நாட்டுவெடிகுண்டு...

சொல்லத்தோனுச்சு அதான் சொல்ல வந்துருக்கேன்... இப்ப எங்க ஊர்ல(கொழுமம்) முதல்முறையா நாட்டு வெடிகுண்டு வெடிச்சுருக்கு... எங்க வீட்டுக்கு கீழ... 30 பேருக்கு ரொம்ப பெரிய காயங்கள்... ட்ராக்டர்ல வெடிச்சதாவும், புதைச்சு வெச்ச வெடிகுண்டு மேல ட்ராக்டர் சக்கரம் ஏறினதால வெடிச்சதாவும் சொல்றாங்க என்னன்னு இன்னும் சரியா தெரியலை. கலெக்டர், போலிஸ் எல்லாரும் வந்துருக்காங்க எங்க வீட்டு ஜன்னல கண்ணாடி கதவுகள் உட்பட அனைத்து கடைகளின் கண்ணாடிகளும் உடைஞ்சுருக்கு... யாரோ சமூகவிரோதிகள் வெச்சுருக்கறதா கூட சொல்லராங்க ஏதும் சரியா தெரியலை... நியூஸ் வரும் பாருங்க... எங்க வீட்டைக்கு கூட காட்டுவாங்க...

மீண்டும் பேசலாம்...

லதா பத்திரமா இருந்துக்கோங்க. அண்ணாவையும் கவனமா இருக்க சொல்லுங்க. இதயம் படபடன்னு துடிக்குது. பயமா இருக்கு.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஐயோ கடவுளே, இது என்ன கொடுமை. மனிதாபிமானம் செத்து போயிடுச்சா??? மனுசங்களே மனுசங்களுக்கு ஆபத்தா இருக்காங்க....நினைச்சாலே கை கால் எல்லாம் நடுங்குது. உங்களுக்கு அங்க எவளோ கஷ்டமா இருக்கும்...
நீங்களும்,உங்க husband நல்லா இருக்கீங்க தான?? ஒன்னும் ஆகலையே?? நல்ல இருக்கீங்க தான??கடவுள் தான் எல்லாருக்கும் நல்ல புத்திய தரனும்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பாத்து இருங்க லதா! காலம் கெட்டுக்கடக்கு. ஒவ்வொரு நாம் பார்த்துதான் வைக்கணும் என்பது சாத்தியமே இல்லை என்றாலும் ரொம்ப கவனமா இருக்கணும் இல்லையா!! குழந்தையையும் ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க, வினித் அண்ணா இல்லாம எங்கயும் போகாதீங்க. பாத்து இருங்கப்பா!!

அன்புடன்
பவித்ரா

நீங்க பாதுகாப்பா இருங்க மா. நீங்க சொல்லும்பொதே பயமா இருக்கு. அதிகமா வீட்டைவிட்டு வெளியே வராதிங்க. யார் வீடு தேடி வந்தாலும் உடனே விசாரித்து பதில் கூறுங்கள். உடனே வீட்டினுள் சேர்க்காதீர்கள். இனி எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது கடவுளே

ஏமாறாதே|ஏமாற்றாதே

பாத்து இருங்கமா கேக்கவே மனதுக்கு கஷ்டமா இருக்கு வெளியில் எங்கேயும்

போக வேண்டாம் ஜாக்கிரதையா குழந்தையைபார்த்துக்கோங்க

தோழி கேக்கவே பயமா இருக்கு. நான் உங்களுக்காக பிராத்தனை பண்ணுறேன்.பாத்துஇருங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

முதல்ல இது போல் இனி இலங்கையில் நடக்காமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

எனக்கு ஒரு கஷ்டம் வரும் போது முதலில் இலங்கை மக்களைத்தான் நினைத்துக்கொள்வேன். எவ்வளவு கஷ்டங்கள். நமக்குத் தெரிந்தது, நாம் பார்த்தது என்னவோ ஒரு விழுக்காடு இருக்குமா?

லதா தற்பொழுது இலங்கையில் வசிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
வந்து சொல்லுங்கள் லதா. இங்கு எல்லோருக்கும் கவலையாக இருக்கிறது.

அன்புடன்
ஜெமாமி

லதா நான் காலையில் டி.வியில் பார்த்த போது உங்கள் ஊர் எனத் தெரியாது. தைரியமாக இருங்கள், கடவுள் நம்மை கைவிடமாட்டார்.

ஒன்றும் பயம் இல்லை, லதாக்கிட்ட பேசினேன், அவங்க நலமா தான் இருக்காங்க. அவங்க வீட்டுக்கு கீழேயே தான் வெடித்ததாம், வீட்டில் கண்ணாடியெல்லாம் உடைந்ததாக சொன்னாங்க. லதா இருப்பது உடுமலைப்பேட்டை பக்கத்தில். பயப்படவேண்டாம் மாமி. மற்ற தோழிகளும் பயப்பட வேண்டாம், லதாவும் குடும்பத்தாரும் நலம்.

அன்புடன்
பவித்ரா

ரொம்ப நன்றி பவி. நல்ல காரியம் பண்ணுனீங்க. நல்லா இருக்காங்கனு கேட்ட
பின்னாடி தான் நிம்மதியா இருக்கு!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்