Fist time my sister go to Abu Dhabi . We dont know in which type of cook item like masala and anyhow to carry with her travel time.Pls friends reply soon
Fist time my sister go to Abu Dhabi . We dont know in which type of cook item like masala and anyhow to carry with her travel time.Pls friends reply soon
எதுவுமே வேண்டாம்
எதுவுமே வேண்டாம் கைய்யை வீசி வர சொல்லுங்கள் வேனா இங்கிருந்து ஊர் போறப்ப வாங்கி போகலாம்.அந்தளவுக்கு எல்லாமே கிடைக்கும்
தேவையில்லாமல் மசாலா தூள் அது இதுன்னு வெயிட்டை கொண்டு வர வேண்டாம்..வேனா பொன்னி புழுங்கல் அரிசி,கீ ரைஸ் அரிசி,ஜீரக சம்பா அரிசி, வடாம்,ஊறுகாய் கொண்டு வரலாம்.
மற்ற எல்லாமே இங்கு கிடைக்கும்..இருந்தாலும் எனக்கு இதுவரை தேடி கண்டுபுடிக்க முடியாத ஒன்று நமூர் விளக்குமார்...ஒரு தோழி அதுவும் இங்கு கிடைக்கும் எஙிறார் ..பார்ப்போம்.
தமிழ்
தமிழ்ல கேள்வி இல்லாத போது யாரும் பதில் போட வேண்டாமே, ப்ளீஸ்...
தமிழ்ல கேள்வி மாத்துங்கபா, அதுக்கு கீழ எழுத்துதவி இருக்கு, தலைப்பும் தமிழ்லேயே இருக்கட்டும் இது தமிழ் தளம் என்பதை நினைவில் கொள்ளவும்.
Don't Worry Be Happy.
மாட்டேன் ஜெயலக்ஷ்மி:-)
மாட்டேன் ஜெயலக்ஷ்மி:-)
வ்வ்வ்..ஏன்னு கேளுங்க..முன்ன பல மாசமா நான் கூட தமிழ்ல பதிவு பல போட்டிருக்கேன்:-).அப்ப என்னை யாரும் அதட்டல அட்மின் கூட தமிழ்ல போடலாமே ஊக்கபடுத்துவார் தவிற கட்& ரைட்டா சொல்ல மாட்டார்
இதொரு பொது இணையதளம் தானே..நாம இப்படி தான் போடனும்னு கண்டிப்பா சொல்லிவிட முடியாதில்லையா...ஆனால் உற்சாகப்படுத்தலாம்...போடுறவங்க ஆர்வமா இருந்தா தானா தமிழ்ல கேட்டு போட தான் போறாங்க..இப்ப தெரியாததால இப்படி இங்க்லீஷ்ல கேக்குறாங்க.
ஜெயலக்ஷ்மி டாய்லெட் போகும் முன் உங்க பைய்யன் பயங்கரமா டான்ஸ் ஆடுவான்னு போட்டீங்களே ஒரு இழைல நான் சிரிச்ச சிரிப்புக்கு அளவே இல்ல.
கீதா நீங்க அப்டியே கீழ பாத்தா எழுத்துதவின்னு இருக்கும் அங்கு கீழ பெட்டியில தங்லீஷ்ல அடிச்சா மேல தமிழில் வரும்..கொஞ்சம் முதலில் கஷ்டமா தான் தெரியும்..இருந்தாலும் ட்ரை பன்னுங்க ப்லீஸ்..என்னது அதுக்குள்ள உங்க தங்கச்சி அபுதாபிக்கு வந்து சேந்துட்டாங்களா??:-0
தளி
ஹ ஹ நானும் அப்படிதான் யோசிப்பேன் அட அவசரமா கேள்வி கேட்டுருக்காங்க அவங்களுக்கு பதில் சொல்லாம ஏன் போயி தமிழ்ல எழுதுங்கன்னு தொந்தரவு பண்ணனும்னு;))
ஆனா நீங்களே யோசிச்சு பாருங்க தமிழ்ல எழுத தெரிஞ்சும் சில பேர் அடிக்க சிரமமாயிருக்குன்னு ஈசியா ஆங்கிலத்துல எழுத ஆரம்பிச்சிடறாங்க, அப்புறம் எல்லா பதிவும் ஆங்கிலமாவே இருக்கும், பதில் சொல்றவங்களும் ஆங்கிலத்திலதான் சொல்லியிருப்பாங்க;) அப்புறம் அரட்டையும் ஆங்கிலத்தில;)
இவங்க இழை ஆரம்பிச்சதுனால என்ன பதில் வரும்னு கண்டிப்பா உடனுகுடன் பாத்துட்டுதான் இருப்பாங்க, சரி அதுவும் இல்லாம இது அவ்வளவு அவசரம் இல்லையே;) நின்னு நிதானமா பர்ச்சேஸ் பண்ணி வரப்போறாங்க அப்ப தமிழ்ல எழுதும்போது தோழிகளும் சந்தோஷமா பதிவு போடுவாங்களே...;)
Don't Worry Be Happy.
Thanks Thalika
Thank u Thalika where is the Tamil keyboard here couldn't find out.
தமிழில் எழுத
இந்த பக்கத்தில் அப்படியே கீழே போனீங்கன்னா உங்க வலது பக்க கார்னரில் "தமிழ் எழுத்துதவி"ன்னு ஒரு லின்க் இருக்கும். அதை க்ளிக் பண்ணி அதில் சொல்லியிருக்கற மாதிரி தமிழில் எழுதுங்க.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
abudhabi
வணக்கம் அனைவருக்கும்.
எனக்கு அபுதாபி பற்றி இன்றைய விவரங்கள் வேண்டும்
பொருளாதாரம், தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு, வீடு வாடகை ..
தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்
அபுதாபி
அபுதாபியை பொருத்தவரை எந்த ப்ரச்சனையும் இல்லாமல் வண்டி ஓடுது..கை நிறைய சம்பளம் மட்டும் போதும் வீடும் எடுக்கலாம்,பாதுகாப்புக்கு பாதுகாப்பு என நிம்மதியா இருக்கலாம்,பாதுகாப்பு.அதென்னங்க தமிழ்மக்களுக்கு பாதுகாப்பு இங்கு பொதுமக்கள் எல்லோருக்கும் பாதுகாப்பு தான்
thalika
ஹாய் தளிகா,
நீங்க எங்க இருக்கீங்க?நானும் அபுதாபி தான்.reply pls
நானும் அபுதாபி - இல் தன
நானும் அபுதாபி - இல் தன இருக்கிறேன். Western Region Mirfa -இல் இருக்கிறேன். நம்ம ஊர் பொருட்கள் எல்லாம் கிடைக்கிறது.
Thalika: விளக்குமார் Safeer மால்லில் கிடைகிறது. ஆனால் நான் வாங்கி 6 மாதங்கள் ஆகிறது.
வாழ்க வளமுடன்