அரட்டை அரங்கம் பாகம் 57

எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......

அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி

ராதா, சாரிம்மா நானும் சாப்பிடப் போய்ட்டேன்மா அதான் வரமுடியல. [தப்பிச்சிடுடா தவமணி] குஜராத்ல அவங்களோட பாரம்பர்ய இன மாடுகளையும் எருமைகளையும் வைத்தே பால் உற்பத்தி செய்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் நமது இனங்களை பறிகொடுத்து விட்டு இப்போது தடுமாறுகிறோம். குஜராத்தில் பால் உற்பத்திதான் முக்கிய தொழில். அதிக மழை பெய்யும் காலங்களில் நீரை சேமித்து வைத்து மாடு வளர்ப்புக்கு மட்டுமே பயன் படுத்துகிறார்கள். கல்ப்ஸ் மிக்க மகிழ்ச்சிம்மா. காங்கோல மழை பெய்கிறதா.

அன்புடன்
THAVAM

ஹாய் அண்ணா ஹாய் அக்கா அச்சச்சோ சாரி சாரி ரொம்ப நாள் கழிச்சு பேசறதுனால கொஞ்சம் வாய்குழறி ச்சே கைதவறி....ஹி ஹி.......
ஹாய் அண்ணா மற்றும் தோழிஸ் ........ஜெயாவின் வணக்கம் யாரவது ஜூட் ஆனிங்க...........
....... ஒன்னியும் பண்ணமுடியாது திரும்பவும் வருவேன்..ஹி ஹி..;)

Don't Worry Be Happy.

வாங்க சகோதரி, புதிய உறுப்பினரை வருக வருக வென அறுசுவை வரவேற்கிறது.

அன்புடன்
THAVAM

அடடா ஏன் இவ்ளோ வேகமா வர்ரீங்க. நாங்க எல்லோரும் இங்கேதான் இருக்கோம். யாரும் ஜீட் ஆகமாட்டோம். கொஞ்சம் உட்கார்ந்து இளைப்பாறிக் கொள்ளுங்கள்.

அன்புடன்
THAVAM

ஜெயா
மாமி அனுப்பின இளநீர் குடிச்சீங்களா.. ஏன் இந்த தடுமாற்றம்.

அண்ணா
தப்பிச்சாலும் விடமாட்டா இந்த ராதா.. அதனால் தானே பாசமலர் என்கிற பட்டம்.. இன்னைக்கு தப்பிச்சுட்டீங்க... கூடிய சீக்கிரம் மாட்டுவீங்க.. பால் உற்பத்திக்கு குஜராத் தானே பேமஸ். ஆனா நம்ம ஊர் பசு மாட்டுப்பால் டேஸ்ட் எங்கயும் வராதுண்ணா.. ரொம்பவே மிஸ் பண்றேன்.. அந்த டேஸ்ட்க்கு ஈடு இணையே கிடையாது

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆஹா வந்த வேகத்தில் நீங்களே ப்ளாட் ஆய்ட்டீங்களே.

அன்புடன்
THAVAM

பாசமலர்கள் கிட்டே இருந்து தப்பிக்க முடியுமா?. குஜராத்தில் பால் உற்பத்தி, ஆனந்த் மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது

அன்புடன்
THAVAM

என்னை மட்டும் தனியா டீ ஆத்த விட்டுட்டு எல்லோருமே எஸ்ஆயிட்டீங்களே

அன்புடன்
THAVAM

என்னை லியோ என்றே அழைக்கவும். அறுசுவை நேயர்கள் யாராகிலும் டூர் போக ஆசைபட்டால் அந்தமான் வாருங்கள்.இங்கு கடலுக்கு அடியில் அழகிய பவழ பாறைகள் உள்ளன. ஆதிவாசிகளை காணலாம். பொருட்களின் விலைதான் அநியாயம் எல்லோரும் வாங்க.

அண்ணா
என்ன செய்ய. டைம் ஆகிடுச்சுல்ல.. சாப்பாடு ரெடி பண்ணிக்கிட்டே பேசிட்டு இருக்கேன். சப்பாத்தி குருமா.. சாப்பிட வர்றீங்களா.. குருமா ரெசிப்பி கூடிய சீக்கிரம் அறுசுவைக்கு வந்துவிடும். பார்த்து சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள தனியா டீ ஆத்த விடுறது கஷ்டமா தான் இருக்கு. என்ன செய்ய.....

லியோ
எல்லா இடத்துலயும் காசு தான் அநியாயமா கொள்ளையடிக்கறாங்க... ம்ம என்ன செய்ய. வாய் உள்ள புள்ள புழச்சுக்கும். உங்கஊருக்கு வரும்போதும் வாய் பேசத்தெரிஞ்சுக்கிட்டு தான் வரணும்போல...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்