தேதி: October 10, 2010
பரிமாறும் அளவு: 2 பேருக்கு!
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
* பப்பாளிகாய் (சிறியது) -1
* பால்-1 கப்
* ஜீனி - 1/4 கப்
* ஏலப்பொடி (சிறிதளவு)
* கடுகு -1/4 டீஸ்பூன் (தாளிக்க)
* எண்ணெய் - 1 டீஸ்பூன் (தாளிக்க)
பப்பாளியை தோல் மற்றும் விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலுடன் ஜலம் சேர்த்து அதில்
பப்பாளி துண்டுகளை போட்டு நன்கு வேக வைக்கவும்
நன்றாக குழைய வெந்தவுடன் ஜீனி சேர்த்து கிளறவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளிக்கவும்
ஜீனி நன்றாக கரைந்தபின் ஏலப்பொடி சேர்த்து தாளித்த கடுகு சேர்த்து
நன்றாக கிளறி எடுத்து வைக்கவும்.
இப்போது பப்பாளி காய் பால் கூட்டு தயார்.
உ
இது எங்காத்துல நான் அடிக்கடி பண்ணறது!
பப்பாளி உடம்புக்கு ரொம்ப நல்லது!
ஆனா குழந்தேள் அதை சாப்பிட மாட்டா!
அதனால இப்படி பண்ணி கொடுக்க ஆரம்பிச்சென்!
Comments
நன்றி!
உ
முதன் முதல் நான் அனுப்பிய ஸ்வீட்டை (!?)
வெளியிட அனுமதித்த அட்மின் பாபு சாருக்கு என் நன்றி!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
பப்பாளி பால் கூட்டு
மாமியின் முதல் குறிப்பு முதலில் பதிவு போடுவது நான் தான்.. ஹைய்யா....
மாமி பப்பாளி பால் கூட்டு.. ம்ம் ஆரம்பமே இனிப்பா. அசத்துறேள் போங்கோ.. எனக்கு பப்பாளி காய் இங்க கிடைக்குமான்னு தெரியல.. எனக்கு பப்பாளிக்காய்ல அம்மா கறி பண்ணுவா. அது ரொம்ப பிடிக்கும். இங்க கிடைச்சா கண்டிப்பா செய்து பாக்குறேன். வாழ்த்துக்கள் மாமி... நிறைய குறிப்பு எங்களுக்காக குடுங்கோ.. அனுபவ சமையல் போல் வருமா....
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ராதா!
உ
உஷ்...............!
வெளில சொல்லாதே!
இது எல்லாம் மாமா செஞ்சது! சும்மா நான் செஞ்சா மாறி புருடா விட்டுண்டு இருக்கேனாக்கும்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மாமி, ராதா
மாமி(மா) குறிப்பு கொடுக்க ஆரம்பிச்சாச்சா?! ஜமாய்ங்கோ :)
ராதா பப்பாளிக்காய் சிங்கையில் கிடைக்கும். மார்க்கெட்டில் உள்ள மலாய் கடைகளில் "பப்பாயா முடா" (papaya muda) அப்படீன்னு கேளுங்க கிடைக்கும்.
ஃபேர்ப்ரைசிலும் இருக்கும்பா. மஷ்ரூம் மற்றும் காய்கறிகள் இருக்கும் ஃப்ரிட்ஜில் இருக்கும்பா.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
குரு!
உ
எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான்!
கோமு, சித்ரா, நித்யா மாமாகிட்ட சொல்லிட்டேன்!உங்க வாழ்த்தை!
அவருக்கு ரொம்ப ச்ங்கோஜமாருக்காம்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
உ.மாமி.
இனிப்போட ஆரம்பமா. நடக்கட்டும். மேலும், மேலும் மாமா விடம்
கேட்டு நல்ல குறிப்புகளை அனுப்பவும்.
பப்பாளி.
மாமி நானும் பப்பாளிக்காயில் எதுவும் சமைத்ததில்லை, உங்க குறிப்பு
பாத்ததும் பண்ணலாம்போல இருக்கு.
மாமி
மாமி முதல் குறிப்பே இனிப்போட ஆரம்பிச்சாசு இனி தொரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள் நான் பப்பாளிக்காயில் எதுவும் சமைத்ததில்லை பாலும் சர்க்கரையும் போட்டு செய்வது வித்த்யாசமாக உள்ளது செய்து பார்க்கிறேன்.
அன்புடன்
நித்யா
பாவ் பாஜி!
உ
இமேஜ்ல ஏதாவது அசைவம் வந்துட போறதேனு நெனச்சென்!
ஜிஜிஜிஜி! நேக்கு பிடிச்ச பாவ் பாஜி பன்னே வந்த்ருக்கு! தாங்க் காட்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மாமி
மாமி வாழ்த்துக்கள். காய் சேர்ப்பதால் கசப்பு தெரியாது தானே?!!
அது ரேண்டம் இமேஜ் மாமி... இன்னும் கொஞ்ச நேரத்துல இறாலும், சிக்கனும் வரும்:))
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
அன்பு ஆம்ஸ்!
உ
காய் கசக்காதுனு மாமா சொல்றார் !நானும் சாப்பிட்டுருக்கேன்! நன்னாருக்கும்!
அடராமா! அது ரேண்டம்மா ! சிவ சிவா!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
உ.மாமி
ஐ! மாமியும் சமையல் குறிப்பு போட்டாச்சு, மாமி தினமும் குறிப்பு கொடுங்க எங்க வீட்டையும் அசத்தனும்மில்ல, பப்பாளிக்காய் இங்க கிடைக்கும் சீக்கிரம் செஞ்சு சாப்பிடறேன்;)
Don't Worry Be Happy.
மாமி வாழ்துக்கள் முதல்
மாமி வாழ்துக்கள் முதல் குறிப்பே இனிப்போட ஆரம்பம்
(என் வாழ்த்தை மாமாக்குசொல்லுங்கோ)
இன்னும் நல்ல குறிப்புகள் கொடுகவேண்டும் என்று இந்தவிசிறியின் வேண்டுகோள்
ஜெயலஷ்மி! பாத்திமா!
உ
மாமாகிட்ட உங்க வாழ்த்தை சொல்லிட்டேன்! தினம் ஒரு குறிப்பு கஷ்டமாம்!
வாரம் ஒரு குறிப்பு தர முயற்சிக்கறாராம்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மாமி,
மாமி,
முதல் குறிப்பே வித்தியாசமா,சூப்பரா இருக்கே.ஆனால்,எனக்கு இங்கே பப்பாளி பழம் மட்டும் தான் கிடைக்கும்.ஊருக்கு போனதும் செய்து பாத்துட்டு சொல்றேன்.அடுத்த குறிப்பை சீக்கிரம் அனுப்புங்க.குறிப்புக்கு வாழ்த்துக்கள்.
மாமி
மாமி, இப்பதான் உங்களோட பப்பாளி பால் கூட்டு பார்த்தேன். இதுவரை நான் கேள்விப்படாத ரெசிப்பிய தந்துருக்கீங்க. ஆரம்பமே வித்தியாசமா இருக்கு மாமி. கலக்குங்க. எங்கம்மா பப்பாளி காயோட பலாக்காய் சேர்த்து பொரியல் பண்ணுவாங்க நல்லாயிருக்கும். இங்க தடுக்கி விழுந்தா பப்பாளி மரத்துல தான் விழனும். அப்படி விளைஞ்சு கிடக்கும் பப்பாளி. செய்து பார்த்துட்டு சொல்றேன் மாமி.வாழ்த்துக்கள் மாமி. தொடர்ந்து குறிப்புகளை தாங்க:)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
வாசிக்கவே வாயில் நீர் ஊறுகிறதே
ஆகா..............மாமி.... வாசிக்கவே வாயில் நீர் ஊறுகிறதே...!!
சாப்பிட்டுப் பார்த்தால்....??!!
உங்கள் எழுத்து முகூர்த்தம் பலித்து விட்டது மாமி
எங்கள் வீட்டில் பப்பாளி பழம் இருக்கின்றது
உங்கள் செய்முறையை பரீட்சித்து பார்த்திட வேண்டியதுதான்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அன்பரசி!
உ
பப்பாளி பழகடைல போய் பப்பாளி காயை கேட்டா தரமாட்டா!
காய் கடைல கேக்கனுமாக்கும்!
’’நீங்க எப்போ ஊருக்கு வந்து, செஞ்சு பாத்து, சொல்லி இப்படி’’னு நான் சொல்லலை மாமா சொல்றார்!
ஜிஜிஜிஜி!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மாமி,
மாமி,
இங்கே,பழத்துக்கு தனி கடை,காய்கறிக்கு தனி கடை கிடையாது.எல்லாத்துக்கும் ஒரே கடை தான்.
//’நீங்க எப்போ ஊருக்கு வந்து, செஞ்சு பாத்து, சொல்லி இப்படி’’னு நான் சொல்லலை மாமா சொல்றார்!//
சொல்றதை எல்லாம் சொல்லிட்டு,மாமா மேல பழியை போடுறீங்களா?
கல்பூ!
உ
பண்ணி பாருங்கோ !சூப்பரா இருக்கும்!
ஆனா ஒன்னு மாப்பூ அங்கேருந்து வந்து என்னை குச்சியால அடிக்க மாட்டரே!
ஜிஜிஜிஜி!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
யோக ராணி!
உ
இது காய்ல பண்ணனும்! பழத்துல பண்ணினா அதுக்கு பேர் ஜாம்!
’’நான் யோகம் அடிச்சாச்சு’’னு சொன்னதை நினைவு வெச்சுண்டு இருக்கேளா!
அதெல்லாம் மறந்துடனும்!செஞ்சு பாத்து உங்களுக்கு பிடிக்கலேனா மாமியை
சாரி மாமாவை அடிக்க வந்துட படாது!
அந்த உரிமை நேக்கு மட்டும்தான்! புரிஞ்சுதோ!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
அன்பரசி!
உ
ஏன்னா ! இது மாமா குறிப்புதானே! அதான் அவர் சொன்னார்!
நம்பனும்! நம்பிக்கைதான் வாழ்க்கை!
எப்புடீ தத்துவம்!(ஜிஜிஜிஜி)
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
பப்பாளிக்காய் பால் கூட்டு
மாமி(மா) முதல் குறிப்பா இனிப்பா ஆரம்பிச்சிருக்கீங்க. நீங்களும் நிறைய குறிப்பு கொடுத்து கோல்டு, சில்வர் ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள். மாமி ரெசிப்பி இனிப்புதான் முந்திரி, திராட்சை தாளித்து இருக்கலாம். கடுகு தாளிச்சு இருக்கீங்க. இனிப்புல கடுகு சேர்த்தா வித்தியாசமா இருக்குமே.
வினோஜா!
உ
இது பால் ‘’கூட்டு’’ இல்லையா!அதான் கடுகு!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...