முருங்கை,பேஸின் பிட்லா.

தேதி: October 20, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கை காய் --- பெரிதாக 2
கடலை மாவு --- 100 கிராம்
சமையல் எண்ணை --- ஒரு பெரிய குழிக்கரண்டி
மஞ்சத்தூள் --- ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் --- இரண்டு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் --- ஒருடீஸ்பூன்
உப்பு --- தேவையான அளவு
கடுகு --- ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு --- ஒருஸ்பூன்


 

முருங்கைக்காயை விரல் அளவு நீளத்துண்டங்களாக கட் செய்யவும்.
ஒருபாத்திரத்தில் தண்ணீர் உற்றி முருங்கையை வேக விடவும்.
பாதி வெந்ததும் உப்புசேர்த்து ஒருகொதி வேக விட்டு இறக்கவும்.
தண்ணிரை வடித்து வைக்கவும்.
கடலை மாவில் பஜ்ஜிமாவு கரைப்பதுபோல, உப்பு,காரம்,மஞ்சதூள் பெருங்காயத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
ஒரு நான் ஸ்டிக் கடாயில் பாதி குழிக்கரண்டி எண்ணை ஊற்றவும்.
கடுகு,உளுந்து தாளித்து சிவந்ததும் கரைத்து வைத்துள்ள கடலைமாவுக் கரைசலை அதில் விட்டு கைவிடாமல் கிளறவும். சீக்கிரம் வெந்துவிடும்.
வெந்த முருங்கையைச் சேர்த்து மீதி எண்ணையும் விட்டு நன்கு கிளறவும்.
பந்துபோல சுருண்டுவரும் சமயம் இறக்கவும்.


சப்பாத்தி, சாம்பார் சாதம் தயிர் சாதமுடன் தொட்டுக்கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

ரெசிபி நல்லாயிருக்கும் போலிருக்கு.சுலபமாகவும் இருக்கு செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் யெப்படியிருக்குன்னு.

வருகைக்கு மிகவும் நன்றி. செய்து பாருங்க. மிகவும் ஈசிதான்.

கோமு நான் கேட்ட ரெசிப்பி கொடுத்துட்டீங்களே.. தேங்ஸ்பா. கண்டிப்பா ஒரு நாள் செய்து பார்த்துட்டு சொல்றேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

குறிப்பு போட்டதில் இருந்து உங்க பின்னூட்டம் வல்லியே என்று நினைத்தேன்.
வந்துட்டீங்க. ஏற்கனவே உங்க கிட்ட சொல்லியிருக்கேன் இல்லியா? இந்த குறிப்பு

கோமு,

பிட்லே சும்மா சுவையில் பிச்சி ஒதரிடுச்சு. நன்றாக இருந்தது.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!