பயனுள்ள அரட்டை பாகம் 4

ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்த விஷயம். இந்த அரட்டைக்கு தலைப்பா வச்சுருக்கேன். அதாவது....

தலைப்பு - சிக்கனம்

எப்படிலாம் சிக்கனமா இருக்கோம். இருக்கனும்னு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். ஆனா தெரியாத சிலருக்கு நாம் சொல்லி கொடுக்கலாம் இல்லையா. சின்ன சின்ன டிப்ஸ் கூட அவங்களுக்கு உதவலாம்.

2 வது தலைப்பு சுற்றுலா வழிகாட்டி

நகை விலையெல்லாம் உயர்ந்துக்கொண்டு வருகிறது. இந்த வேளைகளில் நகை வாங்குவது சிரமம் தான்.

அப்படிபட்டவர்கள் நகை சீட்டு நம்பகமான கடைகளில் போடலாம். சேமிக்கும் சிறு சிறு தொகையை மாதமொரு முறை கட்டினால் விஷேஷ தினங்களில் நகையாக பெற்றுக்கொள்ளலாம். ஒரு முறை கஷ்ட்டப்பட்டு கட்டி வாங்கிவிட்டால் போதும். பிறகு அதே மாதிரி கட்டி அடுத்த நகை வாங்க ஆசை வரும். அப்படியே நகை சேர்க்க ஆரம்பிக்கலாம்.

என் பெரியம்மா தன் வளையலை அரசு வங்கியில் (அங்கு தான் வட்டி குறைவு) அடகு வைத்து நகை வாங்குவார். தனக்கு கிடைக்கும் சிறு சிறு தொகையை அப்படியே தன் சேவிங்க்ஸ் புக்கில் போடுவார். அந்த நகையை மீட்க வேண்டுமே என்ற எண்ணத்திலேயே பல செலவுகளை குறைத்து சிக்கனப்படுத்துவார். இப்படியே செய்து நகை சேர்த்து தன் மகளுக்கு நகை சேர்த்தார். இப்போதும் இது தொடர்கிறது. முதலில் வாங்கியதால் ஏற்பட்ட ஆர்வம் அவரை சேர்க்க உதவியாக இருந்தது.

நகை சீட்டில் நகைகடைகாரர்களே வட்டி, பரிசு என கொடுப்பார்கள் தான். ஆனால் விலையேற்றத்தில் குறைந்த வட்டியே பரவாயில்லை.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சலாம் ஆமிம்மா
பல்லாவரம் சந்தைக்கு நானும் போவேன் நான் வாங்குவதில் முக்கியமானது
1 காக்கா விரட்ட (கவட்டை)இது எதுக்குன்னா நாம் காயவைக்கும் பொருள் பக்கத்தில் இதை வைத்து விட்டால் காக்கா வராது
2 புக் ரமணிசந்திரன் நாவல் எனக்குரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பபுடிக்கும் மத்தநாவலும் வாங்குவேன்
3 குழம்பு வடகம் நல்லா இருக்கும்
4 நாட்டுக்கோழி முட்டை கிடைக்கும்

நல்ல இழை ஆமினா.,

சிக்கனத்திலேயே சேமிப்பும் வரதுனால இங்க சேமிப்பு பத்தி சொல்றேன். எனக்கு தெரிந்த ஒரு நபர் கடையில் என்ன பொருள் வாங்கினாலும் ( கருவேப்பிலை கூட ) குறைத்து தர சொல்லி வாங்குவார். அப்ப ஐந்து காசு, பத்துகாசு எல்லாம் புலக்கத்தில இருந்தது. துணிக்கடை, மளிகைக்கடை, டையலரிங்கடை இப்படி எல்லா இடத்திலேயும் பேரம்தான். இதிலென்ன விஷேசம் நாங்களும் அப்படிதான் பண்றோம்னு நீங்க சொல்றது கேக்குது நிக்க., அவங்க அந்தமாதிரி மிச்சம் பண்னின காசை உண்டியல்ல போட்டு வாரவாரம் போஸ்ட் ஆபிஸ் அடவுண்ட்ல போட்ருவாங்க;) மூணு அகவுண்ட் வைச்சிருக்காங்க ஒன்னு அவங்க பேர்ல, மத்தது பொண்ணுங்க பேர்ல. முதல் வாரம் மிச்சம் பிடிச்சது முதல் பொண்ணு அகவுண்ட்ல ஏன்னா முக்காவாசி மளிகை சாமானம் அது இதுன்னு அந்த வாரத்திலதான் வாங்குவோம். இரண்டாவது வாரம் இரண்டாவது பொண்ணுக்கு ஆபுறம் எஞ்சிய்ருக்கிற மீதி இரண்டு வாரம் அந்தம்மா பேரில் இருக்கிற அக்கவுண்ட்டுக்கு;) இப்படி அவங்க சேர்த்தினது லட்சக்கணக்கில்.
அவங்க கணவர் பெரிய ஃபேக்டரி வைச்சிருக்காங்க. காசுக்கு அவங்களுக்கு குறைச்சல் இல்லை. சொந்தமான பெரிய வீடு இருக்கு . அவங்க மூத்த பொண்னு யு.எஸ் படிச்சிட்டு இருந்தாங்க இப்ப கல்யாணம் ஆகியிருக்கும், தங்கையும் அங்க போகதான் முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க, போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
எனக்கும் அவங்க ஃபோஸ்ட் ஆபிஸ்ல அகவுண்ட் ஓபன் பண்ணிக்கொடுத்திருக்காங்க. நான் மாதம் மாதம் கட்டும் அகவுண்ட் மட்டும் வைச்சிருக்கேன். இவங்க அளவுக்கு எனக்கு விலை குறைக்க சாமார்த்தியம் இன்னும் வரலை;( அதுவும் இல்லாம நான் இருக்கிற இடத்தில் எல்லாமே ஃபிக்சட் ரேட்தான். ஊருக்குப் போனா அப்பப்ப ட்ரை பண்ணுவேன்;) எனக்கு தெரிஞ்சு இது நல்ல முறை. மத்தபடி கரண்ட் , தண்ணி, கேஸ் இந்தமாதிரி விஷயம் எல்லாம் அம்மா சொல்லிக்கொடுத்தமாதிரி ஓரளவுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன், இங்க தோழிகளோட கருத்தையும் படிச்சிட்டு இருக்கேன்.

இன்னும் என் ஃப்ரண்ட்ஸ் வீட்டில என்னென்ன மாதிரி சிக்கனம் பண்ணுவாங்கன்னு எனக்கு தெரிஞ்சத வந்து சொல்றேன்.

Don't Worry Be Happy.

பாத்திமாம்மா வஸ்ஸலாம்

சந்தைக்கு போவீங்களா? எங்கே இருக்கு உங்கவீடு சென்னையில்?

நாட்டுக்கோழி முட்டை வாங்கும் போது கவனமா இருங்க. அதுல டெக்னிக்கலா மாத்தியிருப்பாங்க.

சுடு நீரில் தேயிலையை அதிகமாக சேர்த்து கசாயத்தை ஆர வைப்பார்கள். அப்படி ஆறிய நீரில் ப்ராய்லர் முட்டையை ஓர் நாள் முழுவதும் வைத்தால் கலர் மாறியிருக்கும்.

(எங்கம்மா சொன்னது. நானும் முயற்சித்து பார்த்து என் தாய்மாமாவிடம் விற்று லாபம் சமாதித்திருக்கிறேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஜெயா நல்ல ஐடியா சொல்லியிருக்கீங்க. நான் லக்னோ வந்து மிஸ் பண்ண விஷயம் என்றால் அது பேரம் பேசுவது தான். மொழி தெரியாததால் அவர்கள் சொல்லும் விலையில் வாங்கியாக வேண்டும். என்னவரோ பேரம் பேசினால் அடுத்த முரை வெளியில் அழைத்து செல்ல மாட்டேன் என முதலிலேயே கண்டிஷம் போட்டு தான் கூடிட்டு போவார். அவர் வாங்கும் பொருட்களை பார்க்கும் போது வயித்தெரிச்சலா இருக்கும். இந்த ரம்ஜானுக்கு சென்னையில் இருந்திருந்தால் துணியில் மட்டும் 5 வரை தேர்த்திருப்பேன். இங்கே பெரிய மாலுக்கு போனதால் பிக்ஸ்டு ரேட்:(

எல்லாரும் பேரம் பேசுவதை தவறாக சொல்லலாம். ஆனால் உண்மையிலேயே யாரும் அடக்கவிலையை சொல்வதில்லை. விலைக்குசற்று அதிகமாகவே தான் சொல்வார்கள். நாம் பேரம் பேசுவதில் தவரே இல்லை. கட்டுபடியானால் அவர்கள் தந்துவிட போகிறார்கள். ஏன்னா அவர்களும் ஏமாளி இல்லையே ....

அதே போல் காய்கறிகளை பக்கத்து கடை, பெட்டி கடை என வாங்காமல் நேரா மார்கெட் போய் வாங்கினா கண்டிப்பா சிக்கனப்படுத்தலாம். அவங்களும் மார்கெட்ல இருந்து தான் வாங்கிட்டு வருவாங்க. அதுனால கூட வச்சு தான் விப்பங்க. அதை நாமே கடையில் நேரா போய்வாங்கலாமே. நாம் சென்னையில் இருக்கும் போது வார சந்தையில் தான் தேவையான காய்கறிகளை வாங்கிக்கொள்வேன். காசும் மிச்சம். நடந்துபோவதால் வாக்கிங் போவது போலவும் இருக்கும்.

ஜெயா உங்களுக்கு தெரிஞ்ச மற்ற டிப்ஸும் சொல்லுங்க......

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா பயனுள்ள த்ரெட்னு ஆரம்பிச்சு சிக்கனம்னு ஒரு டாபிக்க கொடுத்து பேச சொல்லற மாதிரி இருக்கு. இங்க சிக்கனத்த பத்தி சொன்னவங்க எல்லோருடைய டிப்ஸ்மே சூப்பர். எதோ என்னால முடிஞ்சது தினந்தோறும் சமைக்கும் சமையலில் அரிசி மற்றும் பருப்பு இதனை ஒரு கைப்பிடி அளவு தனித்தனியாக எடுத்து சேர்த்து வைக்கவும். சீக்கிரம் வீணாகாத காய்கறிகளாக இருந்தால் ஒரு ஒரு காய்கறிகளை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். (வெங்காயம், தக்காளி, உ.கிழங்கு, கேரட்....). இதுமாதிரி ஒவ்வொரு நாளும் சேர்த்து வைக்கும் போது ஒரு வாரத்தின் ஒருநாளில் இந்த அரிசி, பருப்பு, காய்கறியை வைச்சு கூட்டாஞ்சோறு, பருப்புசாதம், காய்கறி சாதம் இப்படி ஏதாவது செய்து கொடுக்கலாம். அவசரத்து என்ன சமைக்கலாம் என்று யோசிக்கும்போது இந்த காய்கறி,பருப்பு வைச்சு ஈஸியா சமைத்து விடலாம். (அடிக்க வந்துடாதீங்க ஆமினா எங்க அம்மா நான் சமைக்கும் போது எனக்கு சொல்லுவாங்க அதான் இங்கு சொன்னேன்.)

இந்த சுடிதார், புடவை போன்ற துணிகளை பழசாக்காமல் எப்போதும் புதுசு போலவே சிலர் பேர் வைச்சு இருப்பாங்க. அதுக்கு உங்கக்கிட்ட ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க ஆமினா. மற்ற ப்ரெண்ட்ஸ் சொல்லவும்.

துணிமணிகள் புதுசாவே இருக்கணும்னா துவைத்த பின் துணிகளை கண்டிஷனரில் முக்கி எடுத்தால் துணி புதிதாகவே இருக்கும். இது என் அனுபவம். பத்து வருடங்களுக்கு முன்பு எடுத்த சுடிதார் கூட புத்தம் புதுசாக இன்னும் என்கிட்ட இருக்கு. (ஃபேஷன் போய்டுச்சுதான் ஆனாலும் அவற்றை தூக்கிப் போட மனசு இல்லை அவ்வளவு புதுசா இருக்கு)

சுட்டெரிக்கும் வெயிலில் துணிகளை உலர்த்த கூடாது. முடிந்த வரை சுடிதார் மற்றும் காஸ்ட்லி புடவைகளை கைகளால் துவைப்பதே நல்லது. பிரஷால் தேய்ப்பது அடித்து துவைப்பது இவை எல்லாம் துணிகளை நாசமாக்கும்.

கறை ஏதும் பட்டு விட்டால் அந்த இடத்தை மட்டும் முதலில் நன்றாக கசக்கி கறை நீக்கிவிட்டு சாதாரணமாக துவைக்க வேண்டும்.

கறை நீக்க ஒரு டிப்ஸ் படித்தேன். நம் மூத்த உறுப்பினர் மனோ அம்மா சொன்னது. கறை பட்ட இடத்தின் மேல் ப்ளாட்டிங் பேப்பர் வைத்து அதன் மீது அயர்ன் செய்தால் கறை நீங்கி விடும்னு சொல்லியிருக்காங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி தேங்க்ஸ் டிப்ஸ் கொடுத்ததற்கு தலைக்கு தான் கண்டிஷனர் கேள்விப்பட்டு இருக்கேன். துணிக்குமா அதுபேரு என்ன.

ஆஹா எல்லோருடைய டிப்ஸ்ம் சூப்பர்.
எனக்கு தெரிந்த சிலவற்றை நான் பகிர்ந்துக்குறேன். கேஸ் வீணாகாமல் சமைக்க கெளரி நிறைய டிப்ஸ் கொடுத்துட்டாங்க நான் ஒன்னே ஒன்னு சொல்றேன் எப்போதுமே நாம வைத்து சமைக்கும் பாத்திரத்தை விட அதிகமான அளவில் எரியாமல் பார்த்துக் கொள்ளலாம். சிறிய பாத்திரமாக இருக்கும் சீக்கிரம் சமையல் முடியனும்டு அதிக தீயில் வைத்து செய்வாங்க பாதி தீ வெளியில் தான் போகும். கேஸ் வேஸ்ட் தானே. பாத்திரத்தின் அகலத்தின் உள்ளேயே தீ எரிவது போல் பார்த்துக் கொள்ளவும்.

ஆமினா சொன்னது போல எப்போதுமே எந்த பொருள் வாங்குவதாக இருந்தாலும் அதற்கான உள்ள மார்க்கெட்டிலோ அல்லது கடைகளிலோ சென்று வாங்கலாம் கடை தூரமாக இருக்குனு சில்லரை வியாபாரிகளிடமே வாங்கினால் நமது பணம் விரயம் தான் ஆகும். அவர்கள் அவர்களுடைய லாபத்திற்காக சற்று அதிக விலை வைத்து தான் விற்பார்கள்.

மின்சாரம் உபயோகிப்பது, நமக்கு தேவையான நேரங்களில் பயன்படுத்திக் கொண்டு மற்ற நேரங்களில் அணைத்து வைக்கலாம். வீடு கட்டும் போதே நல்ல காற்றோட்டமான வெளிச்சம் அதிகம் இருக்கும்படியாக கட்டிக் கொண்டால் வசதியாக இருக்கும். வாடகை வீடு என்றால் ஒன்று செய்யமுடியாது அப்போது தேவைக்கேற்ப உபயோகிக்கலாம். நாம் ஒரு ரூமுக்கோ, ஹாலுக்கோ, கிச்சனுகோ சென்று திரும்பி வரும் போன் பேன் லைட் சுவிட்சை அணைத்துவிட்டு வந்தால் நம்மை பார்த்து நம்ம பிள்ளைகளும் செய்ய ஆரம்பிப்பார்கள்.
எங்கள் தெருவில் ஒரு குடும்பம் இருக்கு மின்சாரத்தை மிச்சம் செய்றாங்களாமா 6 மணிக்கு லைட் போட்டுட்டு அரைமணி நேரம் கழிச்சு அணைச்சுடுவாங்க. அப்ப்பறம் குடும்பமே எமர்ஜன்சி லைட் வெளிச்சத்துல தான் இருப்பாங்க. அந்த வீட்டில் கணவன், மணைவி, ஒரு பாட்டி தான் இருப்பாங்க அதற்காக இப்படிலாமா மிச்சம்பிடிப்பாங்க இதை பார்க்க சிரிப்பு தான் வரும். இதற்கு பேரு சிக்கனம் இல்ல கஞ்சத்தனம்.

ட்ரெஸை புதிதாகவே வைத்துக் கொள்ள, அதை வைத்துக் கொள்ளும் ஆட்களை பொறுத்தும் இருக்கிறது. சிலர் இருக்காங்க அப்படியே எங்க பார்த்தாலும் உட்கார்ந்துடுவாங்க, என்ன சாப்பிட்டாலும் ட்ரெஸ்லயே துடைச்சுப்பாங்க. இப்படி இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். ட்ரெஸ் துவைத்து நன்கு அலசி சுருக்கம் இல்லாமல் காயப் போட்டு எடுத்தாலே நிறைய நாட்கள் இருக்கும். கவிசிவா சொன்னது போல் நிழலில் உலர்த்தலாம்.
ஆமாம் கவி என்கிட்டயும் சில ட்ரெஸ் இருக்கு 7,8 வருஷமாக அப்படியே புதிதாக சைஸ் தான் மாறிடிச்சு.

வினோ அதன் பெயரை சொல்ல மறந்துட்டேனா?! இந்தியாவில் comfort என்ற பெயரில் கிடைக்குதேப்பா அதான். வாஷிங் மெஷினில் இதை ஊற்றவென்றே ஒரு கம்பார்ட்மெண்ட் இருக்கும். அதில் ஊற்றிவிட்டால் கடைசிமுறை அலசும் போது இது தண்ணீரோடு கலந்து விடும்.

பொதுவான பெயர் Fabric conditioner!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்