கோவக்காய் பொரியல்

தேதி: October 5, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (7 votes)

 

கோவக்காய் - கால் கிலோ
மிளகாய் தூள் - தேவையான அளவு
தனியா தூள் - தேவையான அளவு
தக்காளி - 5 (பழுத்தது)
வெங்காயம் - இரண்டு
உப்பு - தேவையான அளவு
கடுகு, எண்ணெய், உளுந்து - தாளிக்க


 

கோவக்காய், தக்காளி, வெங்காயம் என்று அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கோவக்காயை வட்ட வட்டமாக நறுக்கி குக்கரில் போட்டு 2 விசில் வரும் வரை வைத்து வேக வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும்.
பின்னர் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளியை சேர்க்கவும். தக்காளி ஓரளவுக்கு வெந்தவுடன் மேலே கொடுத்துள்ள எல்லா தூள்களையும் சேர்க்கவும். தேவையான அளவு உப்பும் சேர்த்து கிளறவும்.
தூள்கள் நன்றாக கலந்ததும் வேக வைத்த கோவக்காயை போட்டு கால் டம்ளர் தண்ணீர் மட்டும் விட்டு தண்ணீர் வற்றி நல்ல கிரேவி கிடைக்கும் வரை லேசாக கிளறி விடவும்.
சுவையான கோவக்காய் பொரியல் ரெடி.

கோவக்காய் கிடைக்காதவர்கள் கோவக்காய்க்கு பதில், முருங்கைக்காய் அல்லது பாகற்காயும் சேர்த்து செய்யலாம். முருங்கை மற்றும் பாகற்காயையும் இதே போல குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக வைத்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பவி கோவைக்காய் பொரியல் நன்னா இருக்கு. நாளையே செய்து பாக்கரேன்.

பவிதிரா கோவைக்காய் பொரியல் பார்க்க நன்றாக இருக்கின்றது.இவ்விடம் கோவைக்காய் கிடைப்பது கஷ்டம்.அதற்க்கு பதில் முருங்கைக்காயில் செய்யலாம் என இருக்கேன். செய்து பார்த்துவிட்டு வருவேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பவி கோவக்காய் பொரியல் சூப்பர், கண்டிப்பா செய்து பார்க்கிறேன் ஆனால் இங்க ரொம்ப முத்தலா கிடைக்குது நல்ல காயாக கிடைத்ததும் செய்துபார்த்துவிட்டு பின்னுட்டம் தருகிறேன்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

குறிப்பை வெளியிட்ட அறுசுவை டீம்கு நன்றிகள்.

கோமு, எனக்கு ரொம்ப பிடிக்கும், ட்ரை பண்ணி பாருங்க, நன்றி!

யோகராணி, முருங்கையில் சுவை ரொம்ப நல்லாருக்கும். உங்க பின்னூட்டத்திற்கு நன்றி. செய்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க...

நித்து, கோவக்காய் கிடைக்கலைன்னா முருங்கையில் ட்ரை பண்ணி பாருங்க, கோவக்காய் விட முருங்கையில் சுவையா இருக்கும்.உங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

அன்புடன்
பவித்ரா

பவி.. பார்க்கவே ரொம்ப அழகா தெளிவா இருக்கு.. கோவக்காய் பொரியல். கண்டிப்பா வாங்கினால் செய்து பார்த்துவிட்டு பின்னுாட்டம் தருகிறேன்டா..வெங்காயம் தக்காளி சேர்தது செய்தது கிடையாது. செய்து பாரக்கிறேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கண்டிப்பா, ட்ரை பண்ணி பாருங்க. நானும் முன்னாடி வெங்காயம் தக்காளி இல்லாம தான் செய்வேன், இது என் தோழியின் ஒரு முறை செய்தால், டேஸ்ட் ஒட்டிக்கிச்சு, நான் கண்டினியூ பண்னிட்டு இருக்கேன்.நன்றிக்கா.

அன்புடன்
பவித்ரா

it looks tasty.i,ll try tomorrow

பவி,
உங்களோட கோவக்காய் ரெஸிப்பி நேற்று இரவு டின்னருக்கு செய்தேன். நானும் எப்பவும் வெங்காயம், தக்காளி இல்லாமல் சும்மா ப்ரை பண்ணுவதுதான் வழக்கம். ஒரு மாறுதலுக்காக நேற்று இப்படி செய்து பார்த்தேன். திக் க்ரேவி போல செய்து சுடு சாதத்தில் விட்டு சாப்பிட்டோம். டேஸ்ட் நன்றாக இருந்தது. காயை தனியே வேகவைத்து போடுவதால், சுலபமாக விரைவில் செய்யவும் முடிந்தது. குறிப்புக்கு நன்றி பவி!

அன்புடன்
சுஸ்ரீ