ஹேண்ட் பேக் வாங்கிய/வாங்கும் அனுபவங்கள்

தோழிகள் அனைவருக்கும் வணக்கம். நேற்று ஷாப்பிங் போனபோது ஹாண்ட்பேக் வாங்கலாம் என்று பார்த்துக் கொண்டு இருந்தேன்.. ஒரு கைப் பை மிகவும் அழகாக இருந்தது.. ஆனால் விலை தான் நன்றாக இல்லை MRP:ரூ.1150.டிஸ்கவுண்ட் போக 800 ரூபாய்க்குத் தருவதாகக் கூறினான்.ஒருவருடம் வாரண்டி என்று கூறினான். இருந்தாலும் அந்தக் கைபை(பெரியதாகக் கூட இல்லை மீடியம் அளவு தான்) அவ்வளவுக்கு வொர்த்தி இருக்காது என மனது கூறியது.. நான் கைப் பை பார்த்துக் கொண்டிருந்த கடை பெரிய ஷோரூமும் கிடையாது.ஒரிஜினல் லெதர் என்று கண்டரிய ஏதேனும் டிப்ஸ் இருக்கிறதா?ஆர்டிஃபிசியல் லெதர் எனில் என்ன மாதிரியானவை நன்றாக உழைக்கும்?

எப்படி எல்லாம் பேரம் பேசுவீர்கள் நீங்கள்?:)

சொந்த ஊராக இருந்தால் நம் ஊரில் எந்தக் கடை நன்றாக இருக்கும் எனத் தெரிகிறது.. ஆனால் ஊரு விட்டு ஊரு வந்து குழப்பம் தான் மிஞ்சுகிறது.. உங்களின் அனுபவங்கள் என்ன சொல்கின்றன தோழிகளே? பேரம் பேசி அந்த கடைகளில் வாங்கலாமா,இல்லை ஷோரூம்களில் போய் ப்ரைஸ் டாகில் இருக்கும் விலையைக் கொடுத்து வாங்கி வந்து விடுவது சிறந்ததா?

நான் ஒரு Hand Bags பைத்தியம் நிறைய விதம் விதமா வச்சிருக்கேன், ஒரே நாளில் வேலைக்கு போக ஒன்னு,ஷாப்பிங் போக,பையன் பிக்கப்,டராப்,Walking இப்படின்னு ஒரு நாலு தேவைப்படும் அப்புறம் நிறைய நானே கைவேலைகள் செய்தும் ஃபிரண்ட்சுக்கு கிஃப்ட் பண்ணிருக்கேன் நானும் வச்சிருக்கேன். பர்ஸ் கூட இதில உண்டு.
பொதுவா இந்தியாவில குவாலிட்டி பார்த்து தான் வாங்கனும்.நான் அங்கே இருந்த வரைக்கும் ஒரு லெதர் பேக்ஸ்,பர்ஸ்,சூட்கேஸ் மட்டும் விற்கிற ஷோ ரூம் ல தான் வாங்கினேன். ஆனால் தரமான பொருளுக்கு விலை அதிகம் தான் கொடுக்கணும்.
இப்போ இங்கே ரெக்சின் வெரைட்டிஸ் தான் வாங்கறது.இப்போ கூட சில வாங்கினேன்.
பொதுவா எந்த ஒரு பொருளும் சைசில் இல்லை விலை. அதில் உபயோகித்திருக்கும் தரமான பொருளால் விலை உயர்ந்த வேலை பாடுகளால் தான் விலை அதிகமாக இருக்கிறது.
விலை குறைவாக போகும் பொழுது தப்பில்லை ஆனால் அதன் காலம் சில நாட்களில் முடிஞ்சி பல்லக்காட்டும். அதனால உடனே தூக்கி போட்டுட்டு பிறகு வேற ஒன்னு விலை கம்மியா வாங்கலாம்.இது விலை குறைவா வாங்கும் பொழுது இருக்கும் நன்மை.
விலை அதிகமா கொடுத்து தரமானது வாங்கினா அது விரைவில வீனாப்போகாம நல்லா இருக்கும் ஆனால் ரொம்ப நாளா அதையே பயன்படுத்தும் பொழுது நமக்கே போர் அடிக்கும்.

ஊருக்கு போனப்போ எல்லோருக்கும் ஒன்னொன்னு என்று
எனக்கு நிறைய அனுபவம் இருக்கு.உங்களுக்கு வேற என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்.

சீப் அண்ட் பெஸ்டா வாங்குவது தான் என்னுடைய சாய்ஸ்.ஒரு மாடல் கொஞ்சநாளில் போரடித்துவிடும்.அதனால் அந்தந்த மாடலுக்கு தகுந்த மாதிரி சீப்பா வாங்குவதுதான் பெஸ்ட்.இப்பல்லாம் அகலமான பெரிய பேக் தான் பாஷன். டிசைன் பாம்பு தோல் போல ப்ரௌன் இப்ப லேட்டஸ்ட் டிரென்ட்

உங்கள இருவரின் கருத்துக்களுக்கும் ரொம்ப நன்றி.. இவ்வள்வு நாள் விலை குறந்ததாகத்தான் வாங்கிக் கொண்டு இருந்தேன்.. அவை எல்லாம் சீக்கிரம் போய் விடுகின்றன.நிறைய வாங்கினால் குப்பை போல் வேறு சேர்ந்து விடுகிறன்றன அவை.. என்வேதான் சற்று தரமாக ஒன்னே ஒன்னு வாங்கலாம் என்று நினைத்தென்.. விலையைப் பார்த்து குழம்பிவிட்டென்.. நன்றி உமா மற்றும் சுந்தரி.. :)

நானும் சுந்தரி அக்கா சொன்ன மாதிரி தான் இருந்தேன்ப்பா, ஆனா 1000 க்கு மேல் போட்டு வாங்கும் போது உங்களுக்கு முக்கியமா எங்கயாவது போகும் போது இல்லைன்னா பிக்னிக் மாதிரி போகும் போது நல்லாருக்கும். இப்ப நானும் ஒரளவுக்கு 400 அல்லது 500ல் வாங்கினா நல்லாருக்கும். நீங்க தினமும் யூஸ் பண்ண போவதில்லையே சாந்து. ஆபீஸ் போகும் போது தினமும் எடுத்து போறது என்றால் கொஞ்சம் சிரமமே! இப்ப நான் வைத்திருக்கும் பேக் கூட ரொம்ப தேடி சாப்பாடு எல்லாம் வைக்கிற மாதிரி ஓரளவுக்கு பெரிதாக வாங்கினேன். விலை 310 மட்டுமே!

நீங்க நல்ல தரமான கடையில் வாங்குங்க, முக்கியமா branded showrooms ல வாங்கினா தான் நாம் கொடுக்கும் பணத்துக்கு பேக் கொஞ்ச நாளாவது நமக்கு உழைக்கணும் இல்லை. நான் இங்க பேக் வாங்கறது என்றாலே “ரோஷன்”தான். ஹேண்ட் பேக்கும் சரி, ட்ரேவல் பேக்கும் சரி, எல்லாமே 100 ரூபாயில் இருந்து 5000, 10000 வரை அங்கு நல்ல தரமானதாக கிடைக்கிறது. ஈரோடு வரும் போது ரோஷனில் ட்ரை பண்ணி பாருங்க.

அன்புடன்
பவித்ரா

தாங்ஸ் பவி.. முடிந்தால் ரோஷனில் போய் பார்க்கிறேன்.. :)

ஹாய்,,,, தோழிஸ் காலை வணக்கம்,, ஒரு உதவி,,, தேடி பாதேன்,,, தேடி பாபேன்,,, அதுக்கு முன்னடி சீனியர கேக்கலனு தான் பாதுஷா செய்வது எப்படினு தெரிந்தால் சொல்லுங்க pls

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

http://arusuvai.com/tamil/node/129
http://arusuvai.com/tamil/node/1004

விமலகீதா நீங்க லின்க்தானே கேட்டீங்க.
எனக்கு எங்கம்மா செய்யற பாதுசா ரொம்ப பிடிக்கும். ஆனா அவங்க எப்படி செய்வாங்கன்னு எனக்கு தெரியாது ஒவ்வொருதடவையும் அம்மா சமையல பக்கத்தில இருந்து நோட் பண்ணிக்கனும்னு நினைப்பேன் அப்புறம் அங்க போனன்ன சமையல் ரூம்னு ஒன்னு இருக்கிறதே மறந்துடுவேன்;(
இந்த தீபாவளிக்கு அம்மாகிட்ட குறிப்பு வாங்கியாச்சும் பண்ணிபாத்தரனும்;)

ஒரு சின்ன டிப்ஸ், பாதுசா எண்ணெயில் போட்டு பொரியும் போது உதிரியா பொரிஞ்சுதுனா ( சில சமயம் டால்டா அதிகமா போனா இப்படி ஆகும்னு நினைக்கிறேன்) கொஞ்சம் அழுத்தி உருண்டை பண்ணி போடுங்க பொரிஞ்சுபோகாது;)

சின்ன சின்ன சந்தேகத்தில (இழை) இந்தமாதிரி டவுட்டெல்லாம் கேளுங்க மத்தவங்களுக்கும் உபயோகமா இருக்கும்.

Don't Worry Be Happy.

நன்றி சொல்ல உனக்கு (உங்கலுக்கு) வார்த்தை இல்ல எனக்கு,,,,, உங்காலுக்க பாடினது எப்படி இருக்கு ஜெயா சிஸ்,,,நன்றில சொல்லமாடேன் பாதுஸா செய்து தாரேன் சரியா,,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

சிஸ்....னா தங்கைன்னுதானே அர்த்தம் அப்ப நானே செஞ்சு பார்சல் பண்றேன் சரியா;) இனி இங்க பேசினா சாந்து வந்து நம்மள அடிப்பாங்க ஓ.கே பை பை;)

Don't Worry Be Happy.

என் சாய்ஸ் லஞ்ச், ரிகார்ட் புக், அது, இது இப்பிடி துலைஞ்சு போனால் கவலைப்படத் தேவையில்லாத ;) எல்லாம் வைக்க குட்டைக் கைபிடியோட ஒரு பெரிய பாக்.

கையோட கூடவே எடுத்துட்டு உலாவ முக்கியமானது எல்லாம் கொள்ளுற மாதிரி நீள ஸ்ராப்போட ஒரு குட்டி பாக். வேற பை எடுத்துப் போறதானா இதுல இருந்து தேவையானதை மட்டும் அதுல மாத்திட்டு பிறகு திரும்ப வீட்டுக்கு வந்ததும் ரீப்ளேஸ் பண்ணிரலாம். இல்லாட்டி எதையாச்சும் மிஸ் பண்ணி விட்டுட்டுப் போய் கஷ்டமாகிரும்.

ஸ்கூலுக்கு ஒரே பை வச்சு இருக்கிறதுல ஒரு லாபம் இருக்கு. எங்காவது கைமாறி விட்டுட்டா இது இன்னாரோடது என்று தெரிஞ்சு கொண்டுவந்து சேர்த்துருவாங்க. (நம்ம வேலை அப்படி.) ;)) அதனால விலையானாலும் நிறைய காலம் வருவது போல வாங்குவேன். என்ன சில சமயம் போரடிச்சுரும். ;(

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்