முருங்கைக்காய் பொரியல்

தேதி: October 28, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

முருங்கைக்காய் - 3
வெங்காயம் - பாதி (அ) சின்ன வெங்காயம் - 6
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கர்ண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கடலை பருப்பு - கால் தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் சாம்பார் தூள் சேர்த்து பிரட்டவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்து தூள் வாசம் போனதும் முருங்கைக்காய், உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
தண்ணீர் இல்லாமல் காய் நன்றாக வெந்து வரும் போது எடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிதா,
முருங்கைக்காய் பொரியல்,அழகா செய்து இருக்கீங்க.நானும் இப்படி தான் செய்வேன்.ஆனால் சின்ன வெங்காயம் சேர்த்தது இல்லை.சின்ன வெங்காயம் சேர்த்து செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி :)

ஹர்ஷா... மிக்க நன்றி. சின்ன வெங்காயம் தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை, பெரிய வெங்காயமே போதும். நான் அதிகம் சின்ன வெங்காயம் பயன்படுத்துவேன், அதான் குறிப்புகளிலும் அப்படியே இருக்கு. செய்து பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் இப்படி தான் செய்வேன், ஆனா முருங்கைக்காயை தனியா ஒரு விசிலோ இல்லைன்னா தண்ணியில் போட்டு வேகவிட்டு பிறகு நீங்க சொன்ன செய்முறைதான்:)) சாம்பார் பொடிக்கு பதில் தனியாத்தூள் அதுதான் வித்தியாசம், நல்ல சுவையா இருக்கும், எனக்கு ரொம்ப பிடித்த டிஷ்:)) வாழ்த்துக்கள்:))

அன்புடன்
பவித்ரா

பவி... மிக்க நன்றி. நீங்க சொன்ன முறையும் நான் முயற்சி செய்கிறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா