பழைய பாடல்கள் சில வேண்டும்!!!

தோழமைகளே எனக்கு சில நாட்களுக்குள் அவசரமாக பழைய பாடல்கள் சில வேண்டும். எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்............. புதுசுன்னா "டான்"ன்னு சொல்லுவேன்...

அதனால என்னுடைய சில நிபந்தனைகளை கருத்தில் கொண்டு எனக்கு உதவுங்கள்.
1 ) கண்டிப்பாக கருப்பு வெள்ளை படங்களில் இருந்தால் நன்று.
2 ) கண்டிப்பாக கதாநாயகியர் மட்டும் பாடும் பாடலாக இருத்தல் வேண்டும்.
3 ) காதல்,இயற்கை என்று நல்ல கருத்துள்ள பாடலாக இருக்காலம். ஆபாசமில்லாததாக இருந்தால் மிக மிக நன்று.

இந்த மூன்றும் கண்டிப்பான நிபந்தனைகள் தயவு செய்து உதவுங்கள்.

சரோஜா தேவி, சாவித்திரி,பானுமதி இது போல இன்னும் நிறைய மிகவும் பழமை வாய்ந்த நாயகியர்கள் பாடி ஆடிய பாடலாக இருக்க வேண்டும்.நல்ல டிங்கு டிங்கு -ன்னு கொஞ்சம் நமக்கு சிரிப்பு தான் வரும் அந்த கால நடனத்தை பார்த்தா!!!!! அது போல நடனம் அமைந்த பாடலாக இருந்தால் மிகவும் நல்லது...

கொஞ்சம் தெரிஞ்சவங்க எல்லாரும் உதவுங்களேன்...
நான் சிலரின் பதிவை கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன்... என்னை ஏமாற்றாமல் வந்து எனக்கு பாடல் பாடுங்க...

கண்டிப்பாக படம் பெயரையும் சொல்லிடுங்க ப்ளீஸ்........

ஹாய் ,,, பழைய பாடல்கள் எப்பவும் இனிமை தாங்க,எனக்கு 24 வயசு அகுது நான் பழைய பாடல்கள் பற்றி பேசினாலே எல்லரும் கிண்டல் பண்ட்ராங்க ப,,பெண்கள் மட்டும் பாடும் பாடல் நல்ல இருக்கும் அது போல் ஆண்,பெண் சேர்ந்து பாடும் பாடல் கேடீங்க புதிய பாடல!அப்படின என்னனு சொல்லுவீங்க? kadaisila nan kekavanthathaiye maranthuden pa

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

ஹாய் பாப்ஸ் வுங்க அழகு குறிப்புகள் படித்திருக்கிறேன் மிகவும் அருமை.பழைய பாடல்கள் இனிமையாக இருக்கும் வுங்களை மாதிரி எனக்கு பிடித்த பாடல்கள் வுள்ளன.
தில்லானா மோகனம்பாள் சினிமாவில் - மறைந்திருந்து பார்க்கும்
காதோடுதான் நான் பேசுவேன்
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
வசந்த மாளிகை-கலை மகள் கை பொருளே
கண்ணா கருமை நிற கண்ணா
வுன்னை ஓன்று கேட்பேன்
சிட்டு குருவி முத்தம் கொடுக்க
லவ் பார்ட்ஸ் லவ் பார்ட்ஸ்
இன்னும் நிறைய பாடல்கள் இருக்கு பாப்ஸ் இதெல்லாம் என்னக்கு பிடித்தவை

ஹாய் உமா மேடம் நல்லா இருகீங்களா எனக்கும் பழைய பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்,

தில்லானா மோகனாம்பால் -படத்தில் வரும் மனோரம்மா ஆச்சி பாடும் பாட்டு ம்ம்ம்.....தில்லாலங்கடி ஆட்டம் போட்டு பாடுப்பாடுவேன்னு வரும், தப்பா இருந்தா கொஞ்சம் யோசிசுக்கோங்க.

கல்யாண பரிசு- உன்னைக் கண்டு நான் ஆட என்னக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி.

குங்குமம்- சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொல்லுதம்மா..

ஆலையமணி- மானாட்டம் தங்க மயிலாட்டம்..

கற்பகம்- பக்கத்துவீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்....

சித்தி- காலமிது காலமிது கண்ணுரங்கு மகளே... கலமிதை தவறவிட்டால் தூக்கமில்லை மகளேளே..

அலிபாபவும் 40 திருடர்களும்- கண்ணிலே இருப்பதேன்ன கணியிலமானே....

அலிபாபவும் 40 திருடர்களும்-சலாம்பாபு சலாம்பாபு என்னைபாருங்க தங்ககையினாலே காசை அல்லி வீசுங்க...

அலிபாபவும் 40 திருடர்களும்-அழகான அதற்கேத்த கண்ணுதான்...

இன்னும் யோசிச்சி சொல்லறேன்...

அன்புடன்
நித்யா

நலந்தானா - தில்லானா மோகனாம்பாள்

மாலை பொழுதின் மயக்கத்திலே நான்

நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா!

மலரே மலரே தெரியாதா என் மனதின் நிலைமை புரியாதா

பெண் மட்டும் பாடும் பாடல் நிறைய தெரியலை பாப்ஸ்

அன்புடன்
பவித்ரா

ஹாய் சிஷ்,,,, (sister )google a போய் பாருங்க நிறைய இருக்கும்

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
படம் - பச்சை விளக்கு இசை -விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர் - பி. சுசீலா

அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை
நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை

ஒரு பட்டு விரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்
ஒரு பட்டு விரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்
அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மையில் எழுந்து நின்றாள்
அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மையில் எழுந்து நின்றாள்
பாரடி பாரடி பாவையின் ஆசையை ஓரடி ஈரடி நடக்கின்றாள்
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை

அந்தத் தங்க பதுமை உடல் பொங்கும் இளமை
அந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
அந்தத் தங்க பதுமை உடல் பொங்கும் இளமை
அந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தாள்
அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தாள்
காதலன் காதலி நாடகம் ஆடிடும் நாளெனான்று போனது இளமையிலே
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
ஓ .... அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
----------
அன்புடன்
ஜெமாமி

சத்தியம் சிவம் சுந்தரம் ஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ..
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
--------
அன்புடன்
ஜெமாமி

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
படம் - பாலும் பழமும் இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடியவர் - பி. சுசீலா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
அன்புடன்
ஜெமாமி

ஆயிரம் பெண்மை மலரட்டுமே
படம் - வாழ்க்கைப்படகு
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர்கள் - பி. சுசீலா குழுவினர்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.....

குழு
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.....

ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமணம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்....

குழு
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.....

மன்னவனே ஆனாலும் ... மண்ணளந்து கொடுத்தாலும்...
பெண் மனதை நீ அடைய முடியாது
வாள் முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும்
உடலன்றி உள்ளமுனைச் சேராது..ஆ...ஆ...ஆ
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
------
அன்புடன்
ஜெமாமி

மேலும் சில பதிவுகள்