முருங்கைக்காய் இன் சோய் மில்க்

தேதி: October 26, 2010

பரிமாறும் அளவு: 3அம்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கைக்காய் - 2
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 8
தக்காளி - 2
குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது
சோயா பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
புளிகரைசல் - 5 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய்,கடுகு,கருவேப்பிலை,சீரகம்


 

தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும்
காய், வெங்காயம்,தக்காளியை நறுக்கிவைத்துக் கொள்ளவும்.
புளிக்கரைசல்,தாளிக்கும் பொருட்கள் தவிர மீதம் உள்ளவற்றை அடி கனமான பாத்திரத்தில் போட்டு வேக விடவும்.
முருங்கைக்காய் நன்றாக வெந்தவுடன் சோயா பவுடரை நீரில் கரைத்து ஊற்றவும்.புளிக்கரைசலையும் ஊற்றவும்.
10 நிமிடம் கொதிக்க விட்டு,பின் தாளித்து மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான,எளிதான முருங்கைக்காய் இன் சோய் மில்க் ரெடி.
சூடான சாதத்துடன் பரிமாறவும்.இட்லி,தோசைக்கும் நன்றாக இருக்கும்.
புளி சேர்க்காமல் செய்தால் சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.


தேங்காய்க்கு பதில் சோயா மில்க் சேர்க்கப்பட்டுள்ளது.இதே செய்முறையில் கத்திரிக்காய்,கொத்தவரங்காய்,முள்ளங்கி,சுரைக்காய் ஆகியவற்றை பயன்படுத்தியும் செய்யலாம்.டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்