ஹாய் .. வாய்புண் மற்றும் தலைபாரம் வீட்டு வைத்தியம் ப்ளிஸ் ..

ஹாய் .. வாய்புண் மற்றும் தலைபாரம் வீட்டு வைத்தியம் ப்ளிஸ் ..

வாயில் நாக்கு பகுதி ஒரே புண்ணாக உள்ளது. தலைய்
உம் மிகவும் பாரமாக உள்ளது. தொண்டை மிகவும் புண்ணாக உள்ளது.. Pls help.. romba kastma irruku.. i could not hv anytig

Wit Love,
Yasho

வாய்ப்புண்ணிற்கு தேங்காய் பால் நல்ல மருந்து.. காலையில் வெறும் வயிற்றில் தேங்கய்ப்பாலை வாயில் ஊற்றி புண்ணில் நன்கு படும் படி சிறிது நேரம் வைத்துருந்து விழுங்க வேண்டும்.. தொடர்ந்து செய்தால் விரைவில் குணம் ஆகிவிடும்.. மற்ற நேரத்திலும் சிறிது எடுத்துக் கொள்ளலாம்..

மணத்தக்காளி இலைகளை பச்சையாக மென்றும் அதன் சாறை விழுங்கலாம்.. சமைத்து உணவுடன் சாப்பிட்டாலும் குணம் தெரியும்..

அதிக காரம் இல்லாமல் சரியான நேரத்திற்கு சாப்பிட்டு,போதிய அளவு தண்ணீர் குடித்தால் வாய்ப்புண் வருவதை தடுத்க்கலாம்..

தலை பாரத்திற்கு விக்ஸ்/யூக்கலிப்டஸ் தைலத்தை சிறிது சுடுநீரில் போட்டு ஆவி பிடித்தால் இதமாக இருக்கும்..

Vaai punnku nenga nallennai(gingely oil) kopulinga.mrng,night try panunga.oil pulling panratha pola..stomachla punn irukanu check panikanga..ungaluku ulcer pbm ilati milk edunga.
Thalai baaram ethanal? Sinus iruka.sinus than reason apdina aavi pidinga..ilati kelvaragu maavai(raagi) kool pola suda veithu foreheadla pathu podunga..

வயிற்றுப்புண் இருந்தால் வாய்ப்புண் வரும். வயிற்றுப்புண்ணுக்கு முதலில் வைத்தியம் பாருங்கள். பச்சை வாழைப்பழம்,வெள்ளரிக்காய்,மணத்தக்காளி கீரை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வயிற்றுப் புண் இருக்கும்போது பால் குடிக்கக்கூடாது. பாலில் உள்ள கால்சியம் வயிற்றுப்புண்ணுக்கு காரணமான அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். தேங்காய்ப்பால், கசகசா நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். நேரத்திற்கு உணவு உண்டாலே வயிற்றுப்புண் வராமல் செய்யலாம். மசாலா, காரங்கள் நிறைந்த உணவு பொருட்களை சிறிது காலம் ஒதுக்கி வையுங்கள். வெறுமனே வாய்ப்புண் என்றால் கடைகளில் கல்தேன் கிடைக்கும் அதை வாங்கி வாய்ப்புண் இருக்கும் இடத்தில் தடவவும்.

தலையில் நீர்கோர்த்து இருந்தால் தலைப்பாரம் உண்டாகும். யூக்கலிப்டஸ் தைலம் போட்டு ஆவி பிடித்தால் சரியாகும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய்! தொண்டை கரகரப்பு நீங்க வீட்டு வைத்தியம் சொல்லுங்க plz....

தோழி வாய் புண்ணிற்க்கு கொய்யா இழையை(கொலுந்தாக) மென்று சாறை விழுங்கி சக்கையை துப்பி விடுங்கள்.மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தால் ஓரளவு கேட்கும்.மற்ற தோழிகள் சொன்னது போல் வயிற்று புண்ணாக இருந்தால் அது சரியாக தான் வைத்தியம் பார்க்க வேண்டும்.
தொண்டை கரகரப்பாக இருப்பதற்க்கு காலையில் எழுந்தவுடன் சூடு பொறுக்கும் அளவு தண்ணீர் அரை டம்ளர் எடுத்து கொண்டு அதில் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து விட்டு அந்த தண்ணீரை கொஞ்சமாக வாயில் ஊற்றி தலையை மல்லாக்க செய்து தொண்டையில் நன்கு படும்படி ஒரு நிமிடம் கொப்பளிக்க வேண்டும்.இதன் பெயர் கார்கில் செய்வது என்பார்கள்.இவ்வாறு எல்லா தண்ணீரையும் கொப்பளிக்க வேண்டும்.இது நன்றாக தொண்டைவலியை குறைக்கும்.காலை,இரவு என இரு முறை செய்தாலே போதும்.
இந்த வைத்தியத்தோடு பாலில் பனகற்கண்டுஒரு ஸ்பூன்,மிளகு ஆறு தட்டியும்,மஞ்சள் தூள் கால் ஸ்பூனும் சேர்த்து நன்கு காய்ச்சி கொஞ்சம் சூடாகவே குடித்து பாருங்கள்.அதே இரண்டு வேலை குடிக்கவும்.சளியினால் ஆன தொந்தரவாக இருப்பின் இது நிச்சயம் கேட்க்கும்.எனது ஒன்பது வயது மகன் கூட ஆறு வயதிலிருந்து இதை கேட்டு வாங்கி குடிப்பான்.தொண்டை வலியும் கரகரப்பும் இரண்டு நாளில் பறந்தோடி விடும்.
முயற்ச்சி செய்து பாருங்களேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

for headache and cold steam is one of the solution..its gives temporary relief.. for mouth problem..
it may be vitamin deficiency problem.. for me i used (Becasule tablet)..its a vitamin tablet.. within 3 to 5 days you can get best results.

உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
எங்களது வெப்சைட் முகவரி
http://www.grannytherapy.com/tam/category/தலை/வாய்-புண்/

..நன்றி !

ஹாய், வாய் புண் ஆர தேங்காய்பால், பருத்திபால், வெந்தயம் ஊறவைத்த தண்ணிர் சாப்பிடலாம்

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

Hi,
உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண
இந்த இழை போய் பாருங்க, :இந்த இணையதளத்தில் வரும் எல்லா குறிப்புகளும் பயனுள்ளதாக இருக்கும்.உங்களுக்கு தேவையான டிப்ஸ் சொல்லி இருக்காங்க
http://www.grannytherapy.com/tam/category/தலை/வாய்-புண்/

இந்த granny கொசுத்தொல்லை தாங்க முடியலையே.. நச்சுன்னு தலையில அடிச்சு நசுக்கப் போறேன்.

மேலும் சில பதிவுகள்