கோவை கெட் டூ கெதர் தோழிகளே வாங்க பழகலாம்...

எல்லாரும் நல்லாருக்கீங்களா? கோவை கெட் டூ கெதர்-ல கலந்துக்கற தோழிகள் இங்கே வந்து அரட்டை அடிக்கலாம். மத்தவங்க திட்டாதீங்க நீங்களும் பேசலாம். ஏன் நான் கெட் டூ கெதர்ல கலந்துக்கறவங்களை மட்டும் பேசக்கூப்பிடறன்னா நாம எல்லாரும் நேர்ல பாத்துக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்காம முழிக்க கூடாதில்லை. ஜஸ்ட் பேசின பழக்கம் இருந்தாகூட அடடா நீங்களா அவங்கன்னு அறிமுகம் ஆக ஈஸியா இருக்கும். சோ வாங்க பழகலாம்...

தனியா வரீங்களா இல்லை உங்க துணைகளோட வரீங்களான்னும் சொல்லுங்க. அப்படியே உங்களைப்பத்தி சொல்லுங்க. சின்ன சின்ன விருப்பங்களையும் திறமைகளையும் பகிர்ந்துக்கங்க அங்க நாம என்ஜாய் பன்ன அது உதவியா இருக்கும். ஓகே...

ரெடியா...

மீண்டும் பேசலாம்...

என்றும் அன்புடன்
லதாவினீ.

இழை ஆரம்பிச்ச நானே முதல்ல பதிவு போட்டறேன். நான் என் பொண்ணு நிரஞ்ஜனா வினீ மூணு பேரும் வரோம். நான் உடுமலை-ல இருந்து வரனும். எப்படியும் மூணு மணி நேரம் ஆகும். நான் நல்லா பாடுவேன் அதுக்காக அங்க வந்து பாடி உங்களை ஏண்டா வந்தோம்னு சங்கடப்படுத்த மாட்டேன் கண்டிப்பா சோ கவலைப்படாதீங்க... மற்ற தோழிகளும் வந்து சொல்லுங்க.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

இப்படி ஆளாலுக்கு புகைய கிளப்பறீங்களேப்பா;(

Don't Worry Be Happy.

கெட் டுகெதரை கலகலகலப்பாக நடத்த சில ஐடியாக்களை சொல்லலாமா?
ஒரு பெரிய வெள்ளைப்பேப்பரில் ஏதாவது ஒரு அனிமல் படம் பென்சில்
ட்ராயிங்க் தெரிந்தவர்களைக்கொண்டு பெரிதாக வரைந்து வால் மட்டும்
வரையாமல் விட்டுடனும்.
இப்போ விளையாட்டு என்னன்னா பெரியவர்கள், குழந்தைகள் யார்
வேண்டுமென்ராலும் கலந்துக்கலாம்.
யாரு கலந்து கொள்கிரார்களோ அவர்களின் கண்களை. கட்டி விட வேண்டும்.
இப்ப அந்த அனிமல் ட்ராயிங்கில் சரியான இடத்தில் வால் வரையனும்.
கண்கட்டிய நிலையில் வாலை எங்கெல்லாம் வரைவார்கள் தெரியுமா.
நல்ல பொழுது போக்காகவும், உற்சாக மாகவும் இருக்கும்.
கரெக்டாக வரைபவர்களுக்கு மற்றவர்களின் உற்சாகமான கைதட்டல்கள்
தான் பரிசு.. இது எப்டி இருக்கு?

உமா
இதே விளையாட்ட நான் ஊர்ல பொய் அக்கா குழந்தைகளோட விளையாடலாம்னு இருந்தேன். கெட் டுகதர்ல கலந்துக்க போறவங்களுக்கு நல்ல ஜாலியான விளையாட்டு.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

//கெட் டுகெதரை என்ன மாதிரி கொண்டாடலாங்கிறதுக்கு ஐடியாஸ் வேணும்.// என்று அட்மின் http://www.arusuvai.com/tamil/node/16522 இழையில் கேட்டு இருந்தாங்க உமா. அங்க போய் ஐடியாஸ் கொடுக்கிறதை விட்டுட்டு இங்க சொல்லிட்டே இருந்தா எப்படி!! போங்க அங்க. ;))

‍- இமா க்றிஸ்

நானும் கோயம்புத்தூர் தான், Airport பக்கத்துல சித்ரா ல வீடு இருக்கு, அட்மின் அண்ணா எந்த இடம் வெய்க்க போறாருன்னு தெரியலய. நான் என் ஆபீஸ் பிரண்ட் கூட தான் வர போறேன்...... ரொம்ப ஆசை ஹா இருக்கோம்,,

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

madam am also ineterest to participate with my wife . bcz we live separately. its more enjoyful event for ours.

சௌமியன், நீங்க இல்லாமலா??? நான் கண்டிப்பா உங்கள பாக்கணும், ஏன்னா எல்லா இளை ல உம், நீங்க ஒரே statement தான் சொல்லி இருக்கீங்க. உங்க பேர அட்மின் அண்ணா எப்பவோ சேத்திட்டார். கவலைபடாம உங்க மனைவியும் கூட்டிட்டு வாங்க. கண்டிப்பா நீங்க நினைச்சதவிட ரொம்ப நல்லா என்ஜாய் பண்ணுவீங்க/பண்ணுவாங்க!!!!!!!!!!!!
கோயம்புத்தூர் ல நீங்க எங்க இருக்கீங்க??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எல்லோரும் எப்படி இருக்கிங்க
கொஞ்சம் வேலை அதனால் தான் அறுசுவை பக்கமே வரமுடியல

tks for yr reply madam .am live in tirupur near by coimbatore ok.

மேலும் சில பதிவுகள்