அட்மின் அவர்களின் கவனத்திற்கு... உதவுங்களேன்!!!

அன்மின் அண்ணா எனக்கு ஒரு பெரிய குழப்பம்... சிறிது கஷட்டமாகவும் உள்ளது. முன்பு இருந்த பழைய தளத்தில் ஓவ்வொரு உறுப்பினரின் பெயர் கீழும் அவர்களுக்கான பக்கத்தில் "சமீபத்திய பதிவுகள்" என்ற தலைப்பு வரும் அதில் உறுப்பினர் பதிவிட்ட தலைப்புக்கள் மற்றும் அவர் தொடங்கிய இழைகள் வரும். அதனால் சமீபத்தில் யாராவது புதிய பதிவிட்டால் உடனுக்குடன் தெரிய வாய்ப்பிருந்தது. தற்போது அது மிகவும் சிரமமாக உள்ளது. நாளொன்றுக்கு உருவாகும் இழைகளின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டபடியால் மன்றத்தில் சென்று கண்டிபிடிக்க மிகவும் கடினமாக உள்ளதால் அந்த பழைய வசதியை ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்குமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த புதிய தளம் வந்த உடனே எனக்கு அதுபற்றிய சந்தேகம் இருந்தது. நான் கொஞ்சம் பிசியாக இருந்ததால் என்னால் அடிக்கடி வர முடியாமல் போனதாலும் இது பற்றி கேட்க முடியாமல் போனது தற்போது அந்த "சமீபத்திய பதிவுகள்" -ஐ பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன்.

எனது சில பழைய இழைகளில் அதிக பதிவுகள் ஆனபடியால் அங்கே தொடர வேண்டாமென பல முறை கூறியும் அங்கே தொடர்ந்து பதிவுகள் வருவதால் என்னால் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியவில்லை.இதனாலேயே இந்த வேண்டுகோள். இது அனைவருக்கும் இருக்கும் குழப்பம் என நினைக்கிறேன்.
தயவு செய்து மாற்றம் செய்தால் அனைவருக்கும் பயன்படும் என நினைக்கிறேன்.

உமா இந்த லின்க்ல ஏற்கனவே அட்மின் அண்ணா சொல்லி இருக்காங்க
http://www.arusuvai.com/tamil/node/14773?page=9

மேலும் சில பதிவுகள்