BA Tamil, B Lit.

கரஸ்பான்டட் கோர்ஸ்ல BA Tamil, B Lit. படிக்கனும்னுஆசை இதில் எது சிறந்தது B Lit படிசசா பிஎட் படிக்கனுமா சொல்லுங்க

அன்புடன் ஷாஹிதா

ஹாய் ஷாஹிதா
முதல்லா அறுசுவைக்கு உங்களை வரவேற்கிறேன். நல்லா இருக்கிங்களா? உங்க பதிவா பாத்தயுடனே என் தோழி ரஞ்சனி பாரதிதாசன் பல்கலைகழத்தில் வேலைபாக்கிறா அவகிட்ட கேட்டுடேன் பா. அவ சொன்னா B Lit படிக்குரது நல்லது.ஆனா பிஎட்- டும் படிக்கனும்.அப்பதான் value அப்படி னு சொன்னா. இன்னும் விவரம் வேணும் னா சொல்லுங்க என் friend கிட்ட கேட்டு சொல்லுறேன்.

உன்னை போல பிறரையும் நேசி.

ஓபன் யுனிவர்சிடியில நேரே எம்.ஏ தமிழே படிக்கலாம்ன்னு நினைக்கிறேன்.
உங்களுக்கு வேலைக்குப் போகிற எண்ணம் இருக்கா. சும்மா ஆசைக்கு படிக்கறதானா எம்.ஏ படிக்கலாம். நான்கூட அப்படித்தான் நேரே எம்.ஏ தமிழ் படித்தேன்.
சற்று விவரமாகக் கேட்டால் பதில் கொடுக்க ஏதுவாக இருக்கும்.
அன்புடன்
ஜெமாமி

எனக்காக தகவல் சேர்த்தமைக்கு நன்றி தேவி. பிஎட் ரெகுலர் கால்லேஜ்லதான் படிக்கமுடியுமா? ,CMLT(CLINICAL IN MEDICAL LABOURATORY) படிச்ச பிற்கு என்ன மேற்படிப்பு படிக்கலாம்.

அதுவும் கரஸ்லதான் படிக்கனும் சொல்லமுடியுமaa?

என்றும் அன்புடன
ஷாஹிதா

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

நான் உங்களிடம் பர்ஸ்ட்டே கேக்கலாம் என்று இருந்தேன். நான் எம்.எ தமிழ் படிக்க முடியுமா. கொஞ்சம் அதை பற்றி விவரமாக சொல்லுங்க.

அன்புடன்
மகேஸ்வரி

வேலைக்கு போகின்ற் ஐடியாலதான் கேட்டேன். ஜெயந்தி மேடம். எனக்கு தமிழ் ஆசிரியை ஆகனும்னு ஆசை.

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

தோழி அப்படியெல்லாம் இல்ல பா. க்கரஸ் -லயும் பண்ணலாம்.sorryஷாஹிதா மெடிக்கல் பத்தி எனக்கு அவள வா தெரியாது பா.

உன்னை போல பிறரையும் நேசி.

ஷாஹிதா. நீங்க தாரளமா படிக்கலாம். இப்போ தமிழ், ஆங்கிலம், கணிதத்துக்கு தான் தேவை அதிகமா இருக்கிறது. ஆனால் தேவி சொன்னது போல வெறும் B.A மட்டும் வேலைக்கு செல்வதற்கு பத்தாது. நீங்க கூடவே B.Ed ம் படிக்க வேண்டும் ஷாஹிதா. B.Ed correspondance இல்லை என்றே நினைக்கிறேன். சரியா தெரியலபா கேட்டு சொல்றேன். all the best.

மகேஸ்வரி கண்டிப்பா எம்.எ தமிழ் படிக்கலாம்.

உன்னை போல பிறரையும் நேசி.

//பிஎட் ரெகுலர் கால்லேஜ்லதான் படிக்கமுடியுமா?//
கரஸ்லையும் பன்ணலாம். ஆனால் காலம் அதிகமாகும். இப்போது பி.எட்க்கு 2 வருடங்கள் படிக்கவேண்டும். இதுவே கரஸில் என்றால் 4 வருடங்கள் ஆகும் என என் தோழி எனக்கு சொன்னார்.

தொலைதூரக்கல்வி நிலையத்தில் படிப்பது தான் சிறந்தது. ஓபன் யுனிவர்சிடி வேண்டாம் என்பது என் அபிப்ராயம்(சமீபத்தில் ஓபன் யுனிவர்சிட்டில்யில் படித்து நேரடியாக வக்கீல் ஆனவர்களின் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என உயர்நீதிமன்றம் சொல்லியிருந்ததால்).

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அப்படியா ரொம்ப,ரொம்ப சந்தோஷம்பா தேவி மீண்டும் நன்றி.

முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்

மேலும் சில பதிவுகள்