பாகற்காய் குழம்பு

தேதி: October 25, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (30 votes)

 

பாகற்காய் - 3 (சுமாரான அளவு)
வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
தனியா - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 4 பல்
மிளகாய் வற்றல் - 4 (காரத்திற்கு தகுந்தாற் போல்)
உப்பு - தேவையான அளவு
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லிதழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் வெங்காயத்தை தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாகற்காயை அரைவட்டவடிவ வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், மிளகு சேர்த்து வதக்கவும். மிளகு வெடிக்க ஆரம்பிக்கும் போது தனியா, சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளித்து நறுக்கி வைத்திருக்கும் பாகற்காய் சேர்த்து வதக்கவும்.
பிறகு புளியை கரைத்து ஊற்றி பின் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கெதிக்க விடவும்.
காய் நன்கு வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க விடவும். பிறகு பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லித்தழை சேர்க்கவும். சுவையான பாகற்காய் குழம்பு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா ராதாக்கா, சூப்பர் ரெசிப்பி, என் தோழிக்கு பாகற்காய் பிடிக்காது, இப்படி செய்தால் கசப்பு தெரியாதுன்னு நினைக்கிறேன். விருப்ப பட்டியலில் சேர்த்திட்டேன், இதை கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் ராதாக்கா, 5 ஸ்டாரும் கொடுத்தாச்சு

அன்புடன்
பவித்ரா

நானும் கொம்பம் பாவற்காயில் புளிகுழம்பு போல் செய்வேன் ராதா. சுவையா இருக்கும். ஞாபகப்ப்டுத்திட்டீங்க. சீக்கிரமே செய்து பார்த்துட்டு சொல்றேன் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி..

பவி
இதுல கசப்பு தெரியாதுடா. நல்லாருக்கும். கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்லு.. 5 ஸ்டார் யாருக்கு பவி கொடுத்த?

ஆமினா
வந்து பின்னுாட்டம் கொடுத்ததுக்கு மிக்க நன்றிப்பா.. எனக்கு உங்க பின்னுாட்டம் பாத்ததும் நம்ம மெயில் காமெடி தான் நினைவுக்கு வந்தது. தேங்ஸ்பா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா... முகப்பில் பாகற்காய் குழம்பு'னு பார்த்ததும் குழம்பிட்டேன், இது நம்ம அனுப்பின படம் மாதிரி இல்லையே என்று. நானும் பாகற்காய் குழம்பு குறிப்பு அனுப்பி இருந்தேன் ;) உள்ளே வந்ததும் தான் இது முற்றிலும் வேறுபட்ட குறிப்பு என்று புரியுது. நிச்சயம் செய்து பார்த்து சொல்றேன். நல்ல குறிப்பு, வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராதா,
பாகற்காய் குழம்பு,ரெசிப்பி வித்தியாசமா இருக்கு.என்னவருக்கு பாகற்காய் ரொம்ப பிடிக்கும்.எப்படி செய்தாலும் விரும்பி சாப்பிடுவார்.கண்டிப்பா செய்துட்டு பதிவு போடுறேன்.நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

ராதா அக்கா,

சூப்பரா இருக்கு போங்க
கண்டிப்பாக செய்து விட வேண்டியது தான்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வனிதா
நீங்களும் பாகற்காய் குழம்பு அனுப்பிருக்கீங்களா.. ஹைய்.. என்ன ஒரு ஒற்றுமை..
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா. கண்டிப்பா செய்து பாருங்க. .நல்லாருக்கும்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஸ்டார் கொடுத்தேன், ஆனா கொடுக்கலை போல, இப்ப கொடுத்திட்டேன்.

அன்புடன்
பவித்ரா

அன்பரசி
பையன் எப்படி இருக்கான். அண்ணாக்கு கண்டிப்பா பண்ணிக்கொடுங்க. நல்லாருக்கும் வித்தியாசமான டேஸ்ட்ல. செய்துட்டு பதிவு போடுங்க. உங்க பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றி..

கவிதா
வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா.. கிருஷ்ணர் என்ன பண்றாரு.. விஷமம் பண்றாரா? போட்டோல அழகா இருந்தது குட்டி. கண்டிப்பா செய்து பாருங்கப்பா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பவி
தேங்ஸ்டா. உன்னோட மெயிலுக்கு ரிப்ளை பண்ணிட்டேன்பா.. என்ன சொல்றதுன்னு புரியல.. இருந்தாலும் நிறைய சொல்லிருக்கேன். போய் படி.. டைம் இருந்தா ரிப்ளை பண்ணு..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா வீட்டுல எல்லோருக்கும் பாகற்காய் பிடிக்கும். இதுவரை பாகற்காய் குழம்பு சாப்பிட்டது இல்லை. ஒரு நாள் வீட்டுல செஞ்சு கொடுக்கணும். ராதா பாகற்காயை நறுக்கும் போது அந்த விதையை எடுத்துட்டுதான் சேர்க்கனுமா.

விதை நீக்கிட்டு தான் சேர்க்கணும் வினோ!

அன்புடன்
பவித்ரா

வினோ
பாகற்காய் விதை கண்டிப்பா நீக்க வேண்டும் என்பது இல்லை. ஒரு சிலருக்கு விதை பிடிக்காது. அதனால் அதை எடுத்துவிட்டு செய்வது. உங்களுக்கு வீட்டில் அந்த பிரச்சனை இல்லை என்றால் தாராளமா விதையோட செய்யலாம்பா. என் அம்மா விதையோடு தான் செய்வாங்க. ஃப்ரை பண்ணும்போது கூட விதை இருந்தா தான் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. அதுனால விதை சேர்ப்பது நம் விருப்பம் தான்பா

உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா...

பவி பதில் போட்டதுக்கு நன்றிம்மா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

றாதா அசத்துறீங்க,ரொம்ப சூப்பரா, அருமையா இருக்கு.எனக்கு பாவற்காய் என்றால் நல்ல விருப்பம்.
உங்கள் முறைப்படி நான் ஒரு போதும் செய்ததில்லை.செய்து பார்த்து விட்டு வருகின்றேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பவி, ராதா நேற்று உடனே பதிலளித்தற்கு நன்றி. ராதா எங்க வீட்டுல பாகற்காய் சாம்பார், பொரியல் பண்ணும் போது விதையோடதான் சேர்ப்பாங்க. விதைய எடுத்துட்டு சாப்பிடறது கஷ்டமாக இருக்கும். நீங்க செய்ததுதான் ஈசியா இருக்கு.

யோகா
வந்து பின்னுாட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றிப்பா.. கண்டிப்பா செய்து பாருங்க. ரொம்பவே நல்லாருக்கும்.

வினோ
விதையை நறுக்கும்பொதே எடுத்துட்டா ஒரு வேலை கம்மி. இல்லைன்னா பிடிக்காதவுங்க அதை பொறுமையா சாப்பாட்டுல இருந்து பொறுக்கி வச்சுக்கிட்டு இருப்பாங்க. எதுக்கு வம்புனு நானே எடுத்துட்டு சமச்சுடுவேன். ஆனா எனக்கு பாகற்காய் விதை பிடிக்கும். ஆனால் கணவருக்கு பிடிக்காது. :-(

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதாக்கா, நாளைக்கு இது செய்யலாம்னு இருக்கேன், ரூம் மேட் கிட்டயும் சம்மதம் வாங்கிட்டேன் செய்வதற்கு. ரூம் மேட்கு பாகற்காய் பிடிக்காது அதனால் தான். ஒரே ஒரு சந்தேகன் என்னன்னா?? இதுக்கு பொரியல் எது நல்லாருக்கும் ராதாக்கா!! நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன், எது செட் ஆகும்ன்னு தெரியலை ;( ஒரு ஐடியா கொடுங்களேன். இல்லைன்னா முட்டைகோஸ் தான் செய்யலாம்னு இருக்கேன்:))

அன்புடன்
பவித்ரா

ம்ம் இதுக்கு தேங்காய் சேர்த்த பொரியல் எது வேணும்னாலும் செய்து சாப்பிடலாம் பவி.. அதாவது பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் எது வேணும்னாலும் பண்ணலாம்பா.. நல்லாருக்கும். ஏன்னா குழம்பு காரமா வச்சா தான் நல்லாருக்கும். அதுக்கு மைல்டா காய் இருந்தா நல்லாருக்கும். கூட்டு கொஞ்சம் சுமாரா தான் இருக்கும். பொரியல் தான் பெஸ்ட்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஓகே அக்கா, நாளைக்கு செய்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்றேன். பை பை :))

அன்புடன்
பவித்ரா

மிகவும் அருமை

இதில் பூண்டு அரைக்கும் போது சேர்க்கணுமா, அதை சொல்லலியே!!!!

அன்புடன்
பவித்ரா

ராதா உங்க பாகற்காய் குழம்பு சூப்பர் ராதா
நேத்து ராத்திரி இதுவும் உப்புமா கொழக்கட்டையும் செய்தேன் ரொம்ப நன்னா இருந்தது

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

என்ன டேஸ்ட் தெரியுமா:))

மதியத்துக்கு தான் செய்தேன், கொஞ்சம் மிச்சம் இருந்ததால் காலையில் தோசைக்கு லைட்டா தொட்டுக்கொண்டோம், என் தோழி எப்படி செய்யனும்னு கேட்டா, சூப்ப்பரா இருக்குனு சொன்னா :)) எனக்கு ஒரே குஷியா போச்சு:)

பூண்டு எப்ப சேர்க்கனும்னு தெரியலை, அதனால பூண்டு போடலை. அப்புறம் காயை கட் பண்ணி 1 மணி நேரம் உப்பு கலந்த நீரில் போட்டேன், அரை மணி ஆனதும் நீரை மாற்றினேன். எப்பவும் பாகற்காய் செய்யும் போது இதை பின்பற்றுவதால் இந்த முறையும் இப்படிதான் செய்தேன். நல்ல டேஸ்ட் ராதாக்கா!! ஊருக்கு போய் அம்மாவை உட்காரவைத்து இதை சமைச்சு போடபோறேனே :)))))) மிக மிக நன்றி. நிறைய நிறைய குறிப்புகள் கொடுங்க. முட்டைகோஸ் பொறியல் தான் சைட்டிஷ்:))அப்புறம் தனியாவுக்கு பதிலாக தனியாப்பொடி போட்டேன்.

அன்புடன்
பவித்ரா

ஏஞ்சலின் விஜய்..
உங்க வருகைக்கும் பின்னுாட்டத்திற்கும் மிக்க நன்றி...

மீரா
சாரிப்பா.. நீங்க மெசேஜ் பண்ணினத கவனிக்கல. மறக்காம செய்து பார்த்து பின்னுாட்டம் கொடுத்ததுக்கு மிக்க நன்றிப்பா....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தேங்ஸ் பவி
செய்து பார்த்துட்டு மறக்காம பின்னுாட்டம் கொடுத்ததுக்கு.. பூண்டு வதக்கி அரைக்கும்போது சேர்ப்பதுதான். உனக்கு பூண்டு பிடிக்கவில்லை என்றால் சேரக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைடா.. கண்டிப்பா ஊருக்கு போய் அம்மாக்கு செஞ்சு கொடு. அம்மா என்ன சொன்னாங்கனு வந்து சொல்லு. எல்லாரும் அட்வான்ஸ் விஷஸ் பண்ணிட்டு இருக்காங்க. நான் நாளைக்கு தான் பண்ணுவேனாக்கும்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உங்க குழம்பு செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது..

கண்ணில் நீர் வந்துவிட்டது....நல்ல காரம்....:-) எனக்கு அப்படி சாப்பிட

பிடிக்கும்...

சூப்பர் சுவை...

நல்ல குறிப்பிற்கு நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

DEAR SISTER,
I GAVE 5 STARS TO UR RECIPE (AFTER COOKED ONLY). REALLY GOOD, MY HUSBAND LIKED VERY MUCH. AND TOLD VERY TASTY. ELLA PUGALUM UNGALUKKE. ROMBA NANDRI. NO BITTER TASTE. ONCE AGAIN THANK YOU SO MUCH.

HAI