உளுந்து அடை

தேதி: October 18, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

முழு உளுந்து - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
முட்டை - 2
நெய் - 2 தேக்கரண்டி
கெட்டியான தேங்காய் பால் - ஒரு டம்ளர்
சீனி - ஒரு டம்ளர்


 

உளுந்தை மூன்று மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் உளுந்தை கழுவி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
பின்பு முட்டை, அரிசி மாவு, சீனி, தேங்காய் பால் இவற்றை சேர்த்து நன்கு மிக்ஸியை ஓட விடவும்.
எல்லாம் நன்கு கலந்து தோசை மாவு பதத்திற்கு வந்ததும் அதை அகன்ற குக்கர் பாத்திரத்தில் ஊற்றி நெய்யும் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
ரைஸ் குக்கரிலேயோ, ப்ரஷர் குக்கரிலேயோ வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடு வந்ததும், இந்த பாத்திரத்தை வைத்து மூடி நன்கு வேக விடவும். ஒரு மணி நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை வேகும்.
பிறகு வெந்ததா என்று கத்தியால் குத்தி பார்த்து விட்டு இறக்கவும். ஆறியதும் துண்டு போட்டு எடுத்து பரிமாறவும். மிகவும் சத்தான அந்த கால உணவு பண்டம் இது. வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை சாப்பிட கொடுப்பார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் அப்சரா நீண்ட இடைவெளிக்கு பின் உங்க குறிப்ப பார்க்குறது சந்தோஷம். நல்ல சத்தான குறிப்புதான் கொடுத்து இருக்கீங்க. இந்த அடையில் முட்டை சேர்க்காமல் செய்யலாமா. முட்டைக்கு பதிலா வேற என்ன சேர்க்கலாம்.

ஹாய் அப்சரா!

உளுந்து வடை செய்திருக்கின்றேன்.உளுந்து ஆடை இப்போதுதான் கேள்விப்படுகின்றேன்.
அடடா ...............இதுவும் நல்லாய்தான் இருக்கின்றது.செய்து பார்த்திட வேண்டியதுதான். செய்து பார்த்து விட்டு சொல்லுகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இந்த அடையில் முட்டை சேர்க்காமல் செய்யலாமா. முட்டைக்கு பதிலா வேற என்ன சேர்க்கலாம்.//
எனக்கும் இதே சந்தேகம்தான்.
இனிப்புக்குப்பதில் உப்பு, காரம் சேர்க்கலாமா? எம் பெண்ணுக்கு இனிப்பே பிடிக்காது.
அன்புடன்
ஜெமாமி

ஹாய் அஃப்சரா எப்படி இருக்கிங்க ஊருக்கு பொனிர்கள எப்படி இருந்தது ஜாலியா இருந்துச்சா ஊரில் அனைவரும் நலம.அடை சூப்பரா இருக்கு கலத்தப்பமும்.வட்டலப்பமும் சேர்ந்தமாதிரிதானே இருக்கும்.ஆனா சூப்பரா இருக்கும்.நன்றிகள் பல. இப்படிக்கு ரைஹான.

குறிப்பு வந்ததுமே பார்த்துட்டேன்!ஆனா முட்டை என்பதை பார்த்ததும் பின்னூட்டம் கொடுக்காமல் ஓடி போயிட்டேன், திடீரென்று வினோவின் பின்னூட்டத்தையும், ஜெமாமியின் பின்னூட்டத்தையும் பார்க்க நேர்ந்தது. எனக்கும் முட்டை இல்லாமல் எப்படி செய்வதுனு கொஞ்சம் சொல்லுங்களேன்.

பிறகு, அதுதான் தோசை மாவு பதத்தில் இருக்கே, அதை இட்லி வேகவைப்பது போல வைத்தால் வெந்திடாதா? ஒரு மணி நேரம் எடுக்குமா வேகவைக்க என்று கொஞ்சம் சொல்லுங்கள்.

இன்னும் நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

ஹாய் அப்சர உளுந்து அடை பார்க்க ரொம்ப நல்லா இருக்குபா மேலும் பல குறிப்பு கொடுக்க வாழ்த்துக்கள்

ஹாய் யோகராணி நலமா...?
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றிங்க.சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

ரெய்ஹானா நான் நலம்.நீங்க நலமா...?
ம்ம்ம்...ஊரில் ரெண்டு மாசம் நல்லா போச்சு.குழந்தைகளும் நல்லா enjoy பண்ணாங்க.தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

ஹாய் நஸ்ரின்,தங்கள் கருத்துக்கும் மிகவும் நன்றிங்க.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் வினோஜா,ஜெயந்தி மாமி பவித்ரா....எல்லோரும் நலம்தானே..?
தங்கள் கருத்துகளை கண்டு மிக்க மகிழ்ச்சி.

இதை ஆவியில் வேக வைப்பது போல் செய்வதால் முட்டை இல்லாமல் சரிவராது.ஆனால் தோசை போல் கொஞ்சம் மொத்தமாக வார்க்கலாம்.நெய்யோ,நல்லெண்ணையோ கொஞ்சம் அதிகமாக வானலியில் ஊற்றி இந்த கலவையில் (முட்டை இல்லாமல்) மைதா கொஞ்சம் கலந்து களியாக அடுப்பில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிண்டலாம்.
காரமாக வேண்டுமானால்,வெங்காயம்,இஞ்சி,கறிவேப்பிலை எல்லாம் அறிந்து போட்டு கலந்து தோசை போல் மொத்தமாக வார்த்து சாப்பிடலாம்.

ஆஹ மொத்தத்தில் உளுந்து நம் உடம்பிற்க்கு அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பார்க்கவே ரொம்ப யம்மியா இருக்கு.. காரமோ இனிப்போ உளுந்தில் செய்யும் பதார்த்தம் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும்..

எனக்கும் ஒரு சந்தேகம் இதை இட்லி போல் இட்லி குக்கரில் வேக வைக்கலாமா? ஒரு மணி நேரம் வேக வேண்டும் என்கிறீர்கள்.எனில் எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது? ஆவி வந்த பின் சிம்மில் வைத்து வேக வைத்தால் போதுமா?

அப்சரா,நலமா இருக்கீங்களா?ரொம்ப நாளாச்சு உங்களுடன் பேசி...உங்கள் குறிப்பு பார்த்து மகிழ்ச்சி..அருமையான குறிப்பு..செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் சாந்தினி...நலமா...?
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.தாராளமாக இட்லி பாத்திரத்தில் வைக்கலாம்.கலவை வைத்திருக்கும் பாத்திரத்தின் பாதியளவு படும் வரை தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.நன்றாக தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன்,அடுப்பை சிம்மில் வைத்து அப்படியே ஒரு மணி நேரம் விட்டு விடுங்கள்.பிரகு திறந்து வெந்து விட்டதா என்று கத்தியில் குத்தி பார்த்துக் கொண்டு பின் பத்தவில்லை என்றால் இன்னும் சிறிது நேரம் வைய்யுங்கள்.சரியா....செய்து பார்த்து விட்டு தெரிவியுங்கள்.

இளவரசி எப்படி இருக்கீங்க...?நான் நல்லா இருக்கேன்.
பேசி பல மாதங்கள் ஆச்சு இல்ல.... தங்கள் கருத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி.மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா
எப்படி இருக்கீங்க. நானும் உங்க குறிப்பு நேத்தே பாத்துட்டேன். அவசரமா பாத்தேன். முட்டை என்று இருக்கவும் எதுவும் பதில் போடாமல் போய்விட்டேன். பிறகு ஜெமாமி, பவி, வினோஜா எல்லாரும் கேள்வி கேட்டுவிட்டார்கள். வித்தியாசமான குறிப்பு. மிக்க நன்றி மேடம். மேலும் நிறைய குறிப்புகள் கொடுங்க. நாங்க கத்துக்க வேண்டாமா.. முட்டை இல்லாம் ட்ரை பண்ணி பாக்குறேன்பா.. நன்றி..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பாஉளுந்து அடை பார்க்கவே ரொம்ப நல்லா இருக்குது.நானும் செய்து ர்த்து விடுவேன்

idhuvum kadandhu pogum.

ஹாய் ராதா நலமாக இருக்கின்றீர்களா?
உங்கள் கருத்துக் கண்டு மிக்க மகிழ்ச்சி.முட்டை இல்லாமல் நான் சொன்னது போல் கழியாக கிழ்ழ்ண்டி யோ அடையாகவோ சாபிட்டு பாருங்கள்.

ஹாய் வனிதா..,நலம்தானே?
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சாரா உளுந்து வட்லாப்பாம் நல்ல இருக்கு, நாங்களும் பூப் பெய்திய பெண்களுக்கு கொடுப்போம் , மற்றவர்களும் இடுப்பெலும்பு பலம் பெற சாப்பிடலாம்.

இதை புட்டிங் போல் (அ) கேக் போல் முட்டைக்கு பதில் சிறிது மைதா, பேக்கிங்க் பவுடர் சேர்த்து ரைஸ் குக்கர் அல்லது பேக்கிங் செய்து சாப்பிடலாம்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா மேடம் எப்படி இருக்கீங்க..?
தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றிங்க.கூடுதலாக டிப்ஸும் கொடுத்திருக்கீங்க.ரொம்ப சந்தோஷம் மேடம்.அவர்களுக்கு நிச்சயம் அது உபயோகபடும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அப்சரா!நேற்று உங்கள் உளுந்து ஆடை செய்தேன் நன்றாக வந்தது. மேலும் இதுபோல் பல குறிப்புக்கள் தர வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அப்சரா... நேற்று இரவு இந்த குறிப்பை செய்துட்டேன். 3 விதமா. ஒன்னு படத்தில் காட்டின அடை. இன்னொன்னு தோசை கல்லில் தோசையாக, அடுத்தது எண்னெய் காய வைத்து கரண்டியால் எடுத்து ஊற்றி அப்பம் போல சுட்டு எடுத்தேன். மூன்றும் சுவையாக வந்தது. நல்ல குறிப்புக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்சரா,
நலமா?
முட்டை இல்லாமல் அம்மா செய்து தருவாங்க உங்க முறையில் செய்து பார்க்கணும்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

யோகராணி..,செய்து விட்டு பின்னூட்டம் தந்ததற்க்கு மிகவும் நன்றிங்க.

வனிதா..,(ஒரே கல்லில் மூன்று மாங்காய் போல...)மூன்று விதமா செய்து அசத்திட்டீங்க போலிருக்கு.பலே,பலே,இங்கு வந்து என்னுடன் அதை பகிர்ந்து கொண்டதற்க்கு மிகவும் நன்றி வனி.

கவிதா முட்டையுடன் செய்து பார்த்துட்டு சொல்லுங்க என்ன..?

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.