******தீபாவளி ஸ்நானப் பாடல்******

தீபாவளியன்று குழந்தைகளை சுவாமி முன் அமர்த்தி,குங்குமமிட்டு,ஆரத்தி எடுத்துப் பின் பாட வேண்டும்........

ராகம்-ஆனந்த பைரவி
தாளம்-ஆதி

பல்லவி-மங்கள ஸ்நானம் செய்வித்தார்
மங்கையர் எல்லாம் கூடி மகிழ்ந்து(மங்கள)

அனுபல்லவி-சிங்காரப் பலகைதன்னில்
ஸ்ரீஹரிதனை வைத்து
தங்கக் கிண்ணியில் எண்ணெய் எடுத்து,
தலையில் வைத்துத் தேய்த்து தேய்த்து(மங்கள)

சரணம்- 1 ஓடிப்போகும் கண்ணனை நிறுத்தி
ஒரு குழல்தனை கைகளில் தந்து
வேடிக்கைகள் பலவும் காட்டி
வேணுகானம் செய்வாய் என்று(மங்கள)

சரணம்- 2 பன்ணீராலே குளிப்பாட்டி
பரிமளகந்தம் தனைப்பூசி
வெந்நீராலே நீராட்டி
வேகமாய்ப் பட்டினால்
உடம்பு துடைத்து.....(மங்கள)

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...........

கல்பனா ஒருவழியாக நான் லட்டு செய்துவிட்டேன்.நாளை ஊருக்குப் போகிறேன் வர ஒருவாரம் ஆகும். அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்தை என் சார்பாக நீங்கள் சொல்லிவிடுங்கள்............

தீபாவளி வாழ்த்துக்கள்.........

என்னப்பா இது இப்படி பாடல்பாடி ஸ்நானம் பண்ணி யாரும் தீபாவளியை கொண்டாடுவது இல்லையா??யாரும் இதைப் பார்க்கவே இல்லையா:(( இந்த தீபாவளிக்காவது பாருங்கப்பா.....

பாட்டு சூப்பரா இருக்கு ரேணுகா.....ஆனால் இதையெல்லாம் பாட யாருக்கும் நேரம் இருக்குமானு தெரியல...குழந்தைகளை டீபாவளி அன்னிக்கு காலைல எழுப்பற்தே இப்பல்லாம் பெரிய வேலையா இருக்குப்பா!!!!!.... உன் பாட்டை நான் எழுதி வெச்சுனுட்டேன்...நல்லா இருக்கு...

வணக்கம் ராதா,
போன தீபாவளிக்கு பதிவிட்டது,இந்த தீபாவளிக்கு தான் பார்த்திருக்கீங்க....:)நீங்க சொல்றதும் சரிதான், பிள்ளைகளை எழுப்புவது எங்கே ஒருநாள் விடுப்பில் நாமே அசதியில் இருப்போம்....:))
இம்முறாஇ நானும் முயற்சித்து பார்க்கிறேன்.......
சரி உங்களைப்பற்றி சொல்லுங்களேன். பல புத்தகங்களில் எழுதுவதாக கூறியுள்ளீர்கள்,பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?நேரம் எப்படி பிரித்துக்கொள்கிறீர்கள்?
எனக்கும் அனைத்தையும் கற்றுக்கவும்,கற்றுக்கொடுக்கவும் விருப்பம்......எனக்கு முதல் மகன் 3வயது இப்போ 5மாதம் கருவுற்றுள்ளேன்.....எப்படி நேரம்பிரித்து செயல்படுவது....?படிக்கும்போது நமதுவேலை தவிர ஒன்றிலும் அக்கரை காட்ட வேண்டியில்லை.அதனால் கவனம் சிதறலை.ஆனால் இப்போது அப்படி இல்லை,நமது கவனத்தை பலதும் பிரித்து கொள்கிண்றன கட்டாயமாக.......கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்......:))

super paatu..appadiyae unga kuralil indha paattai kettal sugama irukkum..kekka mudiyalayennu varuthama irukku

இதுவும் கடந்துப் போகும்.

என்னைப் பற்றி தெரிந்து கொள்ளும் உங்கள் ஆவலுக்கு நன்றி ரேணுகா...எனக்கு 4 குழந்தைகள்..3 பேருக்கு திருமணமாகிவிட்டது...கடைக்குட்டி பிள்ளைக்கு பார்த்துக் கொண்டிருக்கிறேன்....நான் கடந்த 30 வருடங்களாக எல்லா தமிழ் வார, மாத இதழ்களிலும் எழுதி வருகிறேன்....குழந்தைகள் சின்னப் பிள்ளைகளாக இருக்கும்போதும், பள்ளி சென்ற போதும் வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, கிடைத்த நேரத்தில் எல்லாம் எழுதுவேன்....என் குழந்தைகளையும் எல்லா போட்டிகளுக்கும் தயார் செய்து விடுவேன்...அவர்களும் நிறைய பரிசுகள் வங்கியிருக்கிறார்கள்...நீங்கள் ஈரோடுதானே?அங்குள்ள பாரதி வித்யா பவன் பள்ளியில் என் மூத்த மகன் +2வில் மாநிலத்தில் 5ஆமிடமும், அடுத்த மகன் மாநில முதலாவதாகவும் வந்தார்கள்...இப்பொழுதும் எத்தனை வேலைகள் இருந்தாலும் எனக்கென்று சில மணிகளை நான் எடுத்துக் கொண்டு விடுவேன்...சரி...உங்கள் மகன் பள்ளி செல்கிறானா?அடுத்து பெண் குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்......உங்களுடைய பட்டி மன்ற வாதங்கள், மற்ற பதிவுகளையும் நான் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்....குழந்தைக்கு செலவிட்டது போக(வயிற்றுக் குட்டி மட்டும் சும்மாவா?)மீதி நேரத்தில் தாங்கள் இத்தனை ஆர்வமாக அறுசுவையில் பங்கு கொள்வதே பாராட்டப் பட வேண்டிய விஷயம்தானே? வாழ்த்துக்கள் ரேணுகா...

காலை வணக்கம் ராதாம்மா......

நீங்க ரொம்ப சீனியர் அதனால் உங்களை ராதாம்மா என்றே அழைக்கிறேனே.....:)))
உங்களின் பணிக்கு வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லைன்னாலும் பணிதொடர வாழ்த்துக்கள் சொல்கிறேன்.....எனக்கு முதல் மகன் கடந்த6உடன் மூன்றுவயது நிறைவடைந்தது.இப்ப இங்கே(ஊட்டியில் சென்ரல் ஸ்கூலில் பிரிகேஜி சேர்ந்து போய்ட்டு இருக்கான். என்னவர் ஊர்தான் ஈரோடு, ஆனால் எனக்கும் பி.வி.பி-ல் அனுபவம் உள்லது நான் 6படிக்கும்போது(கவர்மெண்ட் பள்ளிதா)அதில் விவேகானந்தரின் படம் வரைந்து ஒரு போட்டி வைத்தார்கள் பள்ளியளவில் அனைத்து மாணவிகளிலும் முதலாவதாக வந்து பி.வி.பி செல்ல வாய்ப்பு கிடைத்தது.......அங்கு சென்று வரைந்து இரண்டாமிடம் கிடைத்தது....விவேகானந்தரின் புத்தகங்கள் மூன்று அவர் கையெழுத்திட்டது ஒரு சான்றிதழ் வாங்கினேன்.....பிக ஆனந்தமாக இருந்தது.நினைக்க வைத்த உங்களுக்கு நன்றீகள்.....

பள்ளியில் படிக்கும் போது நன்கூட உங்களை போலதான் பாடல்,ஓவியம்,மாறூவேடம்,கபடி,கோக்கோ,கவிதை,பேச்சு இப்படி ஒன்றுவிடாமல் அனைத்து போட்டிகளிலும் கலந்துப்பேன்......பரிசு அடுத்தது ஆனால் பரிசும் வாங்கிடுவேன்....:)
தினத்தந்தி, ராணி போன்றவற்றில் எனது கவிதைகள் பல வெளியாகி உள்ளன....
திருமணம் முன்பு கோபிசெட்டிபாளையத்தில்"தமிழ் கலை இலக்கிய மன்றத்தில்" இருந்தேன்......அங்கு பல மேடை பேச்சுகள் கொடுத்துள்ளேன்,பொங்களன்று கவிதைப்போட்டியில் இரண்டாமிடம் வாங்கினேன்,கோவை மருதாச்சல அடிகளார் கொடுத்தார் சான்றிதழும்,கேடையமும்,பின் அவர் முன்னிலையில் அடுத்த மேடையில் வரவேற்புரை செய்தேன்.......(ஒற்றைப்பெண்ணாக மேடையில்)அப்போது ஆசிரியையாகவும் இருந்தேன்... நான் பேசியதிலிருந்து பலர் மேற்கோள்காட்டி பேசியது எனக்கு மிக சந்தோஷமாக இருந்ததும்மா.......

இன்னும் திறமைகளை வளர்க்க விருப்பம் உள்லது வயதும் உள்ளது கண்டிப்பா செய்வேன் உங்களின் ஆசிகளுடன்.கிடைக்குமல்லவா.....?:))
அனைத்தையும் நினைவில் கொண்டுவந்ததற்கு நன்றிகள்ம்மா.......

ரேணுகா...உங்களிடம் நிறைய திறமைகள் இருக்கிறது...வாழ்த்துக்கள்...இன்னும் மெருகேற்றிக் கொள்ளுங்கள்...உங்களின் இந்தத் திறமைகள் உங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க உதவியாக இருக்கும்...என்னுடைய ஆசிகள் எப்பவும் உங்களுக்கு உண்டு...

மேலும் சில பதிவுகள்