T - ஷர்ட்டில் டிசைன் செய்வது எப்படி?

தேதி: October 12, 2010

5
Average: 4.2 (13 votes)

 

வெள்ளை காட்டன் T- ஷர்ட் / டாப்
ஃபாப்ரிக் க்ரயான்
ட்ரான்ஸ்ஃபரிங் ஷீட்
அயர்ன்
படம் வரைந்து பார்க்க, அயர்ன் செய்ய கடதாசி

 

T- ஷர்ட்டில் டிசைன் செய்வதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
T- ஷர்ட்டை துவைத்து அயர்ன் செய்து வைக்கவும். ஒரு பேப்பரில் முதலில் வரையப்போகும் படத்தை தீர்மானித்துக் கொள்ளவும். எழுத்துகளை கொண்டு வரையப்போகும் டிசைனாக இருந்தால், எழுத்துகள் எதிர்ப்பக்கமாக எழுத்துவது போல் மாறி வரவேண்டும்.
ட்ரான்ஸ்ஃபரிங் ஷீட்டில் சொரசொரப்பாக இருக்கும் பக்கத்தில் பெயரை எழுதவும். நன்றாக அழுத்தி எழுத வேண்டும். எழுத்துக்களுக்கு நடுவே போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.
எழுதிய பெயரை கண்ணாடியில் பார்த்தால் நேராக இருப்பது போல் தெரிய வேண்டும்.
எழுத்துக்களுக்கெல்லாம் ஃபாப்ரிக் க்ரயான் கொண்டு கலர் செய்துக் கொள்ளவும். லைட் கலராக இருந்தால் அவுட் லைன் வரைந்த பின் கலர் செய்யவும். பிறகு பூ வரைய வேண்டும்.
வரைந்து முடிந்ததும் படத்திலுள்ளது போல் இருக்கும்.
அயர்ன் பாக்ஸை காட்டன் செட்டிங்கில் வைத்து சூடாக விடவும். (ஷர்ட்டின் உள்ளே ஒரு பேப்பர் வைக்கவும். இல்லாவிட்டால் பின் பக்கம் கலர் படும்.) படத்தை அளவுக்கு வெட்டி ஷர்ட்டுக்கு மேல், பொருத்தமான இடத்தில் வைக்கவும். எழுத்து சரியாக வருவது போல வைக்க வேண்டும். வரைந்த படம் ஷர்ட்டில் பட வேண்டும். அதன் பின்பக்கம் வேறு ஒரு பேப்பர் இருக்கும். அதன் மேல் 2 நிமிடம் அயர்ன் செய்யவும். அயனை வைத்து வைத்து எடுக்க வேண்டும். ஓட்டக் கூடாது. அப்படிச் செய்தால் எழுத்துக்கள் பழுதாகி விடும்.
ஒரு நிமிடம் ஆற விட்டு மெதுவாக பாக்கிங் பேப்பரை தூக்கிப் பார்க்கவும். லேசாக வந்தால் கவனமாக உரித்து எடுக்கவும். கலர் நன்றாகப் பிடித்து இருக்காவிட்டால் திரும்ப சிறிது நேரம் அயர்ன் பண்ணி ஆறவிட்டு பேப்பரை உரிக்கவும்.
பெயர் போட்ட அழகான T- ஷர்ட் ரெடி.
இந்த T-ஷர்ட் டிசைனை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் 6 வயதான ஏஞ்சல். நியூஸிலாந்தில் பிறந்த இலங்கையர் என்றாலும் தமிழ் நன்கு பேசக்கூடியவர். அழகாக படம் வரைவது, க்ரீட்டிங் கார்ட்ஸ் செய்வது, அப்பா, அம்மாவுக்கு உதவி செய்வது, தம்பியை பார்த்து கொள்வது போன்ற பொறுப்பான பணிகளைச் செய்து வரும் இவருக்கு, க்ரீட்டிங் கார்ட்ஸ் செய்வதும், ஸ்டைலாக ட்ரெஸ் பண்ணுவதும் மிகவும் பிடித்தமான விசயங்கள். இமா அவர்களின் செல்லங்களில் ஒருவரான இவர், அவரது இல்லத்திற்கு அருகே வசிக்கின்றார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

Sweety unaiya mathiri cute a iruku......

hai kutty,
ரொம்ப supera இருக்கு.............

Brintha
இதுவும் கடந்து போகும்

ஏஞ்சல் குட்டி,
உன்னுடைய க்ராஃப்ட் ரொம்ப நல்லா இருக்கு டா.ஒரு சின்ன பொண்ணு செய்து இருக்கானு நம்பவே முடியல.ஏன்னா,எனக்கும் கைவினைக்கும் ரொம்ப தூரம்.நீங்களும் அழகா இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

சூப்பரா இருக்கே., என் பையனுக்கும், பொண்ணுக்கும் டி. சர்ட்ல அவங்க பேர் போட்டுத்தருவேன். ரொம்ப தேங்க்ஸ் ஏஞ்சல் குட்டி ;)
நீங்களும் அழகா க்யூட்டா இருக்கீங்கடா , இன்னும் நிறைய இந்தமாதிரி கிராப்ட்ஸ் பண்ணி இந்த ஆண்ட்டிக்கு காமிங்க வாழ்த்துக்கள் ;)

Don't Worry Be Happy.

வாவ் ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு...ennai pola
"திஸ் T shirt டிசைன் மிக அழகா எஞ்சேல் போல உள்ளது.

எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்க....

யாரு உங்களுக்கு கற்று கொடுத்தாங்க...
அவர்களுக்கும்
வரைந்த தேவதைக்கும்
எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்...

"தேவதையின் கைவண்ணமும்
"T ஷர்ட் இன் சிற்பம் ஆனது"

"smile is the way to solve problem..Silent is the Way to Avoid all the Problems"

ஏஞ்சல் செயத டிசயின் டீ ஷர்ட்!

என்னவென்று சொல்வதமா! சூப்பர்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அறுசுவை உறுப்பினர்களின் குழந்தையா? இல்லை அறுசுவை உறுப்பினரா?

அழகா செஞ்சுருக்கீங்க. பாக்கவே அவ்வளவு ஆசையா இருக்கு. இந்த வயசுல உங்களுக்கு இருக்கும் திறமையை மேலும் மேலும் பல மடங்கு பெருக்கி நல்ல முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள் ஏஞ்சல்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஏஞ்சல் டியர் உன்னை போலவே நீ செய்து காண்பிச்சிருக்குற டி சர்ட்ம் ரொம்ப அழகா இருக்கு. நீயே எல்லாமே செய்து இருக்கியா ரொம்ப க்யூட்டா இருக்கு. congrats dear angel. ஏஞ்சல் - நல்ல பேரு நீ கூட ஏஞ்சல் போல தான் இருக்க.

ரொம்ப அழகா இருக்கு ஷர்டும் உங்களை போலவே. உங்க தலையில் இருக்கும் க்ளிப் கூட சூப்பார்ப்பா, அப்படியே உங்க அப்பா அம்மா பெயரையும் சொன்ன நல்லாருக்கும் இல்ல பாபு அண்ணா!! இதே மாதிரி இன்னும் 2, 3 வருஷத்தில் நவீ குட்டியும் சூப்பரா அறுசுவையில் ஜொலிக்க போறாங்களா?? ம்ம்,

அன்புடன்
பவித்ரா

பேருக்கேத்த ஏஞ்சல் மாதிரி அழகா, க்யூட்டா இருக்க. அதோட உங்க க்ராஃப்ட் சிம்பிளி சூப்பர். ஏஞ்சல் குட்டிக்கு க்ரீட்டிங் கார்டு செய்ய ரொம்பப் பிடிக்குமாமே அதுவும் செஞ்சி காமிங்க. ஏஞ்சலுக்கு இந்த அக்கவோட பெஸ்ட் விஷ்ஸஸ்.

அங்க சொல்ல விட்டது இது
ரொம்ப க்யூட்டா இருக்கு நீ போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறது.

என் கண்ணையே என்னால் நம்பமுடியவில்லை. எப்படி இப்படி எல்லாம். ஏஞ்சல் குட்டி சூப்பர்டா. நீங்க அறுசுவை உறுப்பினர் மகளா அல்லது அறுசுவை உறுப்பினரா... ரொம்ப அழகா தெளிவா இருக்கு எல்லாம். சூப்பர்டா குட்டி. வாழ்த்துக்கள்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கைவினை செய்வது எனக்கு எட்டாத உயரம்... ஆனா இப்போ இந்த குட்டி பாப்பா செய்வதை பாத்த உடனே அசந்து போய்ட்டேன்.... வெல்டன்.... கீப் இட் அப்...... வாழ்த்துக்கள்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

இமா, இமா, இமா.... ஓடியாங்கோ... இது உங்க தோஸ்த் ஏஞ்சல் குட்டியா???!!! யாரா இருந்தாலும் சரிப்பா, ரொம்ப ரொம்ப ரொம்ப கியூட் குட்டி, அழகு வேலையும் கூட. சூப்பர். ரொம்ப சூப்பர் செல்ல குட்டி. :) வருங்காலத்தில் பெரிய ஆளா வருவடா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ஏஞ்சல் குட்டி
ரொம்ப.... ரொம்ப......சூப்பராய் இருக்குடா.
ரொம்ப தெளிவா இருக்கு வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

குழந்தையின் கைவண்ணம் ரொம்ப அழகா இருக்கு! அழகிய ஏஞ்சல் பொண்ணுக்கு என் வாழ்த்துக்கள்.

குட்டி பொண்ணு ஏஞ்சலுக்கு வாழ்த்துகக்ள்.
இவ்வளவு சின்ன வயதில் பொருப்பான வேலை.
ஏஞ்சலின் கை வண்ணம் அழகு

ஜலீலா

Jaleelakamal

ரொம்ப அருமையான கைவேலை. வாழ்த்துக்கள்.

இவ்வளவு நாள் இதைப் பார்க்காம போயிட்டேனே :(

ஏஞ்சல் நீங்க டிசைன் செய்த டிஷர்ட்டும் உங்களைப் போலவே ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள் செல்லக் குட்டிம்மா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துக்கள் ஏஞ்சல். ;)

ஒரு ;) @ வனி.

‍- இமா க்றிஸ்

ஏஞ்சல் இதப்போலவே எம்பொண்ணுக்கும் கத்துகொடுக்கபோறேன்

super da kanna

கடைசி பாராவில என்னமோ புதுசா செய்தி தெரியுதே!! ;) இது எப்போ போட்டீங்க?? ;) இப்பதான் கண்ணில் பட்டது. தாங்ஸ்.

‍- இமா க்றிஸ்

குட்டி ஏஞ்சலுக்கு பெரிய ஏஞ்சலின் அன்பான வாழ்த்துக்கள். well done .ரொம்ப அழகா செஞ்சுரிக்கீங்க
keep it up dear.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

ஏஞ்சல் சின்ன‌ வயதில் உனக்குல் எத்தனை திரம்மை........

முயல்லும் வெல்லும் ஆமையும் வெல்லும் முயலாம்மை வெல்லாது.....

நல்வரவு விண்ணரசி. _()_ இணைந்ததும் முதல் கருத்து ஏஞ்சலுக்கு. :-) சந்தோஷம். மிக்க நன்றி விண்ணரசி. ஏஞ்சலுக்குத் தமிழ் படிக்க வராது. நான் படித்துக் காட்டுகிறேன்.
~~~~~~~~~~
capital L தட்டினால் 'ள்' வரும். capital R + samll a = ற. விரும்பினால் திருத்திவிடுங்கள்.
~~~~~~~~~~
இங்கு கருத்துச் சொல்லி இருப்பவர்களுக்கும் பாராட்டியவர்களுக்கும் ஏஞ்சல் சார்பாக என் அன்பு நன்றி.

‍- இமா க்றிஸ்