பட்டிமன்றம்-௨௭ - ஏட்டு கல்வியா? அனுபவ கல்வியா?

ஆன்றோரே! சான்றோரே!! எனை போன்றோரே!! அனைவருக்கும் முதற்கண் என் வணக்கம்.

உங்களுக்கு பிடித்த பட்டிமன்றம் பகுதி ஆரம்பமாகிவிட்டது. நம் தோழி ரம்யா கார்த்திக் (நன்றி ரம்ஸ்) கொடுத்திருந்த தலைப்பை எடுத்துள்ளேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தலைப்பு: ஏட்டு கல்வி - அனுபவ கல்வி.. எது வாழ்க்கைக்கு ஏற்றது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அனைவரும் உங்கள் பேராதரவை தந்து பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தர கேட்டுக்கொள்கிறேன்.

புதியவர்களுக்காக பட்டியின் விதிமுறைகளின் குட்டிச்சுருக்கம்:
- யார் பெயரையும் குறிப்பிட்டு வாதிட கூடாது.
- எந்த மதம், ஜாதி, கட்சியையும் குறிப்பிட்டு பேசுதல் கூடாது.
- பொது மன்றம் என்பதை நினைவில் கொண்டு நாகரீகமான பேச்சு கட்டாயம்.
- நிச்சயம் தமிழில் மட்டுமே பதிவுகள் அனுமதிக்கப்படும். (கிழே எழுத்துதவி இருக்கிறது)
- அரட்டை... நிச்சயம் கூடாது.
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை பற்றிய கருத்துக்கள் இருக்கலாம், வாதங்கள் கூடாது.
- அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

வாங்க வாங்க அம்மாமாரே! வாங்க வாங்க அய்யாமாரே! உங்கள் கருத்துங்களை இங்க வந்து கொட்டுங்க!!!! பட்டிமன்றத்தை கலைகட்ட வையுங்க!!!

முதலில் நடுவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நல்ல தலைப்பு கொடுத்ததற்க்கு ஏட்டு படிப்பை விட அனுபவப்படிப்பே சிறந்தது யென வாதாட வந்துள்ளேன்.சிறிது நேரம் கழித்து வாதத்துடன் வருகிறேன்.

வாங்க வாங்க சுந்தரி. முதல் பதிவு போட்டிருக்கீங்க, ரொம்ப சந்தோஷம். நல்ல தலைப்பா, நன்றி. நீங்க அனுபவப்படிப்பே கட்சியா. உங்க வாதங்களுக்காக காத்திருக்கிறேன். சீக்கிரம் வாதங்களுடன் வாங்க.

இதுவும் கடந்து போகும்.

நடுவர் யோகலஷ்மிக்கு என் வாழ்த்துக்கள். விவகாரமான தலைப்பைத்தான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இன்னும் நம்ம சகாக்கள் யாரும் பார்க்கலை போலிருக்கிறது. எல்லாரும் வந்த பிறகு நான் எந்த அணி என்று முடிவு செய்து வாதங்களுடன் வருகிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாழ்த்துக்களுக்கு நன்றி கல்பனா. விவகாரமான தலைப்பை விவரமாக எனக்கு புரியவைக்கவேண்டியது உங்கள் அணைவரின் வாதங்களின் பொறுப்பு. சீக்கிரம் எந்த தரப்புன்னு முடிவு செய்து உங்கள் சரவெடி வாதங்களுடன் வாங்க பார்ப்போம். உங்கள் வாதங்களுக்காக பட்டிமன்ற அரங்கம் காத்திருக்கு.

இதுவும் கடந்து போகும்.

ஆரம்பித்துள்ள பட்டிமன்றத்திற்கும். நடுவர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இதில் சந்தேகமே வேண்டாமே ஏட்டுக் கல்விதான் என்பது எனது தலைப்பு

அன்புடன்
THAVAM

நல்ல தலைப்பு, ஆனா தலைப்பில் பட்டிமன்றம் உஎ என்று வருகிறதே, எனக்கு உஎ என்பதன் அர்த்தம் புரியலையேப்பா. எந்த அணி என்று யோசித்து வாதத்துடன் பிறகு வருகிறேன். பட்டி நல்ல படியா நடக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

உங்கள் வாழ்த்துக்களால் இந்த பட்டிமன்றம் சிறப்பா அமையனும் தவமணி அண்ணா. பலமான எதிரணிக்கு நீங்க அடி போட்டிருக்கீங்க. சந்தேகம் இல்லாம ஏட்டுக்கல்விதான, எப்படின்னு தங்கச்சிக்கு புரிய வையுங்கோலேன்.

இதுவும் கடந்து போகும்.

௨௭ என்றால் தமிழில் 27 என்று பொருள் பவித்ரா. நம்பளது தமிழ் இணையதளம் இல்லையா. அதான் ஒரு சிறு முயற்சி. உங்களுக்கு இந்த முயற்சி பிடிச்சி இருக்கா.

யோசிங்க யோசிங்க யோசிச்சு நல்ல முடிவா எடுங்க, ஆனால் நாளைக்குள் முடிவை எடுத்துருங்க. ஓகேவா. வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி பவி.

இதுவும் கடந்து போகும்.

நல்ல முயற்சி, எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது யோகா. கண்டிப்பா நாளைக்கு வந்திடுவேன் வாதத்தோடு.

அன்புடன்
பவித்ரா

நல்ல (விவகாரமான, குழப்பக்கூடிய) தலைப்பை தேர்ந்தெடுத்த எங்கள் தமிழ்(ழச்சி) நடுவர் யோகாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லாரும் வந்த பிறகு என் கட்சியை சொல்கிறேன். பட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்