தேதி: October 21, 2010
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சேனைக்கிழங்கு -- ஒரு பெரிய துண்டு(சுமார்100கிராம்)
துருவிய தேங்காய்ப்பூ -- ஒருமூடி
புளி --ஒரு நெல்லிக்காய் அளவு
எண்ணை -- ஒருஸ்பூன்
கடலைப்பருப்பு -- 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு -- 1 ஸ்பூன்
மிளகாவத்தல் -- 5
பெருங்காயப்பொடி -- ஒரு டீஸ்பூன்
உப்பு -- தேவையான அளவு
கடாயை அடுப்பில்வைத்து, எண்ணைஊற்றி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாவத்தல்,பெருங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
சேனை, தேங்காய், உப்பு, புளியுடன் வறுத்த பொருட்களையும் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்து பரிமாறவும்.
சேனையுடன் புளி சேர்ப்பதால் நாக்கில் அறிப்பு உண்டாகாது. செய்வதும் சுலபம். சூடு சாதமுடன் பிசந்து சாப்பிடவும், இட்லி, தோசை, சப்பாத்தியுடனும் தொட்டுக்கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.
Comments
Mrs. Komu,
சேனையை வேக வைக்க வேண்டாமா?
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
வேண்டாம்.
ச்சேனை வேகவைக்க தேவை இல்லை. பச்சையாகவே அரைக்கலாம்.