****** அரட்டை 61 ******

அன்புக் கோழிகளே, உங்கள் அரட்டையை இங்கே தொடங்கி சிறப்பித்து தருமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.அவரவர் வாழ்வில் நடந்த சுவாரசிய சம்பவங்களை இங்கே பங்கு போட்டுக் கொள்ளலாம். படிப்பவருக்கும் ஆர்வமாகவும், இன்ட்ரெஸ்டாகவும் இருக்கும். என்ன கோழிஸ், உங்க நினைவுகளில் டார்ட்டாய்ஸ் சுருளை பத்த வச்சிட்டீங்களா? அப்படியே ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி.........

ஹையா, நாதான் அரட்டை 61-ல முதல் பதிவா?!!!!!!! இப்பத்தான் டார்ட்டாய்ஸ் கொளுத்தி வச்சிருக்கேன். அது சுத்தி முடிந்தபிறகு வரேன். ஓ. கே. வா??

என்ன அரட்டைல யாரையும் காணவில்லை. எல்லாம் எங்க போனீங்க. ஒரே சைலன்ட்டா இருக்கு.

ஹாய் கல்ப்ஸ் எப்படி இருக்கீங்க மேடம்? ராகும் வர்ஷூ நலமா? ஸ்வாரஸ்யமான நிகழ்வுகளா தோ வந்துட்டேன் அதான் டைப் பண்ணிகிட்டு இருக்கேன் பதிவோட வாரேன்.
முகி நான் வந்துட்டேன். உங்கள் வாழ்வில் நடந்த ஏதாவது சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துக் கொங்களேன் நம்ம கல்ப்ஸ் சொன்ன மாதிரி

கல்பனா நேத்தியே நீங்க அர்த்தமுள்ள அரட்டையா பேசனும் சொன்னவுடனே டார்ட்டாய்ஸ் கொளுத்தி வைச்சுட்டேன். இன்னும் புகைஞ்சுக்கிட்டு இருக்கு.
அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்,
அது ஒரு அழகிய நில காலம்,
கனவினில் தினம் தினம் உலா போகும்,
நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததை,
அது ஒரு பொற்காலம். நிறைய சுவாரஸ்சியமோ நினைச்சுடக் கூடாது. சொல்றேன்.

இங்க ஒரே புகை மண்டலமா இருக்கு, யார் எங்க இருக்காங்க அப்படீங்கறதே தெரியலை ;-)

சீக்கிரம் வந்து சொல்லுங்கபா.... ....................;-)

Don't Worry Be Happy.

தோழி ......... jaya
உள்ளேன் அம்மா.......... ஹி ஹி ஹி கௌசி

ஜெய்,வினோ,யாழ்,முகி,கோமு எல்லாரும் இப்படி புகைய மட்டும் போட்டு விட்டா எப்படி? நல்லா கொழுந்துவிட்டு எரிஞ்சாதானே புகையாம இருக்கும்.வினோ, சும்மா இந்த சினிமா பாட்டெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக முடியாது. மேட்டருக்கு வாங்க. நீங்க எல்லாம் சொல்றத வச்சி நானும் சொல்லுவேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நானும் அரட்டை 61-ல கல்ந்துக்கலாம்னு எட்டிப்பாத்தா ஒரே புகை மண்டலமா
இருக்கேப்பா. ஆளாளுக்கு டார்ட்டாய்ஸ் கொளுத்தி வச்சிருக்காங்களே. இந்த மூட்டத்தில என்னப்பா சொல்லமுடியும்?

காலேஜ் இறுதி ஆண்டு படிக்கும் போது எல்லாரும் சேர்ந்து சினிமாக்கு போலாம்னு முடிவு பண்ணி கிளம்பி போனோம். வீட்ல இருந்து 45 நிமிடம் பயணம் தான் நாங்க பார்க்க போனது அதுவும் தலைவர் படத்துக்கு எப்படி கூட்டம் இருந்திருக்கும்னு யோசிச்சு பாருங்க சரியான கூட்டம், நல்லா ஜாலியா என்ஜாய் பண்ணி படம் பார்த்தோம். படம் முடிஞ்சு வெளியில வந்தோம் எங்கள்ள 4 பேர மட்டும் காணும். கூட்டத்துல அவங்க முன்னாடி போய்ட்டாங்க கூட்டமா இருக்கேனு நாங்க கொஞ்சம் நின்னு போலாம்னு நின்னுட்டோம் அவங்க போய்ட்டாங்க, தேடுறோம் தேடுறோம் ஒரு மணி நேரமா தேடுறோம் அங்க எங்கயுமே காணும். அவங்க என்ன நினைச்சுட்டாங்க நாங்க முன்னாடியே போய்ட்டோம்னு, சரினு அந்த நாலு ப்ரண்ட்ஸ் மட்டும் போய்ட்டாங்க. இதுல என்ன பெரிய கொடுமைனா 4 ப்ரண்ட்ஸ்ல ஒருத்தி வீட்டுல மட்டும் விடமாட்டேனு சொல்லிட்டாங்க நான் தான் ரொம்ப கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்கினேன் அதுவேற எனக்கு பயமா இருக்கு. இங்கயும் அவங்க இல்லை அவங்க போய் இருப்பாங்கனு நினைச்சு போகவும் முடியல. ஒன்னுமே புரியல. அப்பலாம் எல்லாரும்லாம் செல்லு வச்சுருக்க மாட்டாங்கல்ல, எங்க யார்கிட்டயும் செல் போன் கிடையாது போன் பண்ணி கேட்கலாம்னா. பசங்க மட்டும் தான் வச்சிருப்பாங்க சரினுட்டு என்னோட ப்ரண்ட்க்கு போன் பண்ணி அந்த பொண்ணு வீட்டுக்கு போய் பார்த்துவை நான் கொஞ்சம் நேரம் கழிச்சு போன் பண்றேனு சொல்லிட்டேன். அவ வீட்ல போய் பாக்கறதுலயும் ஒரு சிக்கல் அவங்க வீட்ல பசங்கலாம் போனா ரொம்ப சந்தேகப்படுவாங்க, சரினுட்டு என்னோட ப்ரண்ட்ட எங்ளோட படிக்கிற ஒரு பொண்ணோட பேரு சொல்லி அவ அண்ணன்னு சொல்லிட்டு போய் ஏதாவது ஒரு நோட்ஸ் வாங்குற மாதிரி அப்படியே பார்த்துட்டு வர சொல்லியாச்சு. அப்பறம் அவன் போய் பார்த்துட்டு வந்து அப்பறம் அவனுக்கு போன் பண்ணி கேட்டுட்டு அவங்க 4 பேரும் வீட்டுக்கு போய்ட்டங்கனும் தெரிஞ்சதும் தான் உயிரே வந்துச்சு. இத மறக்கவே முடியாது எப்போதுமே.

ஒவ்வொரு வருடமும் வரும் ஆக்ஸ்ட் 15 எல்லோரு தெரியும் அந்த பொன்னான நாள் சுகந்தர தினமும்னு. பரிசு தான் வாங்க முடியல டான்ஸ்லையாவது கலந்து கொள்ளலாமே கலந்துக்கிட்டேன். 8th படிக்கும்போது வாழ்க்கையில் முதல் முதலா ஸ்டேஜ் ஏறப்போறனு கொஞ்சம் பயம்தான். அந்த பாட்ட கேட்டாலே உண்மையாக தேசப்பக்தி உள்ள ஒவ்வொருவருக்கும் உடம்பு சிலித்து விடும் (ஒவரா இருக்கோ). அது என்ன பாட்டு கேட்குறீங்க தானே ம். நம்ம அர்ஜீன் சார் நடிச்சு இருப்பாரு படம் ஜெய்ஹிந்த். பாட்டு தாயின் மணிக்கொடி, அந்த பாட்டு ஏற்ற அழகான ஸ்டெப்ஸ் சொல்லி கொடுத்தாங்க என் க்ளாஸ்மெட்டோட அக்கா. நல்ல ரிகர்செல் பார்த்துட்டு, ஆக்ஸ்ட் 15 முதல் நாள் ஹெட்மாஸ்டர் கிட்ட வேற ஆடி காண்ப்பிச்சுட்டு நாளைக்கு ஸ்கூல் சிக்கிரம் வரனும் சொல்லிட்டு கிளாம்பியாச்சு. மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு ஸ்கூல் வந்தா 7 மணிக்கே கொடியே ஏத்தி முடிஞ்சுட்டு ஹெட்மாஸ்டர் அம்மா இறந்துட்டாங்க சொல்லி எல்லா ஃப்ரோகிராம்மையும் கேன்சல் பண்ணிட்டு மறுநாள் ஒத்தி வைச்சுட்டாங்க. நம்ம ஆட போய் தான் ஹெட்மாஸ்டர் அம்மா இறந்துட்டாங்களோ நினைக்க தோனிடுச்சு. மறுநாள் அந்த சுகந்திரத்தின ப்ரோகிராம் எல்லாத்தையும் மதியானம் 3 மணிக்கு வச்சாங்க. எங்க சுற்று வரும்போது சூப்பரா டான்ஸ் ஆடி முடிச்சாச்சு. ப்ரெண்ட்ஸ் எல்லோரும் நல்ல ஆடினீங்கனு பாராட்டுனாங்க. இந்த ஸ்டேஜ்விட்டு கீழ இறங்கினதும் பசங்கக்கிட்ட வந்த கமெண்ட்ஸ்தான் என்னாட மச்சான் மேடைல நாலு அனுக்குண்டும், இரண்டு ஊசி வெடியும் ஆடிட்டு வருது. அவ்வளவுதான் அதுக்குப்புறம் டான்ஸ்க்காக எக்காரண கொண்டும் ஸ்டேஜ் பக்கம் காலைவைக்க கூடாது முடிவு பண்ணிட்டேன். டான்ஸ் வீட்டுல சொன்னாலே இந்த வெடி மேட்டரா சொல்லியே ஆஃப் பண்ணிடறாங்க. ம் டார்ட்டாய்ஸ் எரிஞ்சு முடிஞ்சுடுப்பா.

மேலும் சில பதிவுகள்