தேதி: October 20, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சேனைக்கிழங்கு - கால் பகுதி (100 கிராம்)
உருளைக்கிழங்கு - 3 (நார்மல் சைஸ்)
சிவப்பு மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்துப்பொடித்த நிலக்கடலை - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் / சாய்ஜீரா - கால் தேக்கரண்டி
முதலில் சேனை மற்றும் உருளைக்கிழங்கை தோல் சீவி நீளவாக்கல் நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் சேர்த்து தாளித்து பின்பு மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி நறுக்கி வைத்திருக்கும் சேனையை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

சேனை சற்று வதங்கியதும் நறுக்கின உருளையை சேர்க்கவும். பின்பு உப்பு சேர்க்கவும். (சேனை வேக நேரம் ஆகும் என்பதால் அதை முதலில் சேர்க்க வேண்டும். பிறகு உருளை சீக்கிரம வெந்துவிடும்.)

இரண்டும் வெந்து கிரிஸ்ப்பாக வந்தவுடன் மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிவிட்டு பிறகு வறுத்துப்பொடித்த நிலக்கடலை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்.

சுவையான சேனை உருளை கறி ரெடி.

Comments
ஹாய் ராதா ஹரி ,
ஹாய் ராதா ஹரி ,
உங்க குறிப்பு பார்க்கவே அழகா இருக்கு ..செய்து பார்த்து பின்னுட்டம் அனுப்புகிறேன் .....வாழ்த்துக்கள்
nanriyudan
ராதா,
ராதா,
சேனையும்,உருளையும் சேர்த்து எளிய மொறு மொறு ரெசிப்பி கொடுத்து இருக்கீங்க.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவிற்கு நன்றி....
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
விஜி, அன்பரசி
விஜி
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி.. கண்டிப்பா செய்து பாரத்துட்டு சொல்லுங்க..
அன்பரசி
உங்க பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றிப்பா.. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லுங்க.ஹர்ஷா எப்படி இருக்கான்?
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ராதா ஹரி
இந்த சேனைக் கிழங்கை இங்க இன்னும் கண்டுபிடிக்கல.
கிடைத்ததும் செய்து பார்த்துச் சொல்கிறேன்.
- இமா க்றிஸ்
இமா
இமா
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி. வெறும் உருளைக்கிழங்கு மட்டும் சேர்த்து செய்யலாம். செய்து பார்த்துட்டு சொல்லுங்க. நன்றி..
"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"
ராதா ஹரி
ப்ரோஸன் சூரன்
இங்க என் கமண்ட் பார்த்து ஒருத்தர் 'ப்ரோஸன் சூரன்' போட்டோ மெய்ல் பண்ணி இருக்காங்க. ;) கெதியா சமைச்சுருவேன்.
ப்ரோஸன் மொருமொரு என்று வருமா? ;(
- இமா க்றிஸ்
ராதா
ராதா, சேனைய காண்பிச்சு வயித்தெரிச்சலை கொட்டிக்கறீங்களா? நாங்க இருக்கறது காடுதான். இருந்தாலும் இந்த வஸ்து எல்லாம் இல்லைப்பா. அப்பிடீன்னா என்னான்னு கேக்கறாங்க. உங்களோட சேனை - உருளை கறி இப்பவே பண்ணனும் போல தோணுது. என்ன பண்ண இங்க சேனை கிடைக்காதே :( நான் இந்தியா போன பிறகு பண்ணிட்டு சொல்றேன் பா. பார்க்கவே ரொம்ப நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள். தொடர்ந்து குறிப்புகளை தரவும் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
raathaa.
ராதா,இன்னிக்கு சேனை உருளைக்கறி செய்தேன்மா. ரொம்ப நல்லா வந்தது.
ராதா அக்கா,
ராதா அக்கா,
நலமா?
எளிய குறிப்பு ..
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
ராதாக்கா
ராதாக்கா செய்தாச்சு உங்க சேனை உருளை கறி. எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அதுவும் வறுத்து பொடித்த கடலை சுவையும் ரொம்ப சூப்பரா இருந்துச்சு. நன்றி ராதாக்கா.