பயனுள்ள அரட்டை பாகம் 4

ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்த விஷயம். இந்த அரட்டைக்கு தலைப்பா வச்சுருக்கேன். அதாவது....

தலைப்பு - சிக்கனம்

எப்படிலாம் சிக்கனமா இருக்கோம். இருக்கனும்னு எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். ஆனா தெரியாத சிலருக்கு நாம் சொல்லி கொடுக்கலாம் இல்லையா. சின்ன சின்ன டிப்ஸ் கூட அவங்களுக்கு உதவலாம்.

2 வது தலைப்பு சுற்றுலா வழிகாட்டி

சலாம் ஆமி நீசொன்ன மாதிரி செய்தேண்டா தேங்ஸ் ஆமிம்மா

வழக்கம் போல் பயனுள்ள தலைப்பு தான்.. நான் ஒரே ஒரு டிப்ஸ் மட்டும் சொல்லிட்டுப் போறேன் இப்போதைக்கு. என் மாமியார் கடை பிடிக்கும் முறை இது..

பருப்பு எல்லாம் பாத்திரத்துலதான் வேக வைப்பாங்க.. ஆனா அந்த பாத்திரத்துமேல இன்னொரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் தேவையான அளவு வைத்து சூடு பண்ணிக்குவாங்க.. இந்த சுடு நீரை அரிசி,குழம்பு ஆகியவற்றுக்குப் பயன் படுத்திக்குவாங்க.. நேரடியா அடுப்பில் வைத்து தண்ணீர் கொதிக்க வைப்பதை விட இந்த நீராவி முறையில் சீக்கிரமாகவே தண்ணீர் சூடாகிடும்..

இன்னொரு விஷயம் சந்தைக்குப் போகும் போது கொஞ்சம் வெடிச்ச தக்காளிகளாப் பொறுக்கி குறைந்த விலைக்கு வாங்கி வந்து அன்றைக்கோ அல்லது அடுத்த நாளோ அவற்றை வைத்து தக்காளி சாதம் செய்திடுவாங்கலாம்.. விலையும் குறைவு.. வீணாகவும் போகாது..இப்போ நாங்க இருக்கும் இடத்தில் எல்லாம் சந்தையும் இல்லை..பேரம் என்ற பேச்சுக்கே இடமும் இல்லை.

இன்னொரு அத்தையோட(இவங்க அப்பாவோட தங்கை) அமைதியையும் கனிவா பேசுறதையும் பார்த்து சும்மாவே ரெண்டு முறுக்கு,நாலைந்து தக்காளி,காய்னு எல்லாம் கூட தருவாங்க கடைக்காரங்க.. இந்த அத்தை கூட நானும் சந்தைக்குப் போயிருக்கேன்..ஹூம்ம்...சந்தைல பொருள் வங்கும் சுகமே தனிதான்.. :)

சாந்தினி

நானும் கூட காயாக தக்காளி தனியாக வாங்கிட்டு ஒதுக்கி வைத்திருக்கும் தக்காளியை குறைந்த விலைக்கு வாங்கி தக்காளி தொக்கு,தக்காளி சாதம் என பண்ணுவேன். தக்காளியை அரைத்து ப்ரீசலில் வைத்துக்கொள்வேன்.

அதே போல் மழை காலங்களில் வெங்காயம் அதிக விலைக்கு விற்பார்கள். மழைகாலம் வர ஆரம்பிக்கும் போதே 2 முதல் 3 கிலோ வரை வாங்கி காய்ந்த இடத்தில் பரத்தி வைத்தால் கெடாது. விலை ஏறும் என்ற கவலையும் இல்லை.

காய்கறிகள் சில நேரம் கெட்டுவிட்டால் அதை உடனே குப்பை தொட்டியில் போடாமல் மண்பகுதியில் போட்டால் அது வளர்ந்து பயன் தரும். உதாரணத்துக்கு பழுத்த மிளகாய், உடைந்த தக்காளி, முற்றி வதங்கிய வெண்டை, அழுகிய கத்திரி என போடலாம்.

மண்பானை வாங்கி வைத்துக்கொண்டால் கோடைகாலங்களில் குளிந்த நீர் கிடைக்க உதவும். அதற்காக பிரிட்ஜில் வைத்து மின்சாரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ப்ரிட்ஜில் வைக்கும் போது ப்ளாஸ்டிக் கண்டெய்னரில் உணவை அடைத்து வைக்க வேண்டும். எவர் சில்வர் பொருட்கள் அதிகமாக மிசாரத்தை இழுக்க வாய்ப்புள்ளதாம்.

பால் காய்ச்சும் போது அதன் ஆடையை வடிகட்டி கீழே போடாமல் தனியே எடுத்து சேமித்து வைக்கலாம். பாயாசம்,அல்வா செய்யும் போது சேர்த்தால் சுவையும் கூடும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

2 வது தலைப்பு சுற்றுலா வழிகாட்டி

வனிதா அக்கா சிரியா கட்டுரை படிச்சு எல்லாருக்கும் ஆசையா இருக்கலாம்.நாமலும் இப்படி கட்டுரை எழுத வேண்டும்னு. அப்படி தானே? இதை ஒரு வாய்ப்பாக கருதி உங்க அனுபவங்களை கொட்டுங்க பாக்கலாம்

தலைப்பு இது தான். நீங்க எங்களை ஊர் சுற்றி காமிக்கனும். அதாவது இது ஊர் பெருமை பற்றிய விஷயம் இல்ல. நீங்க போன இடம் பற்றி எங்களுக்கு சொல்லணும். அதை வைத்து தெரியாத இடங்களை நாங்க தெரிஞ்சுகிட்டு எங்களவர் கிட்ட சொல்லி நச்சரிக்கணும்.

விடுமுறை தினங்களில் நாங்க ஊர் சுற்ற நீங்க வழிகாட்டியா இருக்கணும் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மதுரையில் அதிசயம்

தலைப்பு பாத்ததும் ஆச்சர்யத்தில் வந்துருப்பீங்க தானே?!!

மதுரையில் பரவை என்னும் அழகான இடத்தில் அமைந்துள்ள வாட்டர் பார்க் தான் அதிசயம். டிக்கெட் வாங்கிட்டு உள்ளே நுழையும் போதே அதிசயம் காத்திருக்கும். அதன் பிறகு வாட்டர் பார்க், ட்ரை பார்க் என இரண்டாக பிரித்திருப்பார்கள். கோடைகாலத்தில் நாங்கள் சென்றதால் நேரா வாட்டர் பார்க் தான். எங்கே பார்த்தாலும் தண்ணின்னு புல்லா தண்ணில தான் இருந்தோம். செயற்கை கடல், குற்றால அருவி தான் முக்கியமான இடங்கள். சென்னையில் கிஸ்கிந்தா, எம்ஜிஎம் என பல இடங்களுக்கு போனாலும் கூட எனக்கு அதிசயம் போல வரவில்லை. எங்க வீட்டு குட்டீஸ்களும் அது தான் சொல்லுதுங்க. மதுரைக்கு வந்தா கண்டிப்பா அதிசயத்தை மிஸ் பண்ணாதீங்க.....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

oh
wat a nice job
yam petra inbam peruga vaiagam
so u shared vit ur friends
vry gud
ha ha.....

LIVE ND LET LIVE

Pallavara த்தில்..சந்தை எங்கு உள்ளது
.. correct இடம். sollugo..pls..

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

நிரையா போர் தேவை இல்லம சமைச்சி வினா ஆகுவக. அதுக் பதில் தேவை அனத்த சமைக்கிரதும் ஒரு வித சிக்கனம் தான்.

கேரளாவில் கோட்டயம் அருகே உள்ள இடுக்கி டேம்,குமரகம் ஹவுஸ் போட் பயணம்,பறவை சரணாலயம் எல்லாமே பசுமையும்,இனிமையும் நிறைந்தது ஆகும்.
போய் ஜாலியாக அனுபவிங்க!

சிரிப்பே சிறந்த மருந்து

யசோதா
இப்ப தான் உங்க பதிவு பார்த்தேன். பல்லாவரம் பஸ்டாண்டில் இறங்கி அங்குள்ளவர்களிடம் கேட்டாலே சொல்லுவார்கள். பஸ்ஸ்டாண்ட் பின்னால் உள்ளது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்