உ
காந்தி தாத்தாவுக்கு வாழ்த்து சொல்லலை!
இன்னிக்கு டாக்டர் அப்துல் கலாம் சாருக்கு பிறந்த நாள்!
அவருக்கு வாழ்த்து சொல்லுங்கோப்பா எல்லாரும்! பிளீஸ்.............
http://www.rajtamil.com/2010/10/sivakumar-interviews-living-gandhi-dr.html
இங்க போய் பாருங்கோ!
டாகடர் அப்துல் கலாம்!
உ
வாழும் காந்தியை வாழ்த்த வயதில்லை!
வணங்குகிறேன்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
டாக்டர் அப்துல்கலாம்!
இது வரைக்கும் உங்களப்பத்தி செவிவழியாவே ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன், இனி உங்கள் புத்தகம் படித்து மேலும் தெரிந்துகொள்வேன், என் குழந்தைகளுக்கும் தெரிவிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
வாழ்த்தி வணங்குகிறேன்.
பி.கு. நன்றி மாமி.
Don't Worry Be Happy.
வாழும் காந்தி
Dr. அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 ராமேஸ்வரத்தில் பிறந்தார். இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர் (2002-2007). அவரை செல்லமாக "People's president" என்றனர். அதற்க்கு முன் அவர் DRDO, ISRO வில் aeronautical engineer ஆக பணிபுரிந்தார். அவரை "missile man of india" என்றால் பலருக்கும் தெரியும். போக்ரான் II அணுகுண்டு சோதனைக்கு மூலகாரணமாக இருந்தவர். அவரை அண்ணா பல்கலைகழகத்தில் பார்க்கும் (பார்க்க மட்டும் தான்) பாக்கியம் எனக்கு கிடைத்தது. வருங்காலத்தில் அவருடைய பிறந்த நாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடினாலும் ஆச்சிரியம் இல்லை. இந்த மாபெரும் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் எல்லை இல்லா மகிழ்ச்சி.....அவருக்காக ஒரு இழை...மாமி உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல.....
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
வாழ்த்துக்கள்
இழையை ஆரம்பித்த மாமிக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.அப்துல் கலாம் அவர்களின் அக்னிச்சிறகுகள் எனக்கு பரிசாக கிடைத்தது.ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
dr அப்துல் கலாம்
dr அப்துல் கலாம் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இந்த இழை ஆரம்பித்த மாமிக்கு நன்றி
nanriyudan
கலாம்..
”தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் தான் இந்தியவிற்கு வேண்டும். அப்படி இந்தியாவில் தொலைநோக்குப் பார்வை கொண்ட இரண்டே இரண்டு தலைவர்களில் ஒருவர் கலாம் அவர்கள்”..(அப்போது கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தார்)..
கல்லூரியில் எனது பேராசிரியர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் மேற்கூறியவை.
இன்றும் குழந்தைகளை ஊக்குவிப்பதில் அவரைப் போல் ஒருவர் பிறந்துதான் வரவேண்டும்.. அவரையும் அவரைக் உலகிற்குக் கொடுத்த அவரது பெற்றோர் மற்றும் இந்த நாளையும் நான் வணங்குகிறேன்..
இழை தொடங்கியதற்கு மிக்க நன்றி மாமி :)
அப்துல் கலாம்
அப்துல் கலாம் அவர்களின் ஆசைப்படி ஒவ்வொரு இந்தியனும் இருக்க வேண்டும். இளைஞர்கள் அவருடைய சிந்தனையை பின்பற்றி நடந்தாலே போதும். இந்தியா வெகு விரைவில் வல்லரசாக மாறி விடும். அவரை ஈன்றெடுத்த அவர் அன்னைக்கும் அவரை நமக்கு கொடுத்த இந்த உலகுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். அவர் நெடுங்காலம் நலமாக வாழ நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
லாவண்யா - அவரை நேரில் பார்த்திருக்கீங்களா? நீங்க நிஜமாவே ரொம்ப குடுத்து வச்சவங்க. எனக்கு அவரை பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை.
சாந்தினி - உண்மை தான். அவரை போல் தொலைநோக்கு கொண்ட தலைவர்கள் இனிமேல் இருப்பார்களா என்று சந்தேகம் தான். இன்னொரு தலைவர் யார் என்று சொன்னால் நல்லா இருக்கும்.
எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.
என்றும் அன்புடன்
கிருத்திகா
அப்துல் கலாம் அருமையான
அப்துல் கலாம் அருமையான மனிதர்....
அவரை பற்றி என்ன சொல்ல??
அவரைப்பற்றி அவ்வப்போது கேள்விப்படுபவை நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. அவர் இதுவரையிலும் நாட்டிற்காக ஆற்றிய பணி தன்னிகரில்லாதது.
இந்தியக்குடியரசின் தலைவர்களில்,
என்றும் நினைவில் நிற்கத்தக்க, மகத்தான, அனைவருக்கும் பிடித்தமான தலைவர் என்றால்,
அப்துல் கலாம் அவர்களைத்தான் அனைவரும் கூறுவார்கள்.
அவரது இந்த நாளையும் நான் வணங்குகிறேன்.
இழை தொடங்கியதற்கு மிக்க நன்றி மாமி :-)
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
GOOD MORING 2 ALL !
உ
தனியா இழை தொடங்கினாதான் தலைவர்களுக்கு வாழ்த்து?!!!!!!!
அவுங்கோ ’’தலை’’வர்கள் ஆச்சே! இனி எல்லாதலைவர்களுக்கும் இங்க வந்து வாழ்த்து சொல்லிடுங்கோ எல்லாரும்!
( நம்ம ’’தல’’ அட்மினுக்கும் சொல்லலாம்! தப்பில்லை)
குட்டிபாப்பாவான என் வார்த்தைக்கு செவி மடுத்த
ஜெயலஷ்மி,லாவண்யா,ஆசியா,விஜி,சாந்தினி,கமலா,யோகராணி
உங்க எல்லருக்கும் என் நன்றீஈஈஈஈஈஈஈஈஈஈஈ!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
அப்துல் கலாம்
அப்துல் கலாம் என்னும் சகாப்தத்தை நமக்கு அளித்த அவருடைய தாய் தந்தையருக்கும், கடவுளுக்கும் முதலில் எனது நன்றி.
அவர் பெற்ற விருதுகள்
பத்மபூஸன் - 1981
பத்மவிபூஸன் - 1990
பாரதரத்னா- 1997
அப்துகலாம் வாழும் காலத்தில் நாம் வாழுகிறோம் என்பதே ஒரு மிக பெறுமையான விஷயம்.
இந்த இழையை ஆரம்பித்த மாமிக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்
நித்யா