குழந்தைக்கு பால் தருவதில் பிரச்சனை

எனக்கு குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆகின்றது. குழந்தை இன் ஈறுகள் மிகவும் ஸ்ட்ரோங் அக இருக்கிறது. அதனால் பால் கொடுக்கும் போது ரொம்பவும் வலிக்கின்றது.அவன் கடித்து புண்ணும் ஆகி விட்டது. மருத்துவர் ஆலோசனை படி ointment,antibiotics முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஒரு பலனும் இல்லை. ஒரு ஒரு முறையும் பால் கொடுக்கும் போதும் உயிர் போவது போல் வலிக்கின்றது.இதற்கு ஏதேனும் தீர்வு இருந்தால் தயவு செய்து கூறுங்கள்.

எல்லாரும் 'கோவை'லயே இருக்காம இங்கயும் வந்து உதவி செய்யுங்க.

‍- இமா க்றிஸ்

எனக்கும் இதே பிரச்சனைதான் இருந்தது. டாக்டர் கொடுத்த ஆயில் மெண்ட் போட்டேன். வலி தெரியாது. தொடர்ந்து பால் கொடுக்கலாம். குழந்தை பால் குடிக்க குடிக்க நாளடைவில் அந்த இடம் திக்காகி மறத்து போயிடும். என் குழந்தைக்கு இப்ப ஒரு வயது இன்னும் நான் பால் கொடுத்துட்டுதான் இருக்கேன். NIPCARE OILMENT தான் நான் உபயோகித்தேன். வேறு எதாவது சந்தேகம்னாலும் கேளுங்கபா;)

Don't Worry Be Happy.

சகோதரிக்கு...,
தங்கள் குழந்தை பிறந்து 15 நாட்களே ஆவதால் தாய்பால்தான் முக்கியம்.
இருப்பினும் உங்களின் வலி பிரச்சனைக்கு ஒரு யோசனை தோன்றுகின்றது.
நீங்கள் சென்னையில் இருப்பவராக இருந்தால்,ஏதேனும் பேபி ஷாப்பில் தாய் பாலை பம்ப் செய்யும் கருவி பாட்டிலுடன் விற்க்கும்.அதை வாங்கி அதன் செய்முறையை படித்து அதன் படி தங்களுடைய பாலை எடுத்து பாட்டிலில் குழந்தைக்கு கொடுக்கலாம்.உங்களுக்கும் புண்ணு ஆறுவதற்க்கு வழி கிடைக்கும்.குழந்தைக்கும் தாய் பால் கொடுத்தாகிவிடும்.
இப்படி எடுத்த பால் ஏழு மணி நேரம் வரை கெடாமல் நிச்சயம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறி கேட்டிருக்கின்றேன்.இதுவே இப்போதைக்கு எனக்கு தெரிந்த வழி.வேறு ஏதேனும் தோன்றினால் மீண்டும் வந்து சொல்கிறேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

just apply breastmilk after each feed and drink more fruit juices if u do this same day u will be alright. select the fruits which has no heat . drink orange and lemon juice

God is good

sucking the milk is not easy for everyone i mean with the sucker it pains too

God is good

மேலும் சில பதிவுகள்