங்கும். இது அவர்கள் செலவைப் பெருமளவில் குறைக்கிறது. பல பொருட்கள் ஒரு மாதமோ இரண்டு மாதங்களோ மட்டும் தானே பயன்படும்! ஒவ்வொருவரு தாயும் பொருட்களின் தேவை முடிந்ததும் பழுதானவற்றை நீக்கிவிட்டு தாம் வாங்கியவற்றில் நல்ல நிலையில் உள்ளவற்றையும் சேர்த்து அடுத்துத் தாய்மை அடையும் பெண்ணிக்காகப் பாதுகாப்பார்.

என்னிடம் அழகான குட்டி லெதர் பூட்ஸ் ஒரு சோடி இருக்கிறது. என் மூத்தவர் பாட்டா கடையில் அதைக் கண்டதும் (1987ல்) மாட்டிக் கொண்டு அது இல்லாமல் வெளியே வர மறுத்துவிட்டார். இலங்கைக் காலநிலைக்கு அது ஒவ்வாத பாதணி. அதுவும் அத்தனை சின்னப் பாதங்களுக்கு மாட்டுவதும் சிரமம். அபூர்வமான பாதணி & லெதர் என்பதால் விலை அதிகமாக இருந்தது. என் சம்பளத்தில் கால் பங்கு அந்த நேரம். சின்னவர் கடையை விட்டு அசைய மறுத்ததால் வேறு வழி இன்றி வாங்கினோம். அவரது முதலாவது பிறந்தநாள் முதல் மூன்று மாதங்கள் வரை மாட்டிக் கொண்டு உலாவினார். பிறகு மருமகனது முதல் பிறந்தநாள் என் சின்னவரது முதல் பிறந்தநாள் என்று கடந்து இப்போது சப்பாத்து ராக்கையின் மேல் பூச்சாடிகளாக அலங்காரமாக வீற்றிருக்கின்றன. ஓரிரண்டு வருடங்களில் என்னிடமிருந்து விடைபெற்றுவிடும் அவை. :-)

ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் கதை இருந்தது. இப்போது மருமக்களிடம் என் மக்களது சின்ன வயதுப் புகைப்படங்களைக் காட்டும் போது கூடவே இந்த நினைவுகளையும் பகிர்ந்துகொள்ள முடிகிறது. இந்த நினைவுகள் நிச்சயம் என் பேரக் குழந்தைகளுடனும் பகிரப்படும். அழகான விடயம் இல்லையா!

//அதனை அம்மா வீட்டிற்கு டெலிவரிக்கு செல்லும் போது எடுத்து கொண்டு போகவா வேண்டாமா என்று குழப்பமாக உள்ளது.// குழம்பாமல் எடுத்துக் கொண்டு போங்க. பிறகு பயன்படுத்த வேண்டாம் என்று தோன்றினால் விட்டுவிடலாம். என்றாவது ஒரு மழை நாள் துணிகள் காயவில்லை எனும் போது கைகொடுக்கும்.

‍- இமா க்றிஸ்

குழந்தைக்கு முதல் முதலில் அணிவித்த ஆடைகள், தொப்பி, காலணி போன்றவற்றை ஃப்ரேம் செய்து சுவரில் மாட்டிவைக்கும் வழக்கம் ஒன்று உண்டு. first baby dress frame என்று தட்டி கூகுள் இமேஜஸ் பாருங்க இந்து.

‍- இமா க்றிஸ்

அடேங்கப்பா!! பேரக்குழந்தைகள் வர வைத்து உள்ளீர்களா!
கேட்கவே நன்றாக உள்ளது.. எங்கள் குடும்பம் பெரிய குடும்பம் அதனால் என் ஆடைகள் என் தம்பி ஆடைகளை சித்தி பையன் மாமா பொண்ணு என்று மாற்றி மாற்றி பயன்படுத்தி கிழிந்து அகற்றியாயிற்று..

நான் வெகு தொலைவில் இருந்ததால் என் குழந்தைக்கு சேராமல் போன அனைத்தையும் ஒவ்வொரு கவராக போட்டு கவரின் மேலே பேனாவினால் எழுதி வைத்து உள்ளேன்..

இதில் குழந்தை பிறந்த அன்று பயன்படுத்திய ஆடை, வெள்ளை காட்டன் துணிகள்,கை உறைகள்,கால் உறைகள், சாஃப்ட் டவல், கைக்குட்டைகள், மினி பஞ்சு மெத்தை, பெரிய பஞ்சு மெத்தை, சின்ன காலணிகள் எல்லாமே தனித்தனி கவரில் உள்ளன..

மேலும் எட்டு மாத துணிகள்,பேண்ட், ஜட்டிகள் என தனியாக உள்ளது..

இனி குழப்பம் இன்றி கொஞ்சம்கொஞ்சமாக இஸ்திரி போட்டு பேக் பன்ன வேண்டி தான்..

நன்றி அம்மா..
அடுத்த மாதம் என் அம்மாவிடம் பாதி கொடுத்து விட்டால் லக்கேஜ் குறையும்.. அதனால் தான் தெளிவு படுத்திக் கொண்டேன்..

பேபி ட்ரெஸ் ஃப்ரேம் பார்த்து விட்டு பதிவிடுகிறேன் விரைவில்..

மேலும் சில பதிவுகள்