சோயா வெஜ் குருமா

தேதி: October 31, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சோயா பீன்ஸ் – 1 கப்
பீன்ஸ் – 5
கேரட் – 1
உருளைக்கிழங்கு – 1
பச்சை பட்டாணி- ¼ கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மல்லித்தூள் – 1 ½ டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு – 4
இஞ்சி – 1 பெரிய துண்டு
தேங்காய் – 2 கீற்று
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
லவங்கம் -2
ஏலக்காய் - 3
கசகசா – 1 டீஸ்பூன்
வெள்ளை எள் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லைதழை - சிறிது
ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு எண்ணெய் - 1 டீஸ்பூன்


 

முதல் நாள் இரவே ஊறவைத்த சோயாபீன்சை குக்கரில் 3 விசில் விட்டு வேகவைக்கவும்.

கசகசா, வெள்ளை எள், ஏலக்காயை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.

இதனுடன் இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம் சேர்த்து மைய அரைக்கவும்.

தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும்.

தேங்காய், சோம்பு சேர்த்து தனியாக அரைத்து வைக்கவும்.

காய்களை நீளவாக்கில் அரிந்து வைக்கவும். பீன்சை ஒரு இன்ச் நீளத்துக்கு அரிந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம்,வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து மீண்டும் வதக்கவும்.

நன்கு வதங்கி வாசனை வந்தபின் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளைப்போட்டு கிளறவும்.

அரைத்த தக்காளி கலவையை இதனுடன் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி பச்சை வாசனை போனதும் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும்.

10 நிமிடம் கழித்து காய் வெந்தவுடன், தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த விழுதுடன் மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி போட்டு வைக்கவும்.

2 நிமிடம் கழித்து கொத்துமல்லி தழை போட்டு இறக்கவும்.

சுவையான சோயா வெஜ் குருமா தயார்


ஹெல்த்தியான பேலன்சுடு குருமா இது. சோயாபின்ஸ் பிடிக்காதவர்களும் விரும்பி உண்பர். ( சோயா வேகவைத்த பிறகும் கிரன்சியாகதான் இருக்கும் )

மேலும் சில குறிப்புகள்