குடகு இட்லி

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கப்
சாதம் - ஒரு கப்புக்கு சற்று குறைவாக
தேங்காய் - துருவல் அரை கப்
சர்க்கரை - 1/3 கப்
ஃப்ரூட் சால்ட் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

அரிசியைக் களைந்து சுமார் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
தேங்காயுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து, பிழிந்து பால் எடுக்கவும்.
அரிசி, சாதம், உப்பு, சர்க்கரை முதலியவற்றுடன் தேவையான அளவு தேங்காய்ப் பால் விட்டு கெட்டியாக இட்லிக்கு அரைப்பது போல் அரைக்கவும்.
அரைத்த மாவினை சுமார் 10ல் இருந்து 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
வார்ப்பதற்கு முன்னால், இட்லிப்பானையில் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும்.
ஒரு வட்டமான ( 9") பாத்திரத்தில் நன்றாக எண்ணெய் சதும்பத் தடவவும். அதைத் தண்ணீரில் சூடு ஏறும்படி வைக்கவும்.
மாவு மிக கெட்டியாக இருந்தால் சிறிது தேங்காய்ப் பால் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
மாவை வேக விடுவதற்கு முன்னால், அதில் ஒரு தேக்கரண்டி ஃப்ரூட் சால்ட் போட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு, மாவை நன்றாகக் கலந்து உடன் வேகவைக்கவும். இது சுமார் 20 நிமிடம் வேக வேண்டும்.
திறந்து ஆறின பின், துண்டு போடவும். நல்ல காரமான சட்னியுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்