வெண்டைக்காய் தயிர் க்ரேவி

தேதி: October 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (10 votes)

 

வெண்டைக்காய் - 100 கிராம் (10 லிருந்து 15 வெண்டைக்காய்)
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2 (காரத்திற்கு தகுந்தாற்போல் சேர்த்துக் கொள்ளவும்)
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - 3/4 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - கால் தேக்கரண்டி
அரைக்க:
வெங்காயம் - 1
கசகசா - 2 மேசைக்கரண்டி
முந்திரி - 5


 

தக்காளியை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும் (தக்காளியை தோல் நீக்க வெந்நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து பிறகு ஈஸியாக உரித்து விடலாம். அல்லது தக்காளியை நேரடி தணலில் வாட்டியும் தோலை உரிக்கலாம்) வெண்டைக்காயை 1இன்ச் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை கீரிக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் நீக்கி நான்காக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும். கசகசாவை 10நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும். பிறகு வதக்கிய வெங்காயம், ஊறிய கசகசா, முந்திரி அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் எண்ணெய் தவிர்த்து வெண்டைக்காயை மட்டும் தனியா ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இருக்கும் மீதி எண்ணெயுடன் நாம் மீதம் வைத்திருக்கும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயையும் ஊற்றி அதில் சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து தாளித்து பின்பு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்திருக்கும் கலவையை இதனுடன் சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் போது உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
பின்பு கடைந்த தயிரை அதில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு வறுத்து வைத்திருக்கும் வெண்டைக்காயையும் அதில் சேர்க்கவும்.
கடைசியாக கிரேவியை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி சிறிது தேங்காய் எண்ணெய் மேலாக ஊற்றி கறிவேப்பிலை தூவி மூடி வைத்து விடவும். பரிமாறும் போது தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை வாசம் நன்கு வரும்.
சுவையான வெண்டைக்காய் தயிர் கிரேவி ரெடி. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையான சைட்டிஷாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ராதா ஹரி... நல்ல குறிப்பு. பார்க்கவே அழகா இருக்கு. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராதா வெண்டைக்காய் தயிர் கிரேவி பார்க்க அழகா இருக்கு.செய்து பார்த்துவிட்டு எப்படியிருக்குன்னு சொல்றேன்.(பார்த்தாலே தெரியுது டேஸ்டியா இருக்கும்னு)

ராதா இப்பத்தான் சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு வச்சிட்டு வந்து ஓபன் பண்ணா.... டிபரண்டா சூப்ப்பரா ஒரு டிஸ் கொடுத்துருக்கீங்க..... செஞ்சுட்டு சொல்றேன்.... பாக்கும் போதே சூப்பரா இருக்கு......

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஹாய் ராதா...,நலம்தானே?
உங்க வெண்டைக்காய் தயிர் க்ரேவி குறிப்பு பார்க்கவே நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ராதா,
எப்படி இருக்கீங்க?வெண்டைக்காய் தயிர் க்ரேவி செய்முறையும்,விளக்கமும் தெளிவா இருக்கு.படங்களும் அழகு.வாழ்த்துக்கள்.

very nice recipe

ராதா, இப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கறீங்களாப்பா? எப்படித்தான் யோசிக்கறீங்களோ, நமக்கெல்லாம் இப்படி வர மாட்டேங்குது. :( நான் செய்துட்டு சொல்றேன் பா. குட்டி குழந்தை கூட பார்த்து பண்ற மாதிரி படங்களும், விளங்கங்களும் ரொம்ப நல்லாயிருக்குப்பா. வாழ்த்துக்கள். தொடர்ந்து சூப்பர் குறிப்புகளை தாங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அழகா இருக்கு. வெண்டைக்காய் ஜாஸ்தி வாங்கிட்டீங்களோ, வித்தியாசமாவும் இருக்கு, நானும் ஒவ்வொரு குறிப்பிலும் ட்ரை பண்றேன் ட்ரை பண்றேன் எழுதறேன், இன்னும் ட்ரை பண்ணினதா இல்லை. கண்டிப்பா ஒரு முறை செய்து பார்க்கிறேன் அக்கா. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

குறிப்பு அருமை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வெண்டைக்காய் தயிர் க்ரேவி செய்துட்டேன்.டேஸ்ட் நல்லா இருந்ததுங்க ராதா. கசகசா வீட்டுல இல்லாததால் அது மட்டும் சேர்க்கலை. என் கணவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
சுவையான ரெசிப்பியை பகிர்ந்ததுக்கு நன்றி!
-அன்புடன்,மகி

அன்புடன்,
மகி

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வனிதா மேடம்
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி.. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க

சுந்தரி
தேங்ஸ்பா. செய்து பார்த்துட்டு சொல்லுங்க. பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றி. பசங்க எப்படி இருக்குனு சொன்னாங்கனு சொல்லனும் ஓகே வா...

ரங்கா
செய்து பார்த்தீங்களா? எப்படி இருந்தது. உங்க பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றி...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அப்சரா
நான் நல்லாருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க.. உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க...

அன்பரசி
வருகைக்கும் பின்னுாட்த்திற்கும் மிக்க நன்றிப்பா.. செய்து பார்த்துட்டு சொல்லுங்க. பையனுக்கும் கண்டிப்பா பிடிக்கும். என் பையன் வெண்டைக்காய் மட்டும தனியா பொறுக்கி சாப்பிட்டுட்டு எங்க ரெண்டு பேருக்கும் வெறும் கிரேவிய மட்டும் வச்சுட்டு போய்டான்...

ஷாலு
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கல்ப்ஸ்
ரூம் போட்டு எல்லாம் யோசிக்கறது இல்ல. நம்ம ஆளுங்க தான் இருக்கவே இருக்காங்களே. என்ன செய்து கொடுத்தாலும் தலையெழுத்தேனு சாப்பிட. அப்படி அவுங்கள டெஸ்ட் பண்ணி அவுங்க ஒழுங்கா இருந்தா உடனே அந்த ரெசிப்பிய அறுசுவைக்கு அனுப்பிடுவேன். இது அக்கா சொல்லிக்கொடுத்துப்பா.. சொந்தமூளைய செலவு பண்றதுல்ல... அப்பறம் சீக்கிரமாவே கரைஞ்சு போய்டும்ல...
வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பவி
எப்படி கரெக்டா கண்டுபிடிச்ச.. வெண்டைக்காய் நிறைய வாங்கிட்டேனா.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதுனால தான் ஒரே வெண்டைக்காய் குறிப்பா தர்றேன். பவி உனக்கு மெயில் பண்ணிட்டேன்பா.. காலைலயே உன்கிட்ட பேசிருக்கணும். டைம் இல்ல. அப்பறம் தான் படிச்சேன். சாரிடா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆசியா மேடம்
நேத்து தான் உங்க பிளாக் போய் பாத்தேன். அதெல்லாம் பாத்தா இதெல்லாம் ரொம்ப சாதாரணம். நிஜம்மா.. ரொம்ப அழகா இருந்தது. பாத்திரங்கள்ல ஆரம்பிச்சு குறிப்புகள் வரை பாத்துட்டு தான் வந்தேன். இங்க வந்து பாத்தா இன்னைக்கு நீங்களே எனக்கு பின்னுாட்டம் கொடுத்திருக்கீங்க..மிக்க நன்றி..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மகி
உடனே செய்து பார்த்துட்டு கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றிப்பா.. கசகசா சேர்த்தால் கொஞ்சம் திக்னஸ் கிடைக்கும். டேஸ்ட் சற்று வித்தியாசமாக இருக்கும். சேர்க்கவில்லை என்றாலும் பரவால்லை.. உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா உங்க குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு. செய்து பார்க்கிறேன். எனக்கு ஆசியா மேடம் பிளாக் அட்ரஸ் தரீங்களா?

அன்புடன்
மகேஸ்வரி

மகேஸ்வரி
உங்க பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றி
ஆசியா மேடம் பிளாக்
http://asiyaomar.blogspot.com/ போய் பாருங்க..இங்க கொடுக்கலாமா என்னனு தெரியல.. நீங்க பாத்ததும் நான் டெலிட் பண்ணிடுறேன். ஓகே வா

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா நான் ஐடி நோட் பண்ணிட்டேன். டெலிட் பண்ணிடுங்க. தேங்ஸ் பா.

அன்புடன்
மகேஸ்வரி

எப்படி இருக்கீங்க?நல்ல செய்முறை.super recipee

மகேஸ்வரி
மாத்த முடியலப்பா... எப்பவும் மாற்று வரும். நீங்க பதில் போட்டதும் மாத்த முடியல..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சங்கீதா
நான் நல்லாருக்கேன்பா.. உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா நான் நோட் பண்ணிட்டேன் என்று சொல்ல தான் பதில் போட்டேன். தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

ராதா ஹரி வெண்டைக்காய் தயிர் கிரேவி நல்ல இருக்கு.

ஜலீலா

Jaleelakamal

ராதா வெண்டைக்காய் தயிர் கிரேவி பார்க்க அழகா இருக்கு.

அருமையாக இருக்கு.வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ராதா நேற்றுதான் வெண்டைக்காய் வாங்கிட்டு வந்தேன். இன்னிக்கு நைட் சப்பாத்திக்கு செய்துடறேன் :). எல்லாம் சரி சிங்கையில் கசகசா.... எப்படீ?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மகேஸ்வரி
மன்னிப்பு எல்லாம் ஏன் கேக்குறீங்க. இங்க அவுங்க ப்ளாக் கொடுக்கலாமானு தெரியல. குடுத்தாலும் தப்பில்லைனு தான் நினைக்கிறேன். ப்ளாக் என்பது எல்லாரும் வரும் பொதுவான தளம். அதனால் தவறில்லை. மெயில் ஐடி என்றால நாம் வருத்தப்படுவதில் நியாயம். அதனால் கவலை வேண்டாம்

ஜலீலா மேடம்
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி..

யோகா
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கவி
வெண்டைக்காய் வாங்கிட்டு வந்து சத்தமில்லாம சமைக்கணும். சிங்கைல கசகசா எப்படி-னு எல்லாம் கேள்வி கேக்க கூடாது. இங்க தான் கிடைக்காதே. இப்படி எல்லாம் கேள்வி கேட்டு வீட்டுக்கு போலீஸ் வரவச்சிராதீங்க.ஊர்ல இருந்து வரும்போது கொண்டு வந்துடவேண்டியது தான். எனக்கு கசகசா இல்லாம குருமா பண்ண கஷ்டமா இருக்கும். அதுனால கொஞ்சமா வாங்கிட்டு வந்துடுவேன்.ஹிஹிஹி.... மருமகள் வந்தாச்சா? ரொம்ப பிசியா?....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

madam parkumpothe superaga ulathu madam. ethai kattayam seithu parkiren. nan arusuvaiku puthithu. enaku arusuvai migavum pidithu ullathu. nan ondru ondraga seithu parkiren. ellam nandraga ullathu.kuripu tharum ungal anaivarukum thanks