பழைய பாடல்கள் சில வேண்டும்!!!

தோழமைகளே எனக்கு சில நாட்களுக்குள் அவசரமாக பழைய பாடல்கள் சில வேண்டும். எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்............. புதுசுன்னா "டான்"ன்னு சொல்லுவேன்...

அதனால என்னுடைய சில நிபந்தனைகளை கருத்தில் கொண்டு எனக்கு உதவுங்கள்.
1 ) கண்டிப்பாக கருப்பு வெள்ளை படங்களில் இருந்தால் நன்று.
2 ) கண்டிப்பாக கதாநாயகியர் மட்டும் பாடும் பாடலாக இருத்தல் வேண்டும்.
3 ) காதல்,இயற்கை என்று நல்ல கருத்துள்ள பாடலாக இருக்காலம். ஆபாசமில்லாததாக இருந்தால் மிக மிக நன்று.

இந்த மூன்றும் கண்டிப்பான நிபந்தனைகள் தயவு செய்து உதவுங்கள்.

Sarvar sundharam -film
silai eduthan intha chinna pennuku.
Paalum pazhamum- film
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakava

ஹாய் பாப்ஸ் நலமா? எல்லோரும் உங்களுக்காக பழைய பாட்ட தேடிக் கண்டுப்பிடிச்சு கொடுத்துக்கிட்டு இருக்கோம். எல்லா பாட்டையும் நோட் பண்ணிக்கிட்டு எங்க எல்லாருக்கும் உங்க நினைவா இந்த பாட்டெல்லாம் சிடி போட்டு கொடுத்துடுங்க.

1. அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ - அண்ணன் ஒரு கோவில்
2. அழைக்காதே நினைக்காதே அவை தனிலே எனையே ராஜா - மணாளனே மங்கையின் பாக்கியம்
3. அத்தை மடி மெத்தையடி - கற்பகம்
4. இதோ இதோ என் நெஞ்சினில் ஒரே ராகம் - வட்டத்துக்குள் சதுரம்
5. ஏழு ஸ்வரங்களுள் எத்தனை ராகம்
6. சரவண பொய்கையில் நீராடும் - மனோரம்மா பாடுவாங்க படம் பேரு தெரியல
7. இலந்தப்பழம் இலந்தப்பழம் - எல்.ஆர் ஈஸ்வரி பாடின பாட்டு
8. சொன்னது நீதானா - நெஞ்சில் ஓர் ஆலயம்
9. நெஞ்சம் மறப்பதில்லை அந்த நினைவுவை இழப்பதில்லை -
10. சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி - வஞ்சிக்கோட்டை வாலிபன்
11. அழகான பொண்ணுதான் அதுகேத்த கண்ணுதான்-

பாப்ஸ் பாடல்கள் தெரியும் படம் அவ்வளவாக தெரியாது. நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா , தூதூ செல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று,

life is short make it sweet.

இயற்கை என்னும் இளைய கன்னி - சாந்தி நிலையம்

இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் - பல்லாண்டு வாழ்க

நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே - சவாலே சமாளி

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே - புதிய பறவை

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது -
ஊட்டி வரை உறவு

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பதிவு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ஜெ மாமி பாடலா பாடியே காட்டிட்டீங்க...நான் எதிர்பார்த்தோரில் நீங்களும் ஒருவர்....இன்னும் பலரை காணலை....
யாரும் வந்து எனக்கு பதிவு போடலன்னா.....நான் யார் கூடவும் இனிமே பேச மாட்டேன்.......சொல்லிட்டேன்...

ஏங்க யாரும் கூகிள் பண்ணி பார்க்க தெரியாம இங்கே பதிவு போடறதில்லைங்க!!! ஒரு விஷயத்தை படிச்சு தெரிஞ்சுக்கறதுக்கும்...வாய்வழியா சொல் கேட்டு தெரிஞ்சுக்கறதுக்கும் நிறைய வித்தியாம்(இங்கேயும் படிக்கணும் தான் ன்றாலும் இது பலரின் மனக்கருத்து) இருக்கு!!!........ இங்கே பொறுமையா உக்கார்ந்து பெரிய பெரிய பயனுள்ள தலைப்புக்கள் ,பதிவுகள் போடரவங்கல்லாம் சும்மா போடலை.... நாலு பேருக்கு பயன் படும்ன்னு தான் போடறாங்க...

யாராவது சொல்லுங்களேன்!!!
இல்லைன்னா கண்டிப்பா நான் எல்லோர் கூடையும் காய் விட்டுடுவேன்......

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
மயங்க தெரிந்த கண்ணே உனக்கு
உறங்க தெரியாதா
மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா
அன்பே மறைய தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா

எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா
இனிக்க தெரிந்த தமிழே உனக்கு கசக்க தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா
படற தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா… பனியே
மறையதெரியாதா…
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா

கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா… தலைவா
என்னை புரியாதா…
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா

<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>

Kumari.R

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

வெண்முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டுச் செல்லு
சொன்தை நீ அவரிடத்தில் சொல்லு
இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு

உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு
உயிரங்கே உடலிங்கே உள்ளதென்றும் சொல்லு
உயிரிழந்து மகிழ்விழந்து உருகுவதாய்ச் சொல்லு
உடலிழந்து போகுமுன்னே ஓடி வரவும் சொல்லு

ஆடுமயில் ஆடவில்லை என்று மட்டும் சொல்லு
அழகுநிலா சிரிக்கவில்லை என்பதையும் சொல்லு
வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு - நான்
வாடுவதை அவர் இதயம் வாடாமல் சொல்லு
வருவதற்குள் நீ விரைந்து வந்து பதில் சொல்லு

<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

Kumari.R

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..

பொன்னைத்தான் உடல் என்பேன் சிறு
பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை மணந்தேன் தொட்ட
கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளதால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்

எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஓரு கோடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
கொண்ட நாணத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்

உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..

<<<<<<<<<<<<<>>>>>>>>>>>

Kumari.R

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகளென்ன
தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன
ஆ..ஆ..ஆ…ஆ…ஆ…
நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகளென்ன
தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன
இங்கு விளையாடும் காதலரை காண வந்தாயோ
உன்னை அறியாமல் பார்த்தபடி திகைத்து நின்றாயோ

……….காண வந்த காட்சி என்ன………..

காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா
கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா
ஆ..ஆ…ஆ…ஆ…ஆ….
காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா
கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா
உன் வாசல் நிலையும் மறந்து விடு வெள்ளி நிலாவே
அந்த மேகத்திலே மறைந்துவிடு வெள்ளி நிலாவே

………..காண வந்த காட்சி என்ன………

<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>

Kumari.R

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்