குழந்தைக்கு சோயா பால் கொடுக்கலாமா?

என் குழந்தைக்கு 1 வயது 4 மாதங்கள் ஆகின்றது இப்போது அவனுக்கு சோயா பால் கொடுக்கலாமா அதே போல் இது வரை பீட்ரூட்டும் கொடுக்கவில்லை அதையும் இப்போது உணவில் சேர்த்து கொள்ளலாமா

பசும்பால்,மற்ற பால் பொடி அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு சோயா பால் தான் கொடுப்பார்கள்..பீட்ரூட்டும் கொடுக்கலாம்

குழந்தைகளுக்கு 5வது மாதத்தில் இருந்தே காய்கறி சூப் தரும்போது அதில் பீட்ரூட்டையும் சேர்த்து தரலாம். பீட்ரூட்டை துருவி வேகவைத்து அதனுடன் சாதத்தையும் சேர்த்து மிக்சியில் அரைத்து தரலாம். சோயா குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று. உயர்ந்த அளவு புரதம் நிறைந்த உணவு.அதனால் கண்டிப்பாக சோயாவை சேர்த்துக் கொள்ளலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா நீங்க குழந்தைகள் எப்படி இருக்கீங்கா?, சோயா பால் எந்த முறையில் குழந்தைக்கு கொடுக்கனும், கொஞ்சம், விளக்கம் கொடுக்க முடியுமா?.

மனோ, நானும், குட்டீசும் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? குட்டி பொண்ணு எப்படியிருக்கா? சோயா பால் சாதாரண பாலை போன்றே தரலாம். அதிகமான திக்காகவும், அதிக தண்ணீராக இல்லாமல் இருந்தால் போதுமானது. நன்கு ஓடியாடும் குழந்தைகளுக்கு கொஞ்சம் திக்காக தரலாம். நான் என் குட்டீசுக்கு நடுத்தரமாக தருகிறேன். சோயா மாவாக இருந்தாலும் சப்பாத்தி மாவில் கலந்து சப்பாத்தியாகவும் தரலாம். ஒரு வயது குழந்தைகளுக்கு வெல்லம் சேர்த்து கஞ்சி போன்றும் தரலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சோயா பால் எனறால் என்ன?எஙகு கிடைக்கும்

//சோயா பால் எனறால் என்ன?// சோயா பீன்ஸ் விதைகளைப் பதப்படுத்தி செய்யும் பால்.
//எஙகு கிடைக்கும்// இந்தியாவில எல்லா இடமும் கிடைக்கணும். நீங்க வழக்கமா பேபி ஃபூட் வாங்கும் கடைல கேட்டீங்கன்னா சொல்லுவாங்க.

அவசியம் என்றால் தவிர கொடுக்க வேண்டாம். மீதி உணவு சரியாகக் கொடுக்கப்பட்டால் சோயாவுக்கு போகத் தேவையில்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்