தேதி: October 12, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அரைக்க:
வெங்காயம் - 2
புளி - நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு- 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தாளிக்க
வெங்காயத்தை தோல் நீக்கி சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்துக் கொள்ளவும்.

பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயத்தின் பச்சை வாசனை போக வேண்டும்.

நன்கு சுருள வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். வெங்காய சட்னி தயார்.

இது இட்லி, தோசைக்கு ஏற்ற சைட் டிஷ்.

Comments
ஹர்ஷா
ஹர்ஷா... நல்ல குறிப்பு. என் அண்ணி இப்படி தான் செய்வார், அவர் சொல்லி நானும் செய்ய ஆரம்பிச்சேன். வெகு நாட்கள் செய்யாமல் இருந்த குறிப்பை நியாபகபடுத்திட்டீங்க. செய்துடறேன். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நல்ல குறிப்பு
ஹர்ஷா நல்ல குறிப்பு நானும் வெகு நாட்கள் செய்யாமல் இருந்த குறிப்பை நியாபகபடுத்திட்டீங்க செய்துடறேன்
No pain No gain
அட்மின் அண்ணாவுக்கு நன்றி
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு நன்றி.
வனிதா,
வனிதா,
முதல் பின்னூட்டம் உங்களிடம் இருந்து வந்தது கண்டு மகிழ்ச்சி.அம்மாவும் இந்த சட்னி எப்பவோ செய்வாங்க.அப்புறம் செய்றது இல்லை.திடீர்னு நியாபகம் வந்து,குறிப்பு கேட்டு அனுப்பினேன்.உங்க பதிவுக்கு நன்றி.
ஈஸ்வரி,
ஈஸ்வரி,
உங்கள் பதிவுக்கு நன்றி.நானும் சின்ன வயசில்,சாப்பிட்டது.வருடக் கணக்கில் செய்யாமல் மறந்த குறிப்பு இது.சீக்கிரமா செய்து சாப்பிடுங்க.
ஹர்ஷா
ஹர்ஷா, வெங்காயச் சட்னி சிம்பிளாகவும், சுவையாகவும் இருக்கும். இந்தச் சட்னிய பார்த்தா என் அம்மா ஞாபகம் வருதுப்பா. அம்மாவும் இப்படித்தான் பண்ணுவாங்க. அம்மாவ பார்க்கனும்ன்னா இந்த சட்னிய செய்ய வேண்டியது தான். அதுவும் தோசைக்கு செம காம்பினேஷன். எனக்கு கை ஊறுதுப்பா. கொஞ்சம் இருங்க... தட்டுல இருக்குற தோசையை ஸ்வாஹா பண்ணிட்டு உங்ககிட்ட பேசுறேன். வாழ்த்துக்கள் பா. தொடர்ந்து குறிப்புகளை தந்து அசத்துங்க :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
அன்பு
ரொம்ப அழகாருக்கு. நான் இதே மாதிரி தான் செய்வேன். ஆனா வறுத்திட்டு தான் அரைப்பேன். ரொம்ப அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள்.
அன்புடன்
பவித்ரா
வெங்காயச் சட்னி
அன்பரசி வெங்காயச் சட்னி மிகவும் சுலபமாக உள்ளது எங்க அம்மாவும் அப்படித்தான் செய்வாங்க ஆனால் எனக்கு மறந்து போச்சு இப்ப ருசி கண்ட பூனை மாதிரி இருக்கு கண்டிப்பா செய்துவிட்டு பின்னூட்டம் அனுப்பரேன்.
அன்புடன்
நித்யா
கல்ப்ஸ்,பவி,நித்யா,
கல்ப்ஸ்,
என் ரெசிப்பி எல்லாருக்கும் அம்மாவை நியாபகப் படுத்திடுச்சு.நீங்களும் செய்து,நல்லா சாப்புடுங்க.பதிவுக்கு நன்றி.
பவி,
உங்க அழகான பதிவுக்கு நன்றி.
நித்யா,
இப்போ தான் நான் நியாபகப்படுத்திட்டேனே,செய்து சாப்பிடுங்க.பதிவுக்கு நன்றி.
ஹர்ஷா
ஹர்ஷா நன்றி செய்துடறேன்
No pain No gain
நன்றி
எனக்கு இப்போவே வீட்டுக்கு போகவேணும் ,தோசயும் உங்கள் வெங்காய சட்னியும் சாப்டனும் போல இருக்கு
...நன்றி உங்கள் பகிர்வுக்கு...
"smile is the way to solve problem..Silent is the Way to Avoid all the Problems"
அன்பரசி மேடம்
அன்பரசி மேடம், இந்த சட்னி எங்க வீட்லயும் இப்படி தான் செய்வோம் ஆனா வதக்கிட்டு அரைப்போம். இந்த சட்னி அரைத்தால் கூட ஒரு தோசை அதிகமாவே சாப்பிடுவேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த சட்னி. நல்ல ஒரு குறிப்பை பகிர்ந்துட்டு இருக்கீங்க.
வெங்காய சட்னி
நானும் இது போல தான் செய்வேன். ஆனால் சின்ன வெங்காயம் உபயோகிப்பேன் . தாளிக்க நல்லெண்ணெய் உபயோக படுத்துவேன் . நன்றாக இருக்கும் .
வெங்காய சட்னி
வெங்காய சட்னி பாக்கவே சூப்பரா இருக்கு
சட்னிய விட தோசை சூப்பர்.
அன்பரசி ஒரு பார்சல் அனுப்பி வைங்கப்பா...
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
வெங்காய சட்னி
ஹாய் ஹர்ஷா,
வெங்காய சட்னியில் தக்காளி சேர்க்க வேண்டாமா? சேர்க்காமல் செய்தால் நன்றாக இருக்குமா? நான் புதிது , தயவு செய்து சொல்லவும்.
வெங்காய சட்னி
ஹர்ஷா தேசைக்கேற்ற வெங்காய சட்னி.
நானும் இது போல் செய்வதுண்டு
ஜலீலா
Jaleelakamal
ஈஸ்வரி,சிவா,யாழினி,
ஈஸ்வரி,உங்க பதிவுக்கு நன்றி.
சிவா,
தோசையும்,சட்னியும் செய்து சாப்புடுங்க.உங்க பதிவுக்கு நன்றி.
யாழினி,
எனக்கும் இந்த சட்னி ரொம்ப பிடிக்கும்.உங்க பதிவுக்கு நன்றி.
ரம்யா,ராதா,ஸ்ரீ_01
ரம்யா,
உங்க முறைப்படி,நானும் செய்து பார்க்கிறேன்.உங்க பதிவுக்கு நன்றி.
ராதா,
பார்சல் எதுக்கு?வீட்டுக்கு வாங்க,சுடச்சுட சுட்டு தரேன்.உங்க பதிவுக்கு நன்றி.
ஸ்ரீ_01,
சட்னியில்,தக்காளி புளிப்புக்காக தானே சேர்க்கிறோம்.அதற்கு பதிலா,புளி சேர்ப்பதால்,புளிப்பு சுவை வந்துடும்.புளிக்கு பதில் தக்காளியும் சேர்த்து செய்யலாம்.அது கார சட்னினு சொல்லுவாங்க.அதுவும் நல்லா இருக்கும். இரண்டும் செய்து பாருங்க.உங்க பதிவுக்கு நன்றி.
ஜலீலா அக்கா,
ஜலீலா அக்கா,
உங்களுக்கு தெரியாத சமையலா?உங்க பதிவுக்கு நன்றி.
அன்பரசி
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருந்தது இட்லிக்கு பெஸ்ட் காம்பினேஷன்.
ரீம்,
ரீம்,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.வெங்காய சட்னி செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றி.
madam entha chutny
madam entha chutny seithen.migavum superaga irunthathu.thanks madam.
ஹர்ஷா
தோசைக்கு ஏத்த ஜோடி உங்கள் வெங்காய சட்னி சூப்பர்
வெங்காய சட்னி,
ராதிகா,
உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி.தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
ஃபாத்திமா அம்மா,
உங்க பதிவு கண்டு மகிழ்ச்சி.மிக்க நன்றி.
Remba Naalla Irukku. idhai
Remba Naalla Irukku. idhai pol neraya receipe varavetkirom.