பழைய பாடல்கள் சில வேண்டும்!!!

தோழமைகளே எனக்கு சில நாட்களுக்குள் அவசரமாக பழைய பாடல்கள் சில வேண்டும். எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்............. புதுசுன்னா "டான்"ன்னு சொல்லுவேன்...

அதனால என்னுடைய சில நிபந்தனைகளை கருத்தில் கொண்டு எனக்கு உதவுங்கள்.
1 ) கண்டிப்பாக கருப்பு வெள்ளை படங்களில் இருந்தால் நன்று.
2 ) கண்டிப்பாக கதாநாயகியர் மட்டும் பாடும் பாடலாக இருத்தல் வேண்டும்.
3 ) காதல்,இயற்கை என்று நல்ல கருத்துள்ள பாடலாக இருக்காலம். ஆபாசமில்லாததாக இருந்தால் மிக மிக நன்று.

இந்த மூன்றும் கண்டிப்பான நிபந்தனைகள் தயவு செய்து உதவுங்கள்.

பாப்ஸ்
எனக்கு பழைய பாடல்கள் கேக்க ரொம்ப பிடிக்கும். ஆனா எதுவும் சொல்ல தெரியல.
எனக்கு என் அம்மா பாடுற பாட்டு சில பிடிக்கும்

அத்தை மடி மெத்தையடி -- பாசமலர்

சின்னஞ்சிறு கண்மலர் -- (படம் பேர் மறந்து போச்சு.. சீதாம்மா கூட சொன்னாங்க இந்த பாட்டு பத்தி..)

ராமன் எத்தனை ராமனடி

மனம் படைத்தேன் உன்னை மனப்பதற்கு - கந்தன் கருணை

சொல்லச்சொல்ல இனிக்குதடா -- கந்தன் கருணை

மயக்கம் என்ன மவுனம் என்ன -- (வசந்த மாளிகை னு நினைக்கிறேன் சரியா தெரியல)

கலைமகள் கைப்பொருளே -- வசந்த மாளிகை

இப்படி நிறைய இருக்கு. அம்மாஅடிக்கடி பாடுவாங்க. நானும் என் பையனுக்கு இதுல சில பாட்டு தாலாட்டு பாடிருக்கேன். அவ்ளோ தான்பா எனக்கு தெரிந்த வரைக்கும். கவலைப்படாதீங்க. தோழிகள் வந்து சொல்லுவாங்க.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பாடல் யோசிக்கறது இருக்கு பாருங்க, அடா அடா அதுவும் ஒரு குஷி தான். மூலைக்கும் நல்ல வேலை. இந்த பாடல்கள் உங்களுக்கு உதவுமா என பாருங்கள்

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என என்ன வேண்டும்
காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோ
நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா
மயங்குகிறாள் ஒரு மாது
முத்தான முத்தல்லவோ, முதிர்ந்து வந்த முத்தல்லவோ
சொன்னது நீதானா, சொல் சொல் சொல் என் உயிரே
தமிழுக்கு அமிழ்தென்று பேர், அந்த தமிழின்ப தமிழெங்கள் உயிருக்கு நேர்
சிங்கார வேலனே தேவா
கண்ணா கருமை நிற கண்ணா, உன்னை காணாத கண் இல்லையே
வா வாத்தியாரே ஊட்டாண்ட, நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
அத்தான் என் அத்தான், உன்னை எண்ணித்தான் எப்படி சொல்வேனடி
மனம்படைத்தேன் உன்னை நினைப்பதற்கு, நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
முருகனென்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும்
அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு
பூ பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ பூவிலே சிறந்த பூ
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே
கண்ணன் வருவான் கதை சொல்லுவான், வண்ண வண்ண தொட்டில்
சின்ன பாப்பா எந்தன் செல்ல பாப்பா சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா
மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டை சுற்றும் பூனைக்குட்டி
கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும், வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
நான் சத்தம் போட்டு தான் பாடுவேன், உன்னை சந்தித்தேதான் தீருவேன்

இதுவும் கடந்து போகும்.

பாப்ஸ்,
கருப்பு வெள்ளை பாடல்கள்:
மல்லிகை என் மன்னன் மயங்கும்-தீர்க்கசுமங்கலி
கங்கைகரை தோட்டம்-வானம்பாடி
நானே வருவேன்-யார் நீ
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே-ஆலயமணி
அமுதை பொழியும் நிலவே-தங்கமலைரகசியம்
இதயவீணை தூங்கும் போது-இருவர் உள்ளம்
கண்கள் இரண்டும் என்று-மன்னாதி மன்னன்

கருப்பு வெள்ளை பாடல்கள் உடன் நிறைய ஈஸ்ட்மென்கலர்பட பாடல்களும் நிறைய தோழிகள் சொல்லியிருக்காங்க.அதுவும் சொல்லலாமானு சொல்லுங்க.

அன்புடன்
நித்திலா

அன்புடன்
நித்திலா

நன்றி அனைவருக்கும்...

மன்னிக்கனும் பாப்ஸ் மேடம் நான் உங்க பதிலை இப்போ தான் பார்தேன் எல்லரும் பொருமைய பதிவு போடறாங்க தான் நான் இல்லனு சொல்லலை ஆனால் எல்ல பாடலையும் போட்ரது இல்ல ஏன்ன மறந்து இருக்கலாம் அதான் அப்படி சொன்னென்,, ஏன்ன நீங்க அவசரமனும்,, நிபந்தனைகலோடும் பதிவை போட்டு இருக்கீங்க அதான் சொன்னேன்,,, அதும் இல்லாமல் கூகிளா பாக்கதெரியாதுனும் நான் சொல்லல அறுசுவையோட பயனை நான் அறியாமல் பதிவு போடல,,,, நீங்க சிலரின் பதிவை எதிர் பார்த்து இருக்கும் போது நான் பதிவு போட்டது தவறு தான்,, (சிறுத்துரும்பும் பல் குத்த உதவும் அதனால யரோட பதிவையும் தவறு இல்லதபோது உதாசீனம் படுத்ததீங்க)

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோ
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை
கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

தனிமையில் கானம் சபையிலே மோனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோண்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்