சொல்ல விரும்பினால் இங்க வாங்க !!!

இது வழக்கமான சொல்ல விரும்பினேன் இல்லை... இது எல்லாரும் வந்து சொல்ல வேண்டிய பகுதி. :)

சில நாள் முன் விஜய் டிவி'யில் ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது. அதில் யாருக்கு சாரி சொல்லணும், யாருக்கு தேங்ஸ் சொல்லணும்'னு பிரபலத்திடம் கேட்டாங்க. எனக்கு தோணுச்சு... இதை ஏன் நம்ம தோழிகளிடம் கேட்டு தெரிஞ்சுக்க கூடாதுன்னு... என்னா எனக்கு தெரிஞ்ச பிரபலம் நீங்க தான். உங்க குறிப்புகள், கதைகள், கவிதைகள் எல்லாம் உலகமே பார்க்குது. அறுசுவையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் சாதனை பெண் தான்.

வாங்க... எல்லாரும் வாங்க... நீங்க அறுசுவையில் யாருக்கும் நன்றி சொல்ல விரும்பறீங்க??? அறுசுவையில் யாருக்கு சாரி சொல்ல விரும்பறீங்க???

யாராவது உங்களை ரொம்ப சந்தோஷப்பட வெச்சாங்களா??? நன்றி சொல்லுங்க.

யாரையாவது தெரிஞ்சோ தெரியாமலோ காயப்படுத்திட்டீங்களா??? சாரி சொல்லுங்க.

அவர் நிச்சயம் அறுசுவையை சேர்ந்தவராக இருக்க வேண்டும். காரணம் அவசியம். மனசு விட்டு தயங்காம சொல்லுங்க. :)

எல்லாரையும் சொல்ல சொல்லிட்டு நான் சொல்லாம இருந்தா சரியா??? அதனால் நானே முதல்ல சொல்றேன்.

முதல்ல நன்றி!!! பாபு அண்ணா'கு. காரணம்... இதுவரைக்கும் அவருக்கு நான் தொந்தரவு தந்த மாதிரி அறுசுவையில் யாரும் தந்திருக்க மாட்டாங்க... ஆனாலும் இப்பவும் அன்பாய் பேசுவார். பாவமாக இருக்கும் எனக்கே சில நேரம். இன்னொரு காரணம்... ஒரு வருடம் என்னுடைய பிறந்த நாளை என் கணவரே மறந்துட்டார் (ஆனால் அன்று மாலை அவருக்கு நினைவு வந்து அவர் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி, என்னை வெளியே அழைத்து சென்று பெரிய ட்ரீட் கொடுத்தார் என்பது வேறு விஷயம்)... அப்போ நான் அறுசுவைக்கு புதிது. ஆனால் அறுசுவை தோழிகள் எல்லாரும் எனக்கு வாழ்த்து சொல்லி புது இழை போட்டிருந்தாங்க. பார்த்த நிமிஷம் மனசுல சந்தோஷம், கண்ணில் நீர் வந்தது.... நம்மையும் ஒரு உறவு போல் நினைத்து வாழ்த்து சொல்ல இத்தனை தோழிகளா என்று அத்தனை மகிழ்ச்சி. வாழ்வில் மறக்க முடியாத அந்த வருட பிறந்த நாளை எனக்கு தந்த அறுசுவைக்கும், அதை இத்தனை சிறப்பாக நடத்தும் பாபு அண்ணா'கும் நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடாகாது.

மன்னிப்பு... யாரிடம்?? இலா'விடம் சொல்ல வேண்டும். காரணம்... அவருக்கு தெரியுமோ இல்லையோ... முதல் குழந்தை பிறந்த 6 மாதத்தில் இரண்டாவது குழந்தை நின்று விட்டதால் சங்கட பட்டுக்கொண்டு நான் யாரிடமும் சொல்லவில்லை. இலா என்னிடம் போனில் பேசும் பழக்கம் உள்ளவர். நான் அவரிடமும் சொல்லவில்லை. குழந்தை பிறந்த செய்தி அறுசுவையில் சொன்ன போது அவர் தன்னிடம் சொல்லாமல் விட்டதுக்கு வருந்தி இருப்பார். அதன் பின் அவர் என்னிடம் போனில் பேசியதே இல்லை. இன்றும் நான் வருந்துகிறேன்... இலா மெயிலில் சொல்லி இருப்பேன், இருந்தாலும் இங்கு சொல்கிறேன்... தெரிந்தோ தெரியாமலோ உங்க மனசை காயப்படுத்திருந்தா மன்னிச்சுடுங்க இந்த தோழியை. சொல்லாமல் விட்டதுக்கு வேறு காரணம் இல்லை, சங்கடமாக உணர்ந்ததே காரணம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா ரொம்ப ரொம்ப அருமையான இளை. நான் நல்லா யோசுச்சுட்டு வந்து , மறுபடியும் பதவு போடறேன் !!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சூப்பர் இழை, நான் கூட ஒரு முறை அந்த ப்ரோகிரேம் பார்க்கும் போது, அட இதை அறுசுவையில் கேட்டால் என்ன என்று தோன்றி இருக்கு, ஆனா இழை தொடங்கலை, மறந்திட்டேன். இன்னிக்கு உங்க இழை பார்த்ததும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது. ரொம்ப நல்ல இழை வனி. சீக்கிரமே யோசித்து வந்து யாருன்னு சொல்றேன்.வாழ்த்துக்கள் :))

அன்புடன்
பவித்ரா

ஹாய் வனிதா madam. நன்றியும் மன்னிப்பும் சொல்லும் அளவிற்கு அருட்சுவை.காமில் யாருமில்லை நான் இதில் இணைந்து ஒரு வாரம்தான் ஆகின்றது . சமையல் குறிப்புகள் தரும் சினேகிதிகளுக்கும்,கைவினைப்பொருட்கள் சொல்லித்தரும் தோழிகளுக்கும் அருட்சுவை.காமின் அனைதுப் பதிவாளர்களுக்கும் எனது உளம்கனிந்த நன்றி.

நன்றியுடன் ஷாஹிதா

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

சுகந்தி & பவி... மிக்க நன்றி. இரண்டு பேரும் என்ன சொல்ல போறீங்கன்னு படிக்க நான் ஆவளோடு காத்திருக்கேன். வாங்கோ... நல்லா யோசிச்சுட்டு வாங்கோ. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஷாஹிதா.... முதல்ல புது வரவான உங்களை வரவேர்க்கிறேன். சீக்கிரமே உங்களுக்கு அறுசுவை தோழிகள் உறவுகள் ஆயிடுவாங்க.... அப்ப வந்து சொல்லுங்க. :) அறுசுவை உங்களுக்கு பிடிக்கும்'ன்றதுக்கு நான் கேரன்டி.... இல்ல... நாங்க கேரன்டி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா madam அருசுவையும் பிடிக்கும் மன்றத்தில் நடக்கும் சூடான விவாதங்களும் பிடிக்கும். கேரன்டி கொடுத்தர்க்கு நன்றி

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

எங்கப்பா தோழிகள் எல்லாம்... தோழர்கள், தோழிகள் எல்லாம் வாங்க இந்த பக்கம்... யாருக்கும் யாரிடமும் சொல்ல ஏதும் இல்லையா???!!! :((

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா நல்ல இழை.அதனால உங்களுக்கு இப்போ ஒரு நன்றிய பிடிங்கோ...

நான் அறுசுவைல நன்றி சொல்ல ஆசப்படுறது ஜலீலா மேடம்க்குதான். ஏன்னா நான் அறுசுவைல சேர்ந்ததுலேருந்து அவங்க குறிப்புகள்தான் நிறைய செய்து நல்லா சமைக்கவும் கத்துகிட்டேன்,சமைத்து குடுத்து நிறைய பேரோட பாரட்டையும் வாங்கிருக்கேன். அதானால என் நன்றி ஜலீலா மேடம்க்குதான்....அவங்க குறிப்புகள்ல பதிவு போட்டுருக்கேன் ஆனாலும் இங்க சொல்ல ஆசப்படுறேன்

ஜலீலா மேடம் ரொம்ப ரொம்ப நன்றி.

சாரி சொல்ற அளவுக்கு யாரையும் காயப்படுத்தி பேசினது இல்லைனு நினைக்கிறேன்..அப்படி எனக்கு தெரியாம ஏதாவது நடந்திருந்தா தாராளமா இங்க சொல்லுங்க..... யாராக இருந்தாலும் என்னை மன்னிச்சிடுங்கோஓஓஓஓ...

Kalai

//எனக்கு தெரிஞ்ச பிரபலம் நீங்க தான். // ஹை! நல்லா இருக்கே வசனம். ;)) //உங்க குறிப்புகள், கதைகள் ( -கவிதைகள் + அரட்டைகள்) எல்லாம் உலகமே பார்க்குது.// ம்.
//அறுசுவையில் யாருக்கு நன்றி சொல்ல விரும்பறீங்க?// என் ஆக்கங்களை அழகாக எடிட் செய்து வெளியிடும் அட்மின் & டீமுக்கும், கருத்துத் தெரிவித்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். அறுசுவைக்கு வெளியேயும் நட்பினைத் தொடரும் என் அன்புத் தோழிகளுக்கும் என் நன்றிகள்.

//யாராவது உங்களை ரொம்ப சந்தோஷப்பட வெச்சாங்களா???// ம் ம் ம் ;))) ஸ்டார்லாம் போட்டு முடியெல்லாம் அனுப்பி வைச்சாங்களே. ;) (பேர் சொல்லட்டா வனி!) அவங்களுக்கு நன்றி. ;))))

//தெரிஞ்சோ// தெரிஞ்சா முடிஞ்சவரை உடனேயே சாரி சொல்லி இருப்பேன். //தெரியாமலோ காயப்படுத்திட்டீங்களா?// இருக்கலாம். அசந்தர்ப்பமா எங்கயாச்சும் காமடி பண்ணி யாரையாவது காயப்படுத்தி இருப்பேனோ என்று தோணும். சான்ஸ் இருக்கு. (அப்படி யாராச்சும் நினைச்சுட்டு இருந்தா இங்க வந்து ஒரு திட்டு திட்டிட்டுப் போங்க.) அவங்கள்ட்ட மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்