அறுசுவையின் இளவரசிக்கு முதல் பிறந்தநாள்

நம்ம அறுசுவையின் இளவரசி, செல்ல குட்டிக்கு வரும் 23ஆம் தேதி (நாளை மறுநாள்) முதல் பிறந்த நாள். யாருன்னு நான் பெயர் சொல்ல வேண்டுமா??? யாராவது தப்பா சொன்னா தலையில் ஒரு குட்டு. வந்து சரியா வாழ்த்துங்க :). பரிசுகள் அனுப்ப விரும்புறவங்க, எனக்கு அனுப்பிடுங்க, நான் குடுத்துடறேன் ;) ஹிஹிஹீ.

நவீனா குட்டிக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நாளனிக்கு சொல்லலாம் என்று நினைத்தேன், அதுக்குள்ள வனி புது த்ரெட் தொடங்கியாச்சா:))

இது சும்மா ட்ரைய்லர் வாழ்த்து, மெயின் பிக்சர் சனிக்கிழமைதானுங்கோ!!!

அன்புடன்
பவித்ரா

தோழிகள், தோழர்கள், சகோதரிகள், சகோதரர்கள்.... எல்லாரும் இந்த பக்கம் வாங்க. உங்க எல்லாருடைய அன்பும், ஆசிர்வாதமும் நம்ம செல்ல குட்டிக்கு வேண்டும். யார் அந்த குட்டி? யார் அந்த தேவதை? இந்த உலகில் பாதம் பதிக்க துவங்கி தன் முதல் பிறந்த நாளை காண இருக்கும் அந்த வாலு யாருன்னு கண்டுபிடிச்சீங்களா??? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா நல்ல தலைப்ப----அறுசுவையின் இளவரசி.. குட்டி தேவதைக்கு இப்பவே ஒரு அட்வான்ஸ் விஷ் பண்ணிடலாம்.

Advance Happy Birthday Naveena kutti........

மெயின் விஷ் சனிக்கிழமை தான். இதுக்காகவாவது நான் சனிக்கிழமை அறுசுவைக்கு வரணும். அதுசரி.. அறுசுவை தலைவர் ட்ரீட் எப்ப தருவாரு. அறுசுவையின் ராஜா ராணி, இளவரசியோட பிறந்த நாள் ட்ரீட் எப்போது?....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சரியா கண்டு பிடிச்ச பவிக்கு ஒரு ரோஸ். வனி தொடங்கின வாழ்த்து இழை பவிக்கு ட்ரெய்லரா??? கொதரிடுவேன். நவீனா'காக வேலை செய்யாம இருந்த என் கம்ப்யூட்டரை 1 மணி நேரம் போராடி நானே சரி செய்து வந்து இழை துவங்கி இருக்கேன். இன்னொரு இழை துவங்கினா பென்ச் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்பதான் பாபு போன் செய்து “மாமி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது”ன்னு சொன்ன மாதிரி இருக்கு. அதுக்குள்ள குட்டிக்கு ஒரு வயசா.

நவீனா குட்டி எல்லா நலனும் பெற்று இனிதே வாழ வாழ்த்துக்கள்.

அப்படியே நவீனா குட்டியை பார்க்க விரும்புபவர்கள்
”மணிகளாலான மயில் வடிவம்” முகப்பில் இருக்கிறதே கைவேலை - அந்த இழைக்குப் போய் பாருங்கள். குட்டி சூப்பர்.

சுத்தி போடுங்க செண்பகா.

அன்புடன்
ஜெமாமி

நவீனா குட்டிக்கு advance பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)

//தலைவர் ட்ரீட் எப்ப தருவாரு.//

கெடுகேதர்ல கண்டிப்பா இதற்குத் தனியா ட்ரீட் தரணும் ஆமா!! கெட் டு கேதரே ட்ரீட் தான்னு எல்லாம் சொல்லக் கூடாது.. இப்பவே சொல்லிட்டன்!! ;)

ராதா... கவலை படாதிங்க மெயின் விஷ்'கு அண்ணா'கு போன் போடுங்க சனிக்கிழமை (பிசியா இருக்கும்போது தொந்தரவு பண்ணா தான் நல்லா இருக்கும் ;)). ஹஹஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மெயின் பிக்சரும் இதே இழையில் தான், ஓகேவா, டோண்ட் வொரி பி ஹாப்பி!!!:))

அன்புடன்
பவித்ரா

வனி
என்ன ஒரு நல்ல எண்ணம். போன் போட்டு திட்டு வாங்க சொல்றீங்க.. ரொம்ப நல்ல மனசுங்க உங்களுக்கு.

நீங்க மாலத்தீவு ல இருந்து முதல்ல போன் போடுங்க. அப்பறம் பின்னாடியே நானும் போன் பண்ணிடறேன். ஓகே வா. ரெண்டுபேரும் சேர்ந்து திட்டு வாங்கலாம்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

செல்ல நவீனா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். சனிக்கிழமை ஸ்பெஷல் வாழ்த்துக்களும் சொல்ல வந்திடுவேனே இந்த அத்தை :)

நவீனா குட்டி உங்களோட பரிசுப் பொருட்களை மாலேயில் உள்ள யாரோ அமுக்கப் பார்க்கறாங்க. உஷாரா இருந்துக்கோ செல்லம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்