குட்டி ஏஞ்சல் பிற்ந்துவிட்டால்

அருசுவை தோழிகள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி குட்டிரேயாமாவிர்கு ஒரு குட்டி ஏஞ்சல் பிறந்து விட்டால்
சென்ற புதன் காலை 5 மணீக்கு என் செல்வத்துக்கு சனா என்று பெயரிட்டு உள்ளென் operation நல்ல படியாக முடிந்து
நானும் பாப்பாவும் நல்ல படியாக வீடு வந்து சேர்ந்துவிட்டோம்.
நல்ல படியாக என் அம்மாவும் வந்துவிட்டார்.உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்

Vazhthukal remaya! Sana enthiran padatha pathu vachengala!kutti angela nala pathukonga! Thai pal kodunga! Unga babyku en 1000muthangal. Aval bright futureku kadavulai vendikuren.take care

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ராதிகா, பிரசவம் நல்லபடியாக முடிந்து, அழகிய குட்டி ரோஜாவை பெற்றெடுத்தற்க்கு வாழ்த்துகிறேன். குட்டி தேவதைக்கு என் அன்பு முத்தங்கள் :)) நீங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அறுசுவைக்கு பழையபடி வர பாருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குட்டிரேயம்மாவுக்கு குட்டி ஏன்ஜெல் சானாவா. வாழ்த்துக்கள் பாப்பாவுக்கும், அம்மாவுக்கும்.

இதுவும் கடந்து போகும்.

சகோதரி, பிரசவத்துக்கு முன் நீங்கள் பட்ட கவலை, பயம் எல்லாவற்றையும் நீக்கி அழகான ஏஞ்சலை பெற்றெடுத்துள்ளீர்கள். நீங்களும் உங்கள் ஏஞ்சலும் கணவரும் மன நிறைவான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
THAVAM

வாழ்த்திய அனைத்து தோழிகளுக்கும் நன்றி.யோகா என் பாப்பாவின் பெயர் சானா இல்லை.சனா நல்லா இருக்கா
நான் ரோபோ பார்துட்டு ரொம்ப பிடிச்சு போய் வெச்சன் என் குட்டி ஏஞ்சல் பெயருக்கு ஏத்த மாதிரியே அவ்ளோ
அழகு பா பார்த்துட்டே இருக்கலாம்

வாழ்த்துக்கள்! அம்மாவும் வந்தாச்சா? இனிமேல் ஜாலி தான். சனா குட்டியையும், உங்களையும் நல்லா பார்துக்கோங்க.

ஓ பெயரை தப்பா சொல்லிட்டனா. பெயர் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ராதிகா. சனா ஏஞ்சலை இந்த ராதிகா ஏஞ்சல் நல்லா பார்த்துப்பாங்கான்னு தான் இறைவன் உங்ககிட்ட அனுப்பியிருக்கார்.

இதுவும் கடந்து போகும்.

வாங்க சனா, புது உலகம் எப்படி இருக்கு. ராதிகா உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்ப்பா! சனா பேர் புதுசா இருக்கு, நேத்து தான் எந்திரன் படத்தில் இந்த பேரை கேள்விப்பட்டேன். இந்த பெயரின் அர்த்தம் தெரியுமா? உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
பவித்ரா

அன்பு ராதிகா,

உங்களுக்கும், புதிய வரவான உங்கள் மகள் சனாவுக்கும், மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்துகள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

காலைலதான் நித்யா உங்களை பற்றி அரட்டையில் விசாரித்தார்கள். அதுக்குள்ளையும் சனாவோட வந்துட்டீங்க. பாப்பாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்