காலிஃப்ளவர் ஃப்ரை

தேதி: October 5, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (21 votes)

 

காலிஃப்ளவர் - ஒரு கப் (தனித்தனி பூ வாக கட்பண்ணியது)
சோள மாவு - 3/4 கப்
கடலைமாவு - 1/4 கப்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் காலிஃப்ளவரை நன்கு ஆய்ந்து நீரில் சிறிது உப்பு போட்டு அதில் காலிஃப்ளவரை போட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். பிறகு நீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு காலிஃப்ளவருடன் சோயா மாவு, கடலைமாவு, உப்பு, மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். (கலர் வேண்டுமெனில் கேசரி கலர் சேர்த்துக் கொள்ளலாம்)
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பிசறி வைத்திருக்கும் காலிஃப்ளவரைப் போட்டு சிவக்க எடுக்கவும்.
க்ரிஸ்பான காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி. மிக சுலபமாக செய்து விடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

காலிஃப்ளவர் ஃப்ரை பாக்கவே சூப்பரா இருக்கு நாளை பண்ணிட்டு சொல்ரென்

ராதா காலிஃப்ளவர் 65 அருமை நான் ரொம்ப நாட்களாக தேடிய ரெசிபி ஆனா கோபி மஞ்சூரியன் தேடினேன் அதான் கிடைக்க வில்லை காலிஃப்ளவரை எப்படி சிறு துண்டுகளாக நறுக்குவது என்பதே என் குழப்பம, இந்த அளவு சரியாக இருக்கும், இதே போல் காலனையும் சமைக்கலாம் இல்லையா?

உங்கள் குரிப்புக்கு நன்றி வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

ராதா,
காலிஃப்ளவர் பொரியல் பார்க்கவே சூப்பரா இருக்கு.வாங்கியதும் கண்டிப்பா செய்து பார்க்கணும்.நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்.

காலிஃப்ளவர் ஃப்ரை பார்க்க நல்ல கலர்புல்லாக இருக்கின்றது. செய்வதும் மிகவும் சுலபமாக உள்ளது.நானும் இந்த முறைப்படிதான் செய்வேன் ஆனால் எண்ணெயில் பொரித்து எடுக்காமல் ஓவனில் வைத்து எடுப்பேன்.நல்ல ரேசப்பியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ராதா.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

காலிஃப்ளவ்ர் பிரை மிகவும் அருமை,நான் தனியாதூள் சேர்க்கமாட்டேன். படங்களும் அழகா வந்திருக்கு.

பார்க்கவே கலர்புல்லா இருக்கு. நானும் இதே போல் தான் செய்வேன். தனியா தூள் சேர்க்க மாட்டேன். எலுமிச்சை சாறு சேர்த்து கொள்வேன்.

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி...

கோமு
நலமா? வருகைக்கும் பின்னுாட்த்திற்கும மிக்க நன்றி. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க...

நித்யா
காலிஃப்ளவர் கட் பண்ண வேண்டாம்பா. கையாலையே நீங்க ஆய்ந்து விடலாமே. காம்பை மட்டும் கட்பண்ணிவிட்டு தேவையான அளவுக்கு கைகளால் ஆய்ந்து கொள்ளவும். காளான் பற்றி எனக்கு தெரியலப்பா.. நான் சமைத்தது கிடையாது. தோழிகள் கிட்ட கேட்டு சொல்றேன்.

அன்பரசி
வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி.. செய்து பார்த்துட்டு சொல்லுங்க..

யோகா மேடம்..
என்கிட்ட ஓவன் இல்ல. வாங்கனும்னு பிளான் இருக்கு.. வாங்கினா உங்க கிட்ட தான் ஓவன்ல எப்படி பண்றதுன்னு கேட்பேன்.. சரியா! நீங்க தான் எனக்கு சொல்லித்தரணும். எனக்க ஓவன் பத்தி அவ்வளவா தெரியாது.

ரீம்
உங்க வருகைக்கும் பின்னுாட்த்திற்கும் நன்றிப்பா.. தனியா துாள் சேர்த்து செய்து பாருங்க ஒருமுறை...

சங்கரி
வருகைக்கும் பின்னுாட்த்திற்கும் நன்றி.. நானும் எலுமிச்சை சேர்த்து செய்து பாக்குறேன். அப்படி சேர்த்தால் மாங்காய் பொடி சேர்க்க வேண்டாம் இல்லையா?.. நீங்களும் தனியா சேர்த்து செய்து பாருங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

காலிஃப்ளவர் ஃப்ரை பாக்கவே சூப்பரா இருக்கு

No pain No gain

ஈஸ்வரி மேடம்.. உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா.. கண்டிப்பா வீட்ல செய்து பாருங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா மேடம், நானும் இதேபோல் செய்துபார்க்கிறேன் நன்றி.

சுவையான குறிப்பு. செய்துட்டோம் இன்று மதிய உணவின் போதே. சாம்பார் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா