சென்னையை விட்டு பிரிந்து போகிறேன் விடை தாருங்கள்.

நான் வேலை பார்க்கும் இடத்தில் கம்பெனிக்கு ஏற்பட்ட பிரச்சனையால் நான் என் சொந்த ஊருக்கு போகிறேன்..இனி சென்னையில் எப்போதோ பெய்யும் மழைபோல் அறுசுவைக்கு வரலாம்..வர இயலாமலும் போகலாம்.

முதலில் இதற்கென்று ஒரு இழை உண்டாக்கி தெரியபடுத்த விருப்பமில்லை..ஆனால் அறுசுவையில் இருக்கும் எல்லா சகோதர சகோதரிகளின் ஐ டி எனக்கு தெரியாது..ஆகவே இதை தெரிவித்துவிட்டு கிளம்ப இந்த இழை அவசியமாக பட்டது.

இதை கவிதை வடிவில் தந்தால் சந்தோச படுவேன்..மேலும் இப்போதைக்கு இதுவே என் கடைசி கவிதையாக இருக்கலாம்...

இன்னோரு உதயத்திற்கு
இந்த சூரியனுக்கு சில மாதங்கள்
தேவைபடலாம்

இந்தநிலவை மேகம்
மறைத்ததால் காணாமல் போய்விட்டேன்
என்ற தகவல் வரலாம்

நட்சத்திரங்கள் வேண்டுமானால் உதிரலாம்

நானோ அறுசுவை வானத்தில்
நிலவாய் வலம் வந்தவன்

ஆகவே இது சில காலத்து
கிரகணம் எனக்கொள்ளுங்கள்.

உங்களைவிட்டு பிரிகிறேன் என
எனக்கு வருத்தம் இல்லை-ஏனெனில்

இரத்தத்திற்கு அடுதத்ததாக
இரண்டாவதாய் உங்கள் நினைவுகளை நான்
தேகத்தில் ஓட விட்டவன்

என் இல்லத்திற்கும் அறுசுவைக்கும் இடையேயான
தூரத்தை என்
நினைவுகளால் நான்
நிரப்பிவிட்டேன்

நிரப்பப்பட்டவை ஒரு பாலம்

பாலத்தின் வழியே அவ்வபோது
அறுசுவைக்கு வருவேன்

என் இல்லத்திற்கும் அறுசுவைக்கும்
இடையே உள்ள தூரம்
என் ஏமாற்றத்தின் நீளம்!

யாரெனும் கேட்டால்
போட்டிகள் இல்லாத
பேட்டிகள் எடுக்கப் படாத ஒரே கவிஞன்
இவனே என சொல்லுங்கள்.

நிலவை தலைக்கு கீழே தலையணையாக்கி
நித்திரை கொண்டவனும்
தன் கடைசி கவிதையில் முத்திரை பதித்தவனும்
இவனே என்று சொல்லுங்கள்.

இவனை திட்டியவர்களை கவிதைகளால்
மட்டுமே உமிழ்ந்தவன் என சொல்லுங்கள்.

கடைசி நேரத்தில் பிரியம் கூறும்
தூக்கு கைதிபோல்
தன்னை கவிஞன் என
பிரியும்போது
பிரகடன படுத்தியவன் என சொல்லுங்கள்.

சந்தையில் விலைக்கு வாங்குகிறவர்கள்
மத்தியில்
விலைகேட்டவர்களை விலைக்கு வாங்கியவன்
இவன் தான் என முரசு கொட்டுங்கள்.

கவிதைகளால் புகழ் சம்பாதித்தவர்களுக்கு
மத்தியில்நண்பர்களை
சம்பாதித்தவன் இன என சொல்லுங்கள்.

நிற்க.

இந்த அறுசுவை எனும் அரசவைக்கு
யாசகனாய் வந்து
புலவனாய் வெளியே போவது இவனே என சொல்லுங்கள்

கடைசியாய் ஒன்று

நான் சிகரத்தில் இருப்பதால்
என்னை ஏறி கீழே தள்ள
சிரமபட வேண்டாம் என
என் எதிரிகளுக்கு சொல்லிவிடுங்கள்

தலைக்குமேல் பறக்கும் விமானம்
பார்க்கமட்டும் தலை உயர்த்தும்
சில மனித தலைகளை
என் வளர்ச்சியின் உயரம் பார்க்க
தலை நிமிரவைப்பேன் எனும் நம்பிக்கையில்...

அன்பு சகோதரன் ஷேக்

நன்றி!

என்னக்கு கவிதை தெரியாது.போகிறேன்
என்று சொன்னவுடன்
கஷ்டமாக உள்ளது.இண்டர்நெட்டும் எடுத்து சென்று போங்கள்
ப்ளீஸ்.உங்கள் கவிதைகளெல்லாம்
சூப்பராக இருக்கும்.முதல் தடவையாக பேசுகிறேன்.

ஹசீன்

அறுசுவையில் ஒருதடவை எண்ட்ரி ஆச்சுன்னா பிரிவே கிடையாது சார்.
நீங்க எப்படியும் எங்க எல்லார்கூடவும் பேசிட்டுதான் இருப்பீங்க இருக்கணும்.
இந்த இடைவெளி தற்காலிகமானதுதான் சார்.

அன்பு ஷேக்,

உங்களுடைய மன வேதனை புரிகிறது. கோமு சொன்ன மாதிரி, இங்கே ஒரு தடவை அறுசுவை உறுப்பினர் ஆனதுக்கப்புறம், இதை விட்டு பிரியறது என்பது முடியாது.

நீங்கள் போகும் இடத்தில், உங்களுடைய புதிய தொழில், புதிய முயற்சிகளில் உங்கள் மனம் விரும்பும் வெற்றிகளை அடைய எங்கள் அனைவரது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

எதுவும் கவலைப்படாதீங்க. இன்னிக்கு உலகம் உங்கள் உள்ளங்கையில். இண்டர்னெட்டின் மூலம் அது உங்கள் விரல் நுனியில். அதனால் வேறு ஊருக்குப் போனாலும், கண்டிப்பாக அவ்வப்பொழுது எங்க எல்லார் கூடவும் அறுசுவை மூலமாக பேசுங்க.

உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் எங்களது வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஷேக்,
வெகு நாட்கள் ஆகிவிட்டது,உங்களுடன் பேசி.இந்த இழையை பார்த்ததும் மனதுக்கு கஷ்டமாகி விட்டது.சீதா அம்மா கூறியுள்ளது போல்,இன்டெர்னெட் எங்கும் உள்ளது.புதிய வேலை கிடைத்ததும்,மீண்டும் எங்களுக்கு வந்து சொல்லுங்கள்.அறுசுவையில் உங்களின் கதை,கவிதைப் பணி இனியும் தொடரட்டும்.அறுசுவையில் உங்களுக்கு என்று ஒரு இடம் உள்ளது.அதை ஏன் விட்டுப்போகிறீர்கள்?
உலகில் எந்த மூலையில் இருந்தாலும்,அறுசுவைக்கு வாங்க.சீக்கிரமே புதிய வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

ஏனிந்த வெறுமை?
எங்கு சென்றாலும்
ஏணிப் படிகள் உண்டு.
எண்ணங்கள் பறக்க,
ஏராளமான வழியுண்டு.
ஏக்கம் வேண்டாம்.
என் கவிதைகளுக்கு பதிவைக் காணோமே என்று பார்த்தேன்.
உலகம் உருண்டைதான் தம்பி.
இணையதளம் கிடைக்கட்டும் இனிதாய்.
அன்புடன்
அக்கா தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்கு அறுசுவையில் முதலில் அறிமுகமான நபரே நீங்கள்தான். கொஞ்சம் மூளையைக் கசக்குங்கள் பகுதி மூலமாதான் நான் மன்றத்துக்குள் உரையாட வந்தேன். உங்களிடம்தான் என் எண்ணங்களை தயங்காமல் கூறினேன். நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்று எதோ ஒரு வகை எண்ணம். அதிகமாக பேசியது கிடையாது என்றாலும் எனக்கு கஷ்டமாக இருக்கிறது. கதைகள் உங்களைப்பாத்துதான் நான் எழுத கற்றுக்கொண்டேன். கவிதை எனக்கு அவ்வளவாக தெரியாது, புரியாது என்பதே உத்தமம்.
வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் வாருங்கள்...

உங்கள் நலம் விரும்பி
ஜெயா....

Don't Worry Be Happy.

அன்பு சகோதரர் ஷேக், உங்களுடைய கவிதையும், பிரிவும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது. எங்கிருந்தாலும் நீங்கள் கண்டிப்பாக, தினமும் வர முடியாவிட்டாலும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பா அறுசுவைக்கு வரவேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சகோதரியின் வேண்டுகோளை தட்ட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.காலத்தால் அழிக்க முடியாத கவிதையால் காலடிச் சுவட்டை பதிய விட்டுச் செல்கிறீர்கள். நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் ஐடியை தரலாம். கண்டிப்பாக சாட்டில் பேசுவோம். தோழமை தொடரட்டும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அஸ்ஸலாமு அலைக்கும் ஷேக் அண்ணா...,
மிகவும் அதிர்ச்சியான தகவலை அதுவும் திடீர் என்று தெரிவிக்கின்றீர்கள்?
மனதிற்க்கு மிகவும் கஷ்ட்டமாக இருக்கின்றது.ஒரு நல்ல சகோதரராக இந்த அருசுவையில் எல்லோருடனும் வலம் வந்து கொண்டிருந்தீர்கள்.உங்கள் கவிதைகள்,கதைகள் எல்லாம் உங்கள் பெயரை இங்கு உச்சரித்துக் கொள்ளசெய்யும்.
எங்கு சென்றாலும் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.மீண்டும் வந்து இந்த அருசுவையை வலம் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் வி்டை பெறுகின்றேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இதற்கு பின்னூட்டம் தர விருப்பம் இல்லைதான்..ஏன்னென்றால் இதைகூட என்னை விளம்பரபடுத்தும் முயற்சி என யாரும் நினைக்கலாம்...ஆனால் என்னைபற்றிய பின்னூட்டத்திற்கு பதில் தருவது என் கடமை.
உங்கள் பெயர் எனக்கு தெரியவில்லை..இருந்தாலும் என் மீது அன்புகொண்டு நீங்கள் கூறிய வார்த்தைக்கு நன்றி சகோதரி.

என் ஊர் கிராமம்..அங்கே நெட் வசதி இல்லை..கையோடு நெட் கொண்டு செல்ல என்னிடம் லேப்டாப் இல்லை.இருந்தாலும் முயற்சி செய்கிறேன்..

உங்கள் அன்பிற்கு மறுபடியும் நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கோமு மேடம்..நீங்கள் சொன்னதன் சூத்திரம் எனக்கு விளங்குகிறது..ஆனால் அறுசுவையில் எத்தனையோபேர் முதலில் அறிமுகமாகி பின்பு காணாமல் போயிருக்கிறார்கள்..அந்த பயம்தான் எனக்கு..

உங்கள் கதைகளை தொடர்ந்து எழுதி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்