how to raise immunity

என் பையனுக்கு 3 வயதாக போகிறது. ஆனால் எப்பொழுது தலைக்கு குளிக்க வைத்தாலும் சளி, காய்ச்சல் வந்து விடுகிறது. இத்தனைக்கும் நன்றாக வெயில் வந்த பிறகு, வெந்நீரில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு வேகமாக ஊற்றிவிடுகிறேன். தலை முடியும் அடர்த்தி கிடையாது. மாலை நேரத்தில் சற்று தாமதமாக முகம், கை, கால் அலம்பி விட்டாலும் உடனடியாக தும்மல் ஆரம்பித்து விடுகிறது. அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட என்ன மாதிரியான உணவுகள் கொடுக்க வேண்டும்.
அது தவிர பசும்பால் குடிக்கவும் விரும்ப மாட்டேங்கறான். compel பண்ணி தினம் சாயங்காலம் மட்டும் ஒரு அரை டம்ளர் குடிக்க வைப்பேன். நைட் பசிச்சாலும் compel பண்ணி தான் குடுக்கணும். பட்டினியோட கூட இருப்பான். ஆனா பால் குடிக்க அவ்ளோ கஷ்டம். horlicks, complan, bournvita, boost எது கலந்து கொடுத்தாலும் இதே நிலைமை தான். சரி குடுக்காம இருப்போம்னு பார்த்தா மனசு கேக்கமாட்டெங்குது. பாலுக்கு இணையான சத்துள்ள உணவு வேற ஏதாவது இருக்கா?
தயவுசெய்து உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள் தோழிகளே.

milkmaid,cream... idhupolla kudungalean. en magalukkum 3 years.same problem.but milk thavira vearu ethuvum sapidamattal.குலீதால் சலி,தும்மல்

ஹசீன்

சுஜா

1.Manna health mix (boil & drink) add vellam (don't add sugar)
2.give milk with dates syrup
3. give him honey one spoon daily.

Think Positively

சுஜா உங்கள் பையனுக்கு கொடுக்கும் உணவில் வெங்காயம் நிறைய சேர்த்துக்கோங்க. வெங்காய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெங்காய ஊத்தப்பம் கொடுங்க, இல்லை கோதுமை மாவுடன் வெங்காயம் நிறைய அறிந்து போட்டு வெங்காய சப்பாத்தி செய்து கொடுங்க.
சூர்யா சொன்னது போல தேன் உடம்பிற்கு மிகவும் நல்லது.
டெய்லி இரண்டு பேரீட்சை பழங்கள் கொடுங்க எப்படியாவது சாப்பிடவச்சுடுங்க ரொம்ப போர்ஸ் பண்ணி கொடுக்காதீங்க அப்பறம் அதன் மேல் வெறுப்பு வந்துடும்.
பழங்கள் காய்கறிகள் நிறைய சேர்த்துக்கோங்க

”பாலுக்கு இணையான சத்துள்ள உணவு வேற ஏதாவது இருக்கா?”
ஏங்க 3வயசு குழந்தைக்கு பால் மட்டுமே சத்தான உணவு கிடையாது,பாலில் கால்சியம் தான் அதிகம்,ஆனால் நோய் எதிர்ப்பு சக்திக்கு அது மட்டும் பத்தாது,நீங்க பழங்கள்,கீரை காய்களை அதிகம் உணவில் சேருங்கள்.சத்துமாவு கஞ்சி செஞ்சு குடுங்க,நான் வெஞ் சாப்பிட்டால் ஈரல் மற்றும் எலும்பு சூப் கொடுக்கலாம்.

இரண்டு முறை பதிவாகி விட்டது,சாரி

என் அனுபவத்தில் சொல்கிறேன் .மகளுக்கு தொடர்ந்து balatone கொடுத்தபின் பசி அதிகரித்தது,,நோய் எதிர்ப்பு சக்தி கூடியது கண்ணம் கூட லேசா வந்தது..ஆனால் நிறுத்திய பின் பழைய கதை தான்..ஊரில் இருந்து கொடுத்து விட சொல்லியிருக்கிறேன்.

Balatone என்று பெயர் நம்மூர் ஹோமியோ ஃபார்மசிகளில் கேட்டு வாங்குங்கள்...இனிப்பு தான் அதனால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...நல்ல பலன் கிடைத்தது.ட்ரை பன்னி பாருங்க

அனைவரது கருத்துக்களும் மிகவும் உபயோகமாக உள்ளது. எல்லா தோழிகளுக்கும் நன்றிப்பா. நீங்க சொன்னத செய்றேன். தளிகா balatone எந்த மாதிரியான உணவு? எப்படி கொடுக்க வேண்டும்? milk maid, cream இதெல்லாம் தொட்டு கூட பார்க்க மாட்டேங்கறான். அவனுக்கு ஸ்வீட் பிடிக்காதுப்பா. காரம் மட்டும் ரெம்ப லைட்டா எடுத்துக்குவான். சூர்யா நீங்க சொன்ன மாதிரி health mix கொடுத்திருக்கேன். ஆனா அதுக்கும் இப்ப முரண்டு பண்றான்.

அது குட்டி குட்டியா மாத்திரைகள்..ஆனால் கல்கண்டு போன்ற சுவையில் இருக்கும்...தினம் 3 வேளை 2 மாத்திரைகள்...நல்ல பலம் கிடைக்கும்..குழந்தைகள் நல்ல தூங்க கூட செய்வார்கள்

என் பொண்ணூக்கு 2 1/2 வயதாகிறது.அதிகம் mango juice(not a fresh juice) குடிக்கிறால். இது அதிகம் குடுக்கலாம?இவ ரொம்ப lean -a இருப்பா.10 kg தான் iva weight.உங்க குறிப்புகள்,கருதுக்கள் எல்லாம் super. kapsa நேற்று சமைதேன் super. உங்கள் ரசிகை.என் kuttyku help please weight increase pannaum help.

ஹசீன்

மேலும் சில பதிவுகள்