சாதனைத் தமிழனுக்கு ஓட்டு போடுங்கள் ப்ளீஸ்

தோழிகளே நீங்களும் நானும் செய்யத் தயங்கும் சமூகப் பணியை விருப்பத்தோடு கடந்த எட்டு ஆண்டுகளாக தடையின்றி செய்து வருகிறார் மதுரையை சேர்ந்த திரு.நாராயணன் கிருஷ்ணன் அவர்கள்.

இவரின் இந்த தொண்டை அங்கீகரித்து CNN நிறுவனம் உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் ஒருவர் முதலாவதாக வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார். இந்த சாதனைத் தமிழன், இந்தியன் வெற்றி பெற நாம் நம் நேரத்தில் கொஞ்சத்தை செலவிட்டு அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தோழிகளை அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.

ஓட்டளிக்க செல்லவேண்டிய பக்கம்
http://heroes.cnn.com/vote.aspx

ஒருவர் எத்தனை ஓட்டு வேண்டும் என்றாலும் செய்யலாம். கட்டணம் எதுவும் இல்லை. நம் நேரம் மட்டுமே தேவை. தயவு செய்து தோழிகளும் தோழர்களும் ஓட்டு அளிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அப்படி என்ன சாதனை செய்துட்டார்னு பார்க்கறீங்களா? ரோட்டில் மனநலம் குன்றியவர்களைப் பார்த்தால் நாம் என்ன செய்வோம். பரிதாபப் படுவோம் அல்லது ஒதுங்கி செல்வோம். ஆனால் இவர் கடந்து எட்டு ஆண்டுகளாக இது போன்ற 400பேரை தினந்தோறும் தேடிச்சென்று மூன்று வேளையும் உணவளித்து ஊட்டி விடுகிறார். ஒரு சமையல் கலை நிபுணரான இவர் தனக்கு வெளிநாட்டில் கிடைத்த வேலையை உதறி விட்டு இப்பணியைச் செய்கிறார். வெளிநாட்டுக்கு கிளம்புவதற்கு முன் ஒரு முதியவர் பசியால் தன் மலத்தையே உண்ட காட்சி இவரை பாதித்து விட்டது. வேலையை தூக்கி எறிந்து விட்டு அன்றிலிருந்து இப்பணியை செய்து வருகிறார். தினந்தோறும் 100சதுர கிலோமீட்டர் பரப்பலவில் உள்ள மனநலம் குன்றியவர்களுக்கு வீதி வீதியாக தேடிச் சென்று மூன்று நேரமும் உணவளிக்கிறார். இதுவரைஒரு கோடியே இருபது லட்சம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளார்.

இந்த மாமனிதரை வெற்றிபெறச் செய்வது இந்தியராகிய நம் ஒவ்வொருவரின் கடமை.

தயவு செய்து ஒட்டு போடுங்கள். மீண்டும் அந்த பக்க முகவரியை கொடுக்கிறேன்
http://heroes.cnn.com/vote.aspx
நன்றி

சகோதர சகோதரிகள் தயவு செய்து தங்கள் நேரத்தில் கொஞ்சத்தை செலவிட்டு திரு. நாராயணன் கிருஷ்ணனுக்கு வாக்களியுங்கள் ப்ளீஸ்! ப்ளீஸ்!! ப்ளீஸ்!!!

எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை வாக்களியுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கொஞ்ச நாளைக்கு முன்னால், இவர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு டொனேஷன் கொடுத்ததாக என் மகன் சொல்லியிருந்தார். ஒரு இழையில் நான் அதைப் பற்றி சொல்லியிருந்தேன்.

கண்டிப்பாக நீங்கள் சொன்னதை செய்கிறோம், கவிசிவா.

அன்புடன்

சீதாலஷ்மி

நன்றி சீதாம்மா! உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரியப் படுத்துங்கம்மா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் ஓட்டு போட்டுட்டேன், தோழிஸ் நீங்களும் போடுங்க, அதிக நேரம் எல்லாம் ஆகலை, இரண்டு நிமிடத்துக்கும் குறைவே:-)

Don't Worry Be Happy.

நன்றி ஜெயா. ஒருவரே எத்தனை ஓட்டு வேண்டுமானாலும் போடலாம். அதனால் முடியும் போதெல்லாம் போடுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி
20 ஓட்டு குத்திட்டு வந்துட்டேன். நல்ல விஷயத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஓட்டுப் போட்டாச்சு, கவி.
வாணி

கவி,
வணக்கம்.எனக்கு இவரைப்பற்றி தெரியும்.ஆனால் இந்த விஷயம் தெரியாது.பகிர்ந்து கொண்டதற்கு என் நன்றிகள் கோடி.நான் இப்போதே சென்று ஓட்டளிக்கிறேன்.மீண்டும் நன்றி.

அன்புடன்
நித்திலா

ஓட்டுப் போட்டாச்சு கவி.

ஒட்டு போட்டாச்சு கவி தெரிவித்ததுக்கு நன்றி

மேலும் சில பதிவுகள்