சேனைக்கிழங்கு கட்லட் (கறி)

தேதி: October 26, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

சேனைக்கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கருவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 2 துண்டு
கசகசா - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

சேனைகிழங்கை சற்று பெரிய துண்டங்களாக நறுக்கி உப்பு, பாதி மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைவேக்காடாக வேக வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் நீளமாக நறுக்கி வைக்கவும்.

தேங்காய், பாதி சோம்பு, கசகசா சேர்த்து அரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும், பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு அரைவை சேர்த்து மீண்டும் வதக்கவும்.

நல்ல மணம் வந்தபிறகு வேகவைத்த சேனைக்கிழங்கை நீரை வடிக்கட்டி சேர்த்து இதனுடன் மீதி மஞ்சள்தூள், தேவையெனில் உப்பு சேர்த்து உடையாமல் கிளறி மூடி போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.

வெந்ததும் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து வாசனை வர பிரட்டி எடுத்து வைக்கவும்.

சுவையான சேனைக்கிழங்கு கட்லட் தயார்.


இந்த சுவையான ரெசிப்பி சமையல்கார அம்மாவிடம் கற்றது. பெயரும் அவர் வைத்ததுதான்!

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெயா,
நல்ல சுவையான குறிப்பு ஆனால் கட்லெட்ன்னு பெயர் பார்த்ததும் வேற மாதிரி கற்பனை பண்ணிட்டேன்
தொடர்ந்து குறிப்புகள் தாங்க வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

எனக்கும் இந்தப்பேர் போட கொஞ்சம் தயக்கமாதான் இருந்துச்சு ஆனா அவங்க ரொம்ப இஷ்டமா செஞ்சு கொடுப்பாங்கபா. எங்க வீட்டில எதாவது விஷேசம் விருந்துனா ஒரு வாரம் வந்து தங்கியிருந்து சமைச்சு தருவாங்க. சரி அவங்க வெச்சபேராச்சேன்னுதான் போட்டுட்டேன்;)

கண்டிப்பா பண்ணிப்பாருங்க நிஜமாவே சுவையா இருக்கும்;)

உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிபா;)

Don't Worry Be Happy.

ஜெயலக்ஷ்மி அவர்களே ,
உங்கள் சேனைக்கிழங்கு கட்லட் கறி நேற்று தான் செய்து பார்த்தேன் , மசாலா வாசனையுடன் மிகவும் நன்றாக இருந்தது .